Friday 2 May 2014

தெய்வம் அம்மா.

தெய்வமென்று  சொன்னாலென்ன?

செய்யுந்துணை என்றுமே
மெய்கருணை கொண்டுமே-எம்மை
உய்விக்க நேர்ந்தாரை
உள்ளத்தால் அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!

கடமையெனக் காப்பாரை
கண்ணியம் வாழ்வாரை-எம்மை
கட்டுக்குள் வார்த்தாரை
கண்தொழுது அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!

இன்பந்துன்பம் எல்லாமே
எண்ணமெலாம் மக்களாமே-எம்மை
தன்னுயிராய் போற்றிடும்
மன்னுயிர் அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!

சொந்தங்கண்டு வாழாமல்
தன்னலமும் பேணாமல்—எம்மை
பந்தமென்று தாங்கிடும்
பாசங்கொண்ட அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!

உயிரினும் மேலாக
உறவிலும் நாடாக-எம்மை
கனவிலும் நினைத்திடும்
அம்மாவாம் இதயத்தின்
தெய்வமென்று சொன்னாலென்ன!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment