Wednesday 7 May 2014

கரடும் முரடும் பயணம்.

புரட்சித் தலைவி புறப்பட்டாள்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணே!
பாரதம் வென்றாய் தமிழ் தானே!
சாரதி எம்ஜி ராமச்சந்திரனே
ஆரெதிரில் நிற்பார் உன்முன்னே!

தர்மம் தெரிவதும் தூரம்தான்.
தடங்கல் கடப்பதும் நேரம்தான்.
கரடும் முரடும் பயணம்தான்
கண்டு தொடுவதும் வாடிக்கைதான்.

மழைக்கும் முன்னே இடிமிரட்டும்
அதையும் தாண்டி அதுபொழியும்
களைக்குப் பயந்தால் விவசாயம்
களஞ்சியம் சேர்க்க உதவாதாம்.

பிள்ளைப்பேறும் கடுமைதான்.
இல்லை அதுபோல் கொடுமைதான்.
மரணம் அருகினில் இருந்தாலும்
மகவினைக் கண்டதும் மறந்துவிடும்.

பட்டினி என்பதும் பாவமே!
பசிப்பது என்பதும் சாபமே!
தட்டில் படையல் யோகமே!
தட்டிப்பறிப்பவன் நீசனே!

வறுமை இல்லா வாழ்க்கையோ!
வாழ உழைக்கும் கர்மமே!
ஏழை இல்லா உலகமே
ஊழை எழுது தலைவியே!

விடியல் கூடி வளர்கிறது.
விளங்கும் தர்மம் ஒளிர்கிறது.
பாவம் பதுங்கி ஒளிகிறது
சாபம் தீண்டி அழிகிறது.

தொடர்ந்தும் தர்மம் தோற்பதில்லை
கிடந்தும் தன்பணி  சோர்வதில்லை.
படர்ந்தும் பாவம் படும் வேளை
முடித்தும் நாட்டும் திருநாளை.

பாவியர் கூட்டம் பதறுதே.
பாவ வலையில் கதறுதே.
தேவியின் வேட்டை தொடருதே.
திசைகள் நான்கும் அதிருதே.

சக்தியின் வடிவம் ஜெயமாகும்.
பக்தியின் படிவம் பலமாகும்.
இரட்டை இலையாம் சூலமுடன்
புரட்சித் தலைவி புறப்பட்டாள்.

கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_md0bxcQyke9UTeHyal1dPaal5SZHqWKPG85ycMapqodhHRB0DZULjf1uMX3HAXK4mj2kzpujYcxPW9QGSmImm9PTkYCs0zBn6zgsgYw66VKkQpJcv44Vv7k3jvWKXh08-dmd9_to0qKR/s1600/1512276_1443452939235552_5773218454894595733_n.jpg

No comments:

Post a Comment