Saturday 12 November 2016

ஏழையில்லா தமிழ் நாடு

ஏழையில்லா தமிழ்நாடு நோக்கி..........(1)

ஏழைக்கான அரசு.

“நல்ல விளக்குக்கு வெளிச்சம்.
நல்ல வயலுக்கு விளைச்சல்.
நல்ல ஆட்சிக்கு மக்களின் நிம்மதி”.எனும் அறிஞர்.அண்ணாவின்
தாரக மந்திரத்தின் முனைப்போடும்
“பசி பிணி பகை இல்லாதிருப்பது நல்லநாடு”.எனும் வான்புகழ்
வள்ளுவனின் இலட்சிய நோக்கோடுந்தான்,
தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யும் விதமாகத்தான் எனது தலைமையிலான கழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் பார்க்காமல் நாட்டின் முன்னேற்றத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியையும் மேம்படுத்தி சமுதாய அடித்தட்டில் வாழும் ஒவ்வொரு ஏழையையும் சென்றடையும் விதமாகத்தான் கழக அரசு என்பது ஏழைகளுக்கான அரசாகவும்,ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்து கைதூக்கிவிடும் அரசாகவும் எனது தலைமையில் சீராக செயல்பட்டு வருவதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் வெளியில் உண்மைக்குப் புறம்பாகப் பேசிவருகிறார்கள்.இதை அறிவார்ந்தவர்கள் நம்ப மாட்டார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------- 
ஏழையில்லா தமிழ்நாடு நோக்கி..........(2)

ஆரோக்யமான வளர்ச்சி.(கல்வி)

அமைதி,வளம்,ஆரோக்யமான வளர்ச்சி என்பதுதான் எனது தாரக மந்திரம்.ஒரு மாநிலம் அது தனது ஆரோக்யமான போக்கில் வளமான பொருளாதார வளர்ச்சியை எட்டி மக்களின் வாழ்வில் அமைதியை நிலைப்படுத்த வேண்டுமானால்  அந்த நாட்டு மக்கள் கல்வியிலும்,உடல் நலத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதும் இன்றியமையாததாகும்.அப்படிப்பட்ட வளர்ச்சித்தான் நாட்டின் சமுதாய வளர்ச்சிக் குறியீட்டை நிர்ணயிக்கும்.சமுதாய வளர்ச்சிக்க்குறியீட்டின் வேகத்தைப் பொறுத்துத்தான்
சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்றநிலை மாறி எல்லோரும் எல்லாமும் பெறமுடியும்.அப்போத்துதான் “எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் நிலை”எனும் குறிக்கோளை நாம் எய்த இயலும்  என்பதால்தான் எனது தலைமையிலான அரசு கல்விக்கும் உடல்நலத்திற்கும் முக்கியத்வம் தந்து குறிப்பாக கல்விக்கு மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 84,568 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்ததது.ஆனால் தி.மு.க அதன் ஆட்சிக்காலத்தில் கல்விக்காக செலவிட்டது 39,058 கோடி ரூபாய்தான் என்பதையும் நான் இங்கே குறிப்ப்பிட்டுச்சொல்கிறேன்.எனவேதான்தொடக்கக்கல்வி,நடுநிலைக்கல்வி,இடைநிலைக்கல்வி,மேனிலைக்கல்வி.என அனைத்து நிலைகளிலும் மாணவர் சேர்க்கைவிகிதம் வெகுவாக நிறைந்தும் இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்தும் உள்ளது என்பதும் நாம் பெருமைப்படவேண்டிய அம்சமாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏழையில்லா தமிழ்நாடு நோக்கி..........(3)

கல்லாமை இல்லாமை.
கல்விப்பருவ மாணவக் குழந்தையை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைப்பதை விட அக்குழந்தைக்கு பள்ளியின் மீது ஈர்ப்பினை உருவாக்கி அக்குழந்தை தானாகவே பள்ளிக்கு செல்லும் விருப்பத்தையும் கல்விகற்கும் ஆர்வத்தையும் தூண்டும்விதமாகவே கல்விகற்கும் குழந்தைக்குத் தேவையான விலையில்லா பாடப்புத்தகங்கள் ,விலையில்லா பைக்கூடு,இரண்டு சோடி சீருடைகள்,காலணிகள்,கணிதப்பெட்டி,பென்சில்,பேனா,எழதுபலகை,முதலிய கல்விக்கான கருவிகள் தொடக்கம் மற்றும் நடுநிலைக்கல்வி நிலைகளிலும் மேலும் தொடர்ந்து மேல்நிலைக்கல்விக்கு வரும்பொழுது சைக்கிள் ,மடிக்கணினியும் விலையின்றி வழங்குவதோடு ஐயாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் புத்தம்புதிய பள்ளிக்கட்டிடங்கள்,காற்றோட்டமான வகுப்பறைகள்,கணினி வசதிகள்,மாணவியர்க்கு சுகாதாரமான தனிக்கழிப்பிட வசதிகள்,விளையாட்டு மைதானங்கள்,முதலிய அனைத்து வசதிகளுடன்கூடிய தனியார்பள்ளிகளுக்கு இணையான உட்கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.மேலும ஆங்கில வழிக் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.எனவேதான் நாம் மேனிலைக் கல்வியில் முதன்மை பெற்ற மாநிலமாகத் திகழ்கிறோம் என்று எண்ணும் போது நமக்குப் பெருமையாக உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------