Tuesday 24 May 2016

புதியபாதை.

புதிய பாதை புதிய பயணம்.

எதிரிக் கட்சிகள் தமது மூக்கின் மீது விரல் வைத்து வியக்கும் வண்ணம் அம்மாவின்  புதிய பயணம் புதியபாதையில்பயணிக்கத்தொடங்கியுள்ளது.
இனி எவரும் எக்காரணத்திற்காகவும் அம்மாவை நோக்கி விரல் நீட்டி பேசமுடியாத அளவிற்கு வாயடைத்துப் போயுள்ளனர்..தங்கள் இஷ்டத்திற்கும் எழுதியும் விமர்சித்தும் மக்களை ஏமாற்றி வந்த ஊடகங்கள் இப்போது பாராட்டு மழை பொழிந்து பாசம் காட்டுகின்றன.

ஆறாவது முறையாக அம்மா பதவி ஏற்றுக்கொண்ட நாளில் தங்களின் விஷமத்தனமான விமர்சனங்களுக்கு என்ன தீனி கிடைக்கும் என்றே சில கோயாபெல்ஸ் ஊடகங்கள் தேடித்தேடி அலைந்தன.அனால் அம்மாவின் புதிய பாதையில் புதிய பயணத்தின் ஆச்சர்யம் கண்டு அயர்ந்து மயங்கி வீழ்ந்தன.

அம்மாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்திலிருந்து பதவி ஏற்கும் பல்கலைக்கழகம் நூற்றாண்டு மண்டபம் வரைஆறு கிலோமீட்டர் வழி நெடுகிலும் அம்மாவின் பதவியேற்பு சம்மந்தமான எந்தவொரு பதாகைகளும் எழுத்தும் இடம்பெறவில்லை.அதே சமயம் போக்குவரத்து நெருக்கடிகளும் இல்லை.அது மாத்திரம் அல்ல கழகத் தலைவர்களின் பௌவியாமான பணிவுத் துதிபாடுகளும் இல்லை.இவ்வாறான துதிபாடுகள் அம்மாவின் விருப்பமும் அல்ல.ஆனால் கழகச்சொந்தங்கள் தங்கள் உள்ளம் எழும் உணர்சிப்பூர்வமான மரியாதை நிமித்தமாக தங்களையே அறியாமல் நிகழும் அனிச்சைச்செயல் என்று வாய்மலர்கிறார்கள்.ஆகவேதான் பதவியேற்பின் போது எப்படி யெல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்றும்  கழக உடன்பிறப்புக்களுக்கு முன் பயிற்சி கொடுத்தும் அம்மா அழகு செய்தார்.

மரியாதை என்பது வேண்டிப்பெறுவதல்ல.அது உதிரத்தில் தோன்றிப் பெறுவது.லட்சத்தில் ஒருவருக்குத்தான் அப்படிப்பட்ட அபூர்வ தெய்வீக இலட்சணம் இயற்கையாக அமைந்து இருக்கும்.அப்படியொரு மரியாதைக்குரிய முகராசி அம்மாவுக்கே ஆண்டவன் அருளிய அதிசயம்.அந்த அம்மானுச்யமான அம்மாவின் ஆளுமைத்தோற்றம் அவரைப் பார்த்த மாத்திரமே பணிந்து தொளச்செய்கிறது என்பதுதான் சத்தியம்.அவ்வாறான சுய எழுச்சியை மாற்றுவது என்பதும் சாத்தியமே என்பதையும் அம்மா சாதித்துக்காட்டினார்.

அம்மாவின் வாழ்க்கைஎன்பதும்மக்களுக்காகவேஅர்ப்பணிக்கப்பட்டது.தமிழக மக்கள்தான் அவர் சொந்தம்.அம்மாவின் பிறப்பும் ஒரு அவதாரம்.அவதாதாரம் எடுத்த அத்தனை மனிதர்களும் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதும் உள்ளாக்கப்படுவதும் இறைவனின் திருவிளையாடல்கள்தான்.இறைவனின் திருவிளையாடல்கள் அனைத்தும் இறுதியில் திருவினைகளாகவே திருவடிவங்களாகும் என்பதே திருமறைகளின் சத்தியம்.அப்படித்தான் அம்மாவும் இன்று புடம்போட்ட தங்கமாக தங்கத்தாரகையாக மிளிர்கிறார்.இனி அவரை அசைக்க எந்த சக்தியாலும் இயலாது.இது வெறும் கூற்றல்ல,இதுதான் அம்மாவின் வரலாறு.இது இறைவனால் எழுதப்பட்டது.இதை மாற்றும் வல்லமை எவர்க்கும் இல்லை.மக்களால் அம்மா.மக்களுக்காகவே அம்மா.இதுதான் அம்மாவின் அவதார நோக்கம்.

இனி காணப்போகும் அம்மாவின் ஆட்சி.இந்திரலோகத்தின் காட்சி.சுவர்க்கம் என்பதை இப்பூவுலகிலேயே கண்டுணரலாம்.இனி பசுமைக்குப் பஞ்சமிருக்காது.பசியென்ற சொல்லிருக்காது.இனி மழைநீர் ஒரு சொட்டுக்கூட கடல்நீரைக்காண முடியாது.ஆறு குளங்கள் அனைத்தும் தரை காட்டாது.இனி ஏழை எனும் பெயர் சுமந்து எவனும் இருக்கமாட்டன்.இனி இரவும் பகலும் வேற்றுமையின்றி எப்போதும் ஒளிரும் தமிழகம் ஒரு அடையாள பூமியாக அம்மாவின் ஆட்சி முத்திரையாக அகிலம் போற்ற விளங்கும் என்பதும் சத்தியமே.

அம்மா என்றால் தமிழகம்.
தமிழகம் என்றால் அம்மாதான்.
என்றென்றும் தமிழாட்சி-அது
ஒன்றென்றும் நிலையாட்சி.

ஆளப் பிறந்தவர் அம்மாதான்.
அவர்தான் தமிழே அம்மாதான்.
தமிழாம் தவமே அம்மாதான்.
தமிழின் ஆட்சி அம்மாதான்.

கொ.பெ.அய்யா.

Saturday 21 May 2016

சாதனைப் பெண்மணி கட்டுரை.

சாதனைப் பெண்மணி சரித்திர நாயகி அம்மா.

சாதிக்கப் பிறந்த அம்மா பல சாதனைகளில் சரித்திரம் படைத்தது சாதாரண விடயம் அல்ல.அம்மாவின் சாதனைகள் சிலமட்டும்தான் இங்கே காண்போம்.

#நமது புரட்சித் தலைவர் 1987ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நமது கழகம் தலைமை ஏற்று நடத்த பொறுப்பான தலைமையின்றி தடுமாறிய அந்த இக்கட்டான காலக்கட்டத்தில் புரட்சித் தலைவி அம்மாதான் துணிந்து முன்னின்று பட்டி தொட்டி கிராமங்கள் தோறும் சென்று கண்துஞ்சாது அரும்பாடுபட்டு பரப்புரை செய்து வெற்றிக்கனியை வென்றெடுத்து சிகிச்சை முடித்து வந்த நம் பொன்மனச்செம்மலிடம் காணிக்கையாகப் பரிசளித்தார் என்பதை யாரும் சாமான்ய விடயமாகக் கருதி மறந்திடவும் முடியுமா?.

#புரட்சித்தலைவர் மறைவுக்குப்பின் எதிரிகளின் சூழ்ச்சிச் சதியால் நமது இயக்கம் இரண்டாக உடைக்கப்பட்டு நமது வெற்றிச்சின்னம் இரட்டை இலையும் அண்ணாவின் முத்திரை பதிக்கப்பட்ட நமது இயக்கத்தின் வெற்றிக்கொடியும் முடக்கப்பட்டன.ஆனால் அம்மா தனது ஓயா உழைப்பாலும் திறமையாலும் அயரா முயற்சியாலும் உடைபட்ட இயக்கத்தை ஒன்றிணைத்துக் காத்து இழந்த கொடியையும் சின்னத்தையும் மீட்டெடுத்த பெருமையும் புகழும் அம்மாவின் சாதனைதான் என்பதையும் எவராலும் மறுக்க முடியுமா?இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் தான் இழந்த சின்னத்தையும் கொடியையும் மீட்டெடுத்த வரலாறு உண்டா?நூறாண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் பேரியக்கத்தால் கூட தான் இழந்த இராட்டை முத்திரை பதித்த மூவண்ணக்கொடியையும் இரட்டை மாட்டு சின்னத்தையும் மீட்டெடுக்க வக்கின்றி எத்தனையோ சின்னங்கள் மாறி மாறி இன்று கை சின்னத்தில் வந்து நிற்கின்றது.சிதறுண்ட அக்கட்சி இன்னமும் சிதறிக்கொண்டுதான் சிதைகின்றது என்பதும்தானே உண்மை?.

#புரட்சித்தலைவர் காலத்தில் கூட கால்பதிக்க முடியாதிருந்த சென்னையைத் தனது கோட்டைக் கொத்தளமாக்கி மாநகரத்தையும் கைப்பற்றி இன்று பெருநகரமாக்கிய சாதனை அம்மாவின் அற்புதம் என்பதையும் யாரால் மறுக்க முடியும்?

#தமிழமெங்கும் விரிந்து பரந்திருந்த ரௌடிகளின் சாம்ராஜ்யத்தை வேரறுத்து கட்டப்பஞ்சாயத்து,நில அபகரிப்பு,கந்துவட்டிக் கட்டாய வசூல் ஆகிய கொடுமைகளை ஒழித்து தமிழகம் ஒரு அமைதி பூங்காவாக அழகு பெற்றதும் அம்மாவின் அருஞ்சாதனை அல்லாது யாருடைய சாதனை?

#அன்று வயிற்றுக்குச்சோறில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்றும் மகாகவி கோவக்கனல் தெறிக்கப் பாடினான்.அவன் ஏக்கத்தை உணர்ந்தஅம்மாதான்இன்றுதமிழகத்தில்பிச்சைக்காரகள்இல்லை.பட்டினிச்சாவில்லைஎன்ற நிலையை உருவாக்க.ஆலயங்களில்  அன்னதானம்.அம்மா உணவகம் ஆகிய அன்னதான மையங்களை அமைத்து அன்னபூரணித் தாயாக அம்மா விளங்குகிறார்.இதைவிட ஏழைகளின் வயிறு குளிர வேறென்ன சாதனை இவ்வுலகில்?

#இது வரை அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் தனது வாக்கு சதவிகிதத்தை நிலை நிறுத்திகொண்டதில்லை.ஆனால் அம்மாவின் தலைமையில் உள்ள அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக இயக்கம் மட்டும்தான் தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்கு சதவிகிதத்தை உயர்த்திக்கொண்டே உள்ளது.இதைவிட அம்மாவின் சாதனைக்கு வேறென்ன
சாட்சி வேண்டும்?

#அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மாவின் மீது சுமத்தப்படும் அத்தனை பொய் வழக்குகளையும் சட்டபூர்வமாகவே சந்தித்து அவற்றை பொடிப்பொடியாக்கி வெற்றி காண்போதோடு மட்டும் அல்லாமல்.தனது மாநிலத்தின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்ப்படும்போதெல்லாம் அவற்றையும்வழக்குமன்றங்களில்போர்வழக்காடிவென்றெடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாற்று நீர்மட்டத்தை உயர்த்தியதும் மற்றும் காவேரி நீர்மேலாண்மை வழக்கு மற்றும் கச்சத்தீவு மீட்டெடுக்கும் வழக்கு போன்ற சட்டரீதியான போராட்டங்களையும் அஞ்சா நெஞ்சுறுதியோடு முன்னெடுக்கும் சாதனையாளர் அம்மாவைத் தவிர தமிழக அரசியலில் வேறொருவர் எவருளார்?

#தமிழக அரசியல் வரலாற்றில் கர்மவீரர் காமராசர்,புரட்சித்தலைவர் எம்ஜியார் போன்ற அமரத் தலைவர்களுக்குப்பின் ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு தொடர்ந்தும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட அரிய சாதனை நிகழ்த்த அம்மாவைத் தவிர எவரினி பிறப்பார்?

கொ.பெ.பி.அய்யா.

Thursday 12 May 2016

அம்மாவின் பிள்ளை நீ

அம்மாவின் பிள்ளை.

அம்மாவின் பிள்ளை நீ!
அவரது கடனே நீ!
புரட்சியாரின் செல்வம் நீ!
நிரந்தரம் அரசு நீ!

சிங்கம் நீ தங்கம் நீ!
செந்தமிழ் சொந்தம் நீ!
தங்கத் தாரகை புகழே நீ!
பொன் மனத்தின் கண்மணி நீ!

அண்ணாவின் தி.மு.க நீ!
அன்னையின் நம்பிக்கை நீ!
எண்ணும் அளவில் இதயம் நீ!
இன்னும் சொன்னால் சரித்திரம் நீ!.

அன்பில் விளைந்த தொண்டன் நீ!
பண்பில் நிறைந்த பாசறை நீ! .
அம்மாவின் ஆன்மா நீ!
செம்மலின் சீரே நீ!

தொட்டு வளர்த்த தோழமை நீ!
கட்டிக் காத்த கன்னியம் நீ!
அம்மா நிழலின் அனுபவம் நீ!
எம்ஜிஆர் புகழ் ஏந்தல் நீ!

காலம் முன்னே கவனம் நீ!
வாழும் பின்னே வாழ்வும் நீ!
அம்மா அரசின் அச்சாணி நீ!
எம்ஜிஆர் இயக்கம் இயக்கம் நீ!!

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.


அதிமுக கொடி

அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்


நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும். அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்ததாவது:
 அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.
 அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர். 
 இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார். 
 அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார். 
 அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர். 
 தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர். http://media.dinamani.com/2016/05/10/42.jpg/article3424493.ece/alternates/w620/42.jpg
நன்றி :தினமணி.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 10 May 2016

வெற்றி நிச்சயம்.

வெற்றி நிச்சயம்.

தங்கங்களே அம்மா சிங்கங்களே!-நீங்கள்
ஒன்றில் இல்லை கோடிகளே!
ஒருவருக் கொருவர் பொறுப்பு-உங்கள்
உழைப்பில் இருக்கணும் நெருப்பு.

உங்களுக்  குள்ளே தாயாய்-தூண்டும்
கங்கதுக் குள்ளே தீயாய்
எரியும் நெருப்பாய் துடிப்பு-அம்மா
விளையும் துணிவாய் உழைப்பு.

புரட்சித் தலைவரின் பாதை-அன்று
புறப்பட்ட பயணம் தொடர
தலைவர் தானே தேர்ந்தார்-அம்மா
தலைமை தானே நேர்ந்தார்.

எதிரிகள் எல்லாம் ஒன்றே-தீய
சக்திகள் என்று கண்டே,
கூட்டம் அதனை கொள்கையில்-விரட்டும்
வேட்டை ஒன்றே இலட்சியம்.

இரட்டை இலைதான் எண்ணம்-அது
புரட்சித் தலைவரின் சின்னம்.
வெற்றியின் வெற்றி திண்ணம்-அம்மா
பற்றிய பச்சை வண்ணம்.

மீண்டும் அம்மாவின் ஆட்சி--என்றும்
வேண்டும் என்பதே சாட்சி.
தொடராய் தொடரும் நீட்சி-அம்மா
வரமாய் படரும் மாட்சி.

நல்லாட்சி என்றும் சிறக்க-அம்மா
தில்லாட்சி கொண்டும் நிலைக்க!
அம்மாட்சி நின்றும் தொடர-மொத்த
உள்ளாட்சி வென்றும் உழைக்க!

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.
   

Saturday 7 May 2016

கொடி பறக்குது.

கொடி பறக்குது.,

கொடி பறக்குது கொடி பறக்குது
கோட்டை ஏறி கொடி பறக்குது-புரட்சித்
தலைவர்களின் புகழ் பாடி
இரட்டை இலைக் கொடி பறக்குது.(கொடி)

இரட்டை இலைச் சின்னம்
விரட்டும் பசி வண்ணம்-வள்ளல்
எம்ஜி யாரின் புகழே
என்றும் பாடி பறக்கும்.(கொடி)

வறுமை ஓட்டி முடுக்கும்.
வளமை வாழ்த்தி அழைக்கும்-அம்மா
பெருமை போற்றிப் படிக்கும்.
திருமை நாட்டிப் பறக்கும்.(கொடி)

புரட்சித் தலைவர் புகழே!
ஸ்ரீ ரங்கத் தமிழே!-தமிழக
நிரந் தரத்தின் அரசே
இருந்து ஆளப் பறக்கும். (கொடி)

வள மெல்லாம் இங்கே.
நல மெல்லாம் இங்கே-தமிழ்
புகழெல்லாம் பாடிப்பாடி
யுகயுகமாய் பறக்கும்.(கொடி)

கொ.பெ.பி.அய்யா.


Friday 6 May 2016

அன்னை அறிவார்

அன்னைக்குத்தான் தெரியும்..

பிள்ளைக்கென்ன வேண்டும்-ஒரு
அன்னைக்குத்தான் தெரியும்.
சொல்லியதும் கொஞ்சம்-அம்மா
சொல்லாததும் செய்தார்.

அம்மா திட்டம் இன்றும்-மக்கள்
அலையும் போக்கை தவிர்த்தார்.
மக்களைத் தேடி அரசு -குறை
முறைகைகளைக் கேட்க  பணித்தார்.

படிப்படியாய் மதுவை-அம்மா
முடித்திடுவார் ஒழித்து.
திருந்துவதும் பொறுப்பு-திருத்தம்
பொருந்துவதும் நடப்பு.

அடிப்படையாம் கல்வி-அதை
அடைவதுதான் செல்வம்.
படிக்கமட்டும் படிக்க-அம்மா
கொடுக்குந்துணை தெய்வம்.

ஒடுக்கப்பட்ட பெண்ணும்-தன்னை
விடுக்கவழி முனைந்தார்.
பயணத் தானி தந்தும்-அம்மா (தானி--auto)
பயிற்றப் பெண்ணை அழைத்தார்..

தூணாய் தாங்கும் உழவன்-கடனில்
வீணாய் ஏங்கும் நிலைமை.
தானாய் நீங்கவும் கடன் நீக்கி-அம்மா
மாணாய் பாங்கும் அமைத்தார்..

காலை உண்டியும் பள்ளியில்-அதி
காலை வந்திடும் பிள்ளைகள்.
காலைப் பசியை போக்கினார்-அம்மா
ஊழை வென்ற தாயரவர்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 4 May 2016

இரட்டை இலை நானடா!

இரட்டை இலை  நானடா!

இரட்டை இலை நானடா!
புரட்சி இலை தானடா
எதிர்ப பவரும் யாரடா!
எதிர் அணியும் ஏதடா!

எம்ஜியாரு பேரடா!
என்தலைவன் தானடா!
தெம்பிருக்கா கூறடா!
தீர்ந்த துந்தன் சாரடா!

அம்மா படை பாரடா!
ஆழி மடை தானடா!
சும்மா சும்மா ஏனடா!
சூழுரைப்பது வீணடா!

தலைவன் கண்ட அம்மாடா!
தமிழ்ச் சொந்தம் தானடா!
அம்மா தந்த தில்லடா!
அந்த பயம் கொள்ளடா!

அம்மா தமிழ் இனமடா!
அஞ்சா நெஞ்ம் தானடா!
நிரந் தரமாய் அம்மாடா!
இருந் தாள்வார் தமிழடா!

எழுச்சிக் கடல் அலையடா
புரட்சிப் படை தானடா!
வெற்றிப் பறை கொட்டடா!
ஏற்றிக் கொடி நட்டடா!


கொ.பெ.பி.அய்யா.

Tuesday 3 May 2016

நமது இலக்கு கட்டுரை.

நமது இலக்கு 234/234.

என் அன்புக்குரிய கழக நண்பர்களே!சகோகர்களே!பிள்ளைகளே!பிரியமானவர்களே! தேர்தல் வெகுவிரைவுடன் நம்மை நெருங்கி வருகிறது.இத்தேர்தலில் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்ட நிசமான ஒன்றுதான் என்றாலும் கூட அந்த மமதையில் மயங்கிக் கிடந்துவிடக் கூடாது.ஏனெனில் அரவமில்லா அந்தச்சந்தடி சாக்கில் நம்மைச்சுற்றி நம்மையே கண்காணித்துக்கொண்டு வேளை பார்த்து திருடக்காத்திருக்கும் திருட்டுப்பூனைகளிடமும் நாம் எச்சரிக்கையுடன் கவனமாக உசாருடன் விழிப்போடு விழித்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.இவ்வாறு நான் தங்கள் உணர்வுகளை கிள்ளிவிடுவதும் எந்த அளவுக்கு அவசரமானது என்பதும் தற்போது நம்மைக் குழப்பிவிடும் தந்திர வேலைகளை விலை போகும் சில ஊடகங்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு சாதுர்யமாகச்செய்து கொண்டு எதிரிகளான அவர்கள் நம்மை முந்துவதுபோல் ஒரு பொய்யான மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு சித்துவேலை செய்துவருகிறார்கள்.அவ்வாறான படுபாதகச்செயல்களளுக்கு சில ஊடகங்களும் துணை போகின்றன என்பததுதான் வேதனையிலும் வேதனை. 
தினமலர் நியுஸ் 7 வெளியிட்டுள்ள கருத்து கணிப்பை பார்க்கும் போது கடந்த தேர்தலில் நக்கீரன் வெளியிட்ட கருத்து கணிப்பு தான் நினைவுக்கு வருகிறது... எக்சிட் போல் கருத்து கணிப்பு என்று திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வந்தது. இரண்டு நாட்களில் தேர்தல் முடிவு வந்து நக்கீரன் முகத்தில் காறி துப்பியது.
அதையடுத்து முகத்தை துடச்சிட்டு நக்கீரன் வெளியிட்ட விளக்கம் தான் வரலாற்று சிறப்புமிக்கது. அதாவது நாங்க திமுகவுக்கு ஆதரவாக இருப்பதால் எங்களிடம் கருத்து தெரிவிப்பவர்கள் திமுக ஆதரவானவர்களாக இருந்ததால் திமுக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வெளியிட வேண்டிய நிலை வந்தது...
***நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்பது எவ்வளவு தூரம் உண்மையாயிற்று என்பதை அறிந்தோமே..இந்த பத்திரிககளும் சரி தொலைக்காட்சி ஊடகங்களும் சரி..
த்தூ..நாளையே பாருங்கள் தேர்தல் வெற்றிக்கு பின்னர்..
அலச ஆரம்பிப்பார்கள்..எப்படி இப்படி ஓர் முடிவுகள் வந்தது என்று...நாலு கேனப்பயலுகள கொண்டுவந்து உட்காரவைத்து ..
அலசுவார்கள்..சுய கவுரவம் இல்லாத இந்த ஊடகங்கள்..
ஒருபோதும் அவைகள் நமக்கு ஆதரவாக ஒருபோதும் எழுதியதே கிடையாது..எம் ஜி ஆர் காலம்தொட்டு..இன்றுவரை..நமக்கு எதிரிகளே இந்த ஊடகங்கள்தான்..
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..எதிர்பாருங்கள்..கடந்த கால வெற்றிகளை காட்டிலும்..இந்த தேர்தல் சரித்திர வெற்றியை அடையத்தான் போகிறது..
இந்த தேர்தல் முடிந்தும் இதை தான் இப்போது கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்கள் விளக்கமளிக்கும்..என்பதில் ஐயமில்லை.
தேர்தல் நிலவரம் குறித்து வெளிப்படையாகவே சில தகவல்களை நானும் சொல்லியாகவேண்டும்.. களப்பணியாளர்கள் தயவு கூர்ந்து இப்பதிவுகளை படித்து தெரிந்துக்கொள்ளவும். ஆரம்பத்தில் 186 தொகுதிகளை அஇஅதிமுக வெல்லும் என்ற நிலை இருந்தது. அந்த நிலை இன்று குறைந்துக்கொண்டே வருகிறது. அதற்காக திமுகவுக்கு அந்த தொகுதிகள் செல்கிறது என்று நினைக்கவேண்டாம். அவை இழுபரி தொகுதிகளாக மாறி வருகின்றன. இன்றைய சூழலில் அம்மா வந்து பேசிவிட்டார், இனி அம்மாவே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்ற ஒரு எண்ணம் அதிமுக நண்பர்கள் மத்தியில் வந்துவிட்டது. அதை மாற்றிக்கொள்ளுங்கள். அம்மா வந்தார், பேசினார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தொகுதி மக்களிடம் நம்பிக்கை தரும்படியான வகையில் வேட்பாளர்கள் நடந்துக்கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் தமிழகத்தில் 40% தொகுதிகளில் அஇஅதிமுகவினர் களப்பணிகளை மேற்கொள்வதில் தோய்வு ஏற்பட்டிருக்கிறது. இதில் 14% களப்பணியாளர்கள் தங்களின் பணிகளை இன்னும் வேகமெடுத்து செய்யவேண்டும். அதைத் தவிர்த்து 26% களப்பணியாளர்கள் அம்மா வந்துவிட்டார், இனி அவரே பார்த்துக்கொள்வார் என்ற கருத்தை மாற்றிவிட்டு மீண்டும் களப்பணிகளை துவக்கவேண்டும். வெளிப்படையாக இப்போதைய சூழலில் அதிமுக களப்பணியாளர்கள் தங்களது பணிகளை நாளை முதல் சுறுசுறுப்புடன் மேற்கொள்ளாவிட்டால் மெஜாரிட்டி பெறுவதில் கூட கடினம் ஏற்படலாம். இது எச்சரிக்கை பதிவு. சுறுசுறுப்புடன் பணியாற்றினால் தாராளமாக 180 + என்ற நிலையை எட்டலாம். குறிப்பாக ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் களப்பணிகளை சுறுசுறுப்பாக செய்யவேண்டும். கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, விருதுநகர் பகுதிகளில் களப்பணிகளை தொண்டர்கள் மீண்டும் தொடங்கி ஆரம்பிக்கவேண்டும்.
-
புரியவேண்டிய கழக நண்பர்களுக்கு புரிந்தால் போதும். இன்றைய நிலையை நான் விளக்கிவிட்டேன். இனி எல்லாமே உங்கள் கைகளில் தான் உள்ளது.

தினமலர் 7 News செய்த கருத்து கணிப்பு உண்மையோ அல்லது பொய்யோ அது தேவை இல்லாத கதை.
ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பொறுப்பாளர் முதல் தொண்டன் வரை உங்கள் கடமையை ஒழங்காக செய்யுங்கள்.
நமது லட்சியம் 234 தொகுதி யிலும் வெற்றி பெறுவது என்பது. வரலாறு படிப்பதற்காக.
இது ரொம்ப Easy method.
ஒவ்வொரு தொண்டனும் உங்க வாக்கை அஇஅதிமுக வுக்கு போடுங்கள் முதல் வேலையாக.
அப்புறம் ஒவ்வொரு தொண்டனும் இரண்டு வாக்காளர்களை அஇஅதிமுக வுக்கு ஒட்டு போட செய்யுங்கள்.
கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்கள் நிறைந்த கட்சி அஇஅதிமுக.
2*2= 4 அதாவது 4 கோடி.
ஆனால் இதை ஒவ்வொரு தொண்டனும் செய்ய வேண்டும் அப்போ தான் இது சாத்தியம்.
ஒவ்வொரு பொறுப்பாளர்களும் விருப்பு வெறுப்பின்றி புரட்சித் தலைவி அம்மா தான் வேட்பாளராக ஒவ்வொரு தொகுதியிலும் போட்டி இடுவதாக எண்ணிப் பணி புரிய வேண்டும்..

நேற்று நமது நண்பர் ஒருவர் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்து இறங்கும்போது அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டாராம்..இந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று..
அதற்கு அவர் தயங்காமல் சட்டென்று ,"தமிழகம் பொறுத்தவரை அம்மாதான் ஆளும் மீனாட்சி"என்று  சொன்னாராம்.
மீண்டும்நண்பர்".சார் உறுதியாக அம்மாதான் பதவிக்கு மீண்டும் வருவார் என்று .நம்பிக்கையோடு சொல்கிறீர்கள் 
‪#‎அம்மா‬ என்றால் யாருங்க என்றாராம்.அதற்கு  அந்த ஆட்டோ ஓட்டுனர் சென்னைமொழி பிள்ளைத்தமிழில்,
"இன்னா சார் உலகம் முழுக்க #அம்மா என்றாலே நம்ம தமிழக முதல்வர் அவர்களைத்தான் சொல்வார்கள்", என்றாராம்.-அசந்துபோய்விட்டாராம் நமது நண்பர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி #அம்மா அவர்கள் சொன்னதுபோல..தனது பெயரையே மறந்துபோகும் அளவுக்கு #அம்மா என்கிற சொல் மட்டுமே இனி தமிழகத்தில் நிலைத்து நிற்கும்.
வரும் 2016 தமாழக சட்டமன்ற பொது தேர்தலில் இமாலய வெற்றி பெற்று #அம்மா அவர்கள் பதவி ஏற்ப்பு பிரமாணத்தின் போது உறுதியாக கூறுகின்றேன்..
ஜெயலலிதா எனும் நான் என்கிற வார்த்தையை மறந்து...
#அம்மா என்கிற நான் என்றே பதவி பிரமாணம் ஏற்பார் என்றே உறுதியாக நம்புகின்றேன்..
மக்களின் மனதில் #அம்மா நீக்கமற நிறைந்துவிட்டார்.
எந்த அரசு ஆண்டாலும் அதிருப்தி இருக்கத்தான் செய்யும். ஒரு குடும்பத்துக்குள்ளேயே எல்லோரையும் திருப்தி செய்வது கடினம் எனும்போது, ஏழரை கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் எல்லோரையும் திருப்தி செய்வது கடினம். அதிலும் பதவி வெறி கொண்டவர்கள் எதிரில் இருக்கும் நேரத்தில், மக்கள் திருப்தி அடைந்தாலும், எதிரிகள் விட மாட்டார்கள்.
ஆனால் ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டால் அது கண்டிப்பாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.
அம்மா ஆட்சியில் ஒரு சிலருக்கு அதிருப்தி இருக்கலாம். ஆனால் பொதுவான மக்களுக்கு வெறுப்பு இல்லை. மாறாக நம்பிக்கை இருக்கிறது.
லஞ்சம் என்பது கடைகோடி ஊழியன் வரை புரையோடி இருக்கிறது. அதை ஒழிக்கவேண்டுமென்றால் மத்திய அரசு பல கடுமையான சட்டங்களை கொண்டுவரவேண்டும்.
ஆகையால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை. அப்படியிருக்க லஞ்சத்தை காரணமாக கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
அதிமுகவைவிட திமுக சிறந்த ஆட்சியை தரும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு சுத்தமாக இல்லை.
அதிமுகவுக்கு முக்கிய பலம்
கட்சி ஓட்டு + ஏழை மக்களுக்கு சில அத்தியாவசிய திட்டத்திம் கொடுத்து கவர்ந்ததால் + திமுக போல் அராஜகம் செய்யாமல் அமைதியான ஆட்சி கொடுத்தது+ மின்சாரம் + தண்ணீர்
.
திமுக பலம்
கட்சி ஓட்டு + அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டு
.
மநகூ பலம்
எதிர்ப்பு ஓட்டு மட்டும் தான்... அந்த ஓட்டு திமுக கிட்ட இருந்து பிரிக்குற வேலைய பார்த்தா மட்டும் போதும் அதுக்குமேல யோச்சிக்கிற அளவுக்கு ஒர்த் இல்ல
அந்த தர்மபுத்திரனே ஆண்டாலும் அதிருப்தி என்பது இல்லாமல் போகாது...
அதுபோலவே அதிமுக ஆட்சியில் சில பின்னடைவு இல்லாமல் இல்லை.. அப்படி சொல்ல நான் ஒன்றும் நடுநிலையாளன் அல்ல..
ஆனால் அந்த அதிருப்தியையே மக்களின் வெறுப்பு அலையாக கற்பனை செய்து கொண்டு குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அவை ஒன்றும் 1, 76000 கோடி ஊழல்கள் அல்ல.. எல்லா அரசுகளிலும் ஏற்படும் இயல்பான நிர்வாக சறுக்கல் மட்டுமே..
இந்த சாதாரண அதிருப்தியை மேலும் "தங்களுக்கு ஆதரவாக திரட்டுகிறேன் பேர்வழி " என போலி கருத்து திணிப்பு வெளியிட்டு அதன் மூலம் பெரிய ஆதரவு வளர்வதாக காட்டிக் கொண்டதில், அந்த திணிப்பில் பட்டவர்த்தனமாக தெரிந்த தவறுகளை கண்டு "மதில் மேல் பூனை" என நின்ற வாக்காளர்கள் "மீண்டும் இந்த குடும்பமா? "என்று அதிமுக பக்கம் தம் மனதை ஸ்திரப்படுத்தி விட்டனர்.பாவம்!
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதற்கு நன்றி.அம்மாவின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வந்தபின் நிலைமை தலைகீழ் மாற்றம் ஏற்படும் என்பதே உறுதி நன்றி!.
வெற்றி நிச்சயம்,
எம்ஜியார் நாமம் வாழ்க!
அம்மா சாதனை வெல்க!

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு.நன்றி.பால்மீரன்,venkat swami natan,அசோக்,மற்றும் pirabuM