Wednesday 30 July 2014

கேள்வியும் பதிலும் .



நானே கேள்வி நானே பதில்.

பிரிக்க முடியாதது?
குடும்பமும் தி,மு.க.வும்.

பிரிக்கக் கூடியது?
தி.மு.க.வும் பொதுநலமும்.

பிரிந்தே இருப்பது?
உண்மையும் தி.மு.க வும்.

சேர்ந்தே இருப்பது?
பொய்யும் தி.மு.க.வும்.

தி.மு.க.வின் வேசம்?
ஜனநாயகம்.

தி.கமு.க.வின் நிசம்.
வாரிசு.

ஏமாற்றும் அரசியல்?
தி.மு.க.

அரசியலை வர்த்தகமாக்கியது?
தி.மு.க.

ஏமாறும் தொண்டன்?
தி.மு.க.அடிமை.

வெட்கம் உணராதது?
தி.மு.க.

ஊழல் உதயம்?
தி.மு.க.

பொய்யின் அடையாளம்?
தி.மு.க.

உண்மையின் அடையாளம்?
அ,இ.அ.தி.மு.க.

தன் மக்களுக்காக?
தி.மு.க.

நாட்டு மக்களுக்காக?
அ,இ.அ.தி.மு.க.

சந்தர்ப்பவாத அரசியல்?
திமு.க.

நிலைமாறா அரசியல்?
அ,இ.அ.தி.மு.க.

சுயநல அரசியல்?
தி.மு.க.

பொதுவாழ்வு அரசியல்?
அ,இ.அ.தி.மு.க.

அண்ணாவால் பிழைப்பது?
தி,மு,க.

அண்ணாவில் வாழ்வது?
அ,இ.அ.தி.மு.க.

பொய்யின் அடையாளம்?
தி.மு.க.

உண்மையின் அடையாளம்?
அ,இ.அ.தி.மு.க.

வீடென்றால்?
தி.மு.க.

நாடென்றால்?
அ,இ.அ.தி.மு.க.

அஞ்சும் நெஞ்சம்.
தி.மு.க. தலைமை.

அஞ்சா நெஞ்சம்?
அம்மா.

அம்மா எம்ஜிஆர் வழி வாழ்க@





ஒரு வழிப்பயணம்!

ஒருவொரு நொடியும் உன்னோட வயது
ஒருவழிப் பயணம் ஓடிக்கொண் டிருக்கு.
கடந்து தொலையும் காலம் வராது.
தொடர்ந்து முயன்றால் தோல்வி தராது.

வந்தது தெரிந்தது போவது எங்கே
வாழ்க்கையின் இரகசியம் புரியலையோ!
வாழ்ந்தோமென்ற அடையாளம் தானே
வரவா செலவா விளங்கலையோ!

காலம் உந்தன் கணக்கை எழுதுது.
நாளும் அந்த வழக்குத் தொடருது.
செலவும் வரவும் பாவ புண்ணியம்
உலகம் கூறும் முடிவும் நிச்சயம்.

இளமை இருக்கு நாற்பது வரைக்கும்.
வளமை பெருக்கு வாழ்வது நிறைக்கும்.
அப்புறம் முதுமை அதுஉனைக் குறைக்கும்.
செப்புற உறவும் புறமனை ஒதுக்கும்

வீழ்ந்தே கிடந்தால் விறகாய் சாகும்.
வீழ்ந்து எழுந்தால் அனுபமாகும்.
வாழ்ந்தவர் வாழ்க்கை படிப்பினையாகும்
வாழ்ந்து பார்த்தால் சரித்திரமாகும்.

உண்ணவும் உறங்கவும் பிறக்கவுமில்லை.
மண்ணும் சுமப்பதும் புதைக்கவுமில்லை.
எண்ணமும் செயலும் இறக்கவுமில்லை.
என்பதும் மறந்தால் உலகமுமில்லை..

கொலையும் கொள்ளையும் வெற்றியல்ல.
விலையின்றி சாபம் முற்றுவதல்ல.
உனக்கென ஒருதுளிக் கண்நீர்வீழ்ந்தால்
பிணமென உன்னை இகழாது உலகம்.

உழைப்பது ஒன்றே உயர்வின் சின்னம்.
பிழையற்ற வாழ்வே பெருமையின் வண்ணம்.
கனவுகள் விதித்து தன்னை நினைத்து
உணர்வுகள் மதித்து உன்னை உயர்த்து.

செவ்வழி வாழும் முறையுருவாக்கு!.
ஒவ்வொரு நாளும் வரலாறாக்கு!.
அவ்வழி உணர்ந்து பின்னவர் வாழ!
எவ்விதம் அடையாளம் உனைநீ ஆக்கு!

எம்ஜியார் அம்மா இதயத்தில் பதிக!
என்றும் அன்பில் அவர்வழி வாழ்க!
இருப்பது எல்லாம் கொடுப்பதற்கென்று 
என்றும் வாழ்க மனங்களில் நின்று.

கொ.பெ.பி.அய்யா.





Tuesday 29 July 2014

அழகு


அழகு! அழகு!

அழகு அழகு ஆசை அழகு
ஆசை அதுவும் அருமையானால்.
நியாயம் என்றே எதுவானாலும்
நினைபதெல்லாம் அழகேயாகும்..

அழகு அழகு பொய்யும் அழகு.
பழகும் பொய்யும் நன்மையானால்.
நிகழும் அமைதி நிலைக்குமானால்
நிசமும் பொய்யும் சமமேயாகும்.

அழகு அழகு உண்மை அழகு
அதனால் உன்முகம் ஒளிருமென்பதால்.
இயற்கை அதனில் வாழுமென்பதால்
இறையே உண்மை என்பதேயாகும்.

அழகு அழகு கோபம் அழகு.
முளைக்கும் கோபம் உண்மையானால்.
தழைக்கும் அன்பில் ஆர்வமானால்
தீவிரம் கூட தர்மம் ஆகும்.

அழகு அழகு வேகம் அழகு.
அவசியம் அவசரம் பயனேயானால்.
உயிரொன்று காக்க உதவுமானால்.
உரியநேரம் வேகம் ஆகும்.

அழகு அழகு தாமதம் அழகு.
ஆழ்ந்த அறிவும் தெளியுமானால்.
பின்விளைவதுவும் முன்னறிவானால்
பேணும் தாமதம் பொன்னறிவாகும்.

அழகு அழகு அமைதி அழகு.
அறிவது ஊறும் ஆறதுவானால்.
விலகும் வேண்டா தீவினையதனால்
நிலவும் அமைதி நெறிமுறையாகும்.

அழகு அழகு சமூகம் அழகு.
பழகும் உறவு பண்புள்ளதானால்.
வரவும் செலவும் வகை சரியானால்.
வாய்க்கும் சமூகம் வாய்மையாகும்.

அழகு அழகு அரசியல் அழகு.
அறமென மேவும் அரசியலானால்.
சுயநலம் பொய்யும் சூத்திரமானால்
பொதுநல அரசியல் வர்த்தகமாகும்.

அழகு அழகு நாகரிகம் அழகு.
பழகிய அவரவர் ஒழுக்கமானால்.
அவரவர் நடைமுறை அதுவேயானால்
பழக்கம் நாகரிகப் பண்பேயாகும்.

அழகு அழகு குடும்பம் அழகு.
அமைந்த இடங்கள் ஊரும் நாடானால்
பழகப் பழக உரிமை அதுவானால்
பரவும் குடும்பம் உறவாகும். .

அழகு அழகு மொழியும் அழகு.
அவரவர் கூட்டம் ஒலிமுறையானால்.
தகவல் சாதனம் என்பதேயானால்
தாராளம் கற்க மொழிகளாகும்.

அழகு அழகு மதமும் அழகு.
அறிவின் நெறியாய் அதுவாகுமானால்.
சத்தியம் ஒன்றே உத்தமமானால்
சந்நிதானம் மனமே மதமாகும்.

அழகு அழகு மனிதம் அழகு.
ஆறறிவுடன் அவனாய் வாழ்ந்தால்.
ஆதியும் அந்தமும் அவனறிவானால்
நீதியில் மனிதம் நிறைவதாகும்.

அழகு அழகு கவிதை அழகு.
ஆக்கம் சொல்லும் அழகு மொழியால்.
உள்ளம் பதியும் தன்மையதனால்
வெல்லும் கவிதை அழகாகும்.
 
அழகு அழகு ஆட்சி அழகு 
அம்மா ஆட்சி அறவழி என்பதால்.
அமைதி வளம் திறம் தொழிலால்
அம்மா ஆட்சி மேன்மையாகும்.

கொ.பெ.பி.அய்யா.




Monday 28 July 2014

ஆசை ஆசை.




ஆசை!ஆசை!

ஆசை!ஆசை!
அம்மா தொண்டனாய் வாழத்தான் ஆசை!
ஆயுள் சேவை செய்யத்தான் ஆசை!
மேடை முழங்க ஆசை!ஆசை!
 மிரண்டு எதிரி ஓடத்தான் ஆசை!

ஆசை!ஆசை!
அண்ணா தி.மு.க கழகம் ஆசை!
அம்மா ஆட்சி நிலையே ஆசை!
அமைதி இந்தியா ஆசை!ஆசை!
அம்மா பிரதமர் ஆளத்தான் ஆசை! 

ஆசை! ஆசை!
அம்மா காணத்தான் ஆசை! ஆசை!
அவரருள் பெறத்தான் ஆசை!ஆசை!
எழுதிப் போற்றத்தான் ஆசை! ஆசை!
என்னைத் தேற்றத்தான் ஆசை! ஆசை!



ஆசை! ஆசை!
கோட்டை வாழத்தான் ஆசை! ஆசை!
நாட்டை ஆளத்தான் ஆசை! ஆசை!
தமிழே தாயே ஆசை! ஆசை!
தரணி வாழ்வே! ஆசை! ஆசை!



கொ.பெ.பி.அய்யா.










 .

Saturday 26 July 2014

பாரதிப் பெண்



பாரதிப் பெண்.

பெண்ணென்றும் எண்ணித்தான்
பின்னைமொழி பகன்றாயோ!அம்மாவை
மண்ணென்றும் எண்ணித்தான்
திண்ணைமொழி துணிந்தாயோ!

என்னென்றும் அறியாமல்தான்
அம்மாவை நீ மொழிந்தாயோ!பழைய
பெண்ணென்றும் நம்பித்தான்
உன்னைப்பிழை முனைந்தாயோ!

பாரதியின் பாசறையில் அம்மா
பயின்று வந்த புயலென்றும்புதுமைச்
சாரதியாம் பாரதியின் தேர்
பார்த்தி என்றும் அறியாயோ!

கண்ணீரே கோலமென அந்தப்
பேதையல்ல கீசகனேபுரட்சிப்
பெண்ணவர் அம்மாதான் சாரதி
புதுமைப்பெண் என்றான் பாரதி

வளையல்கள் கொஞ்சும் மங்கையோ!
வலிமை கற்றார் பாரதியால்!—ஆளும்
கலைகள் அறிந்தவர் அம்மா.
மொழிகள் பலவும் தெளிந்தவர் அம்மா.

அன்னையின் வடிவம் அம்மா.
சக்தியின் சொரூபம் அம்மா-வஞ்சனை
கண்ணீரில் கரைந்தது இல்லை அம்மா.
 முன்னவர் வரைந்தது முடித்தார் அம்மா.

கொ.பெ.பி.அய்யா.

  



Sunday 13 July 2014

அம்மா ஆரம்பம் அம்மா.




அம்.......மா.........

அம்மா அம்மா ஆரம்பம் அம்மா.
ஆன்மா அவள்தான் அம்மா
இயற்கை அவளே அம்மா.
ஈகைப் பொருளே அம்மா.

உயிர் இயக்கம் அம்மா.
உணவு அதற்கும் அம்மா.
உடலும் தந்தாள்அம்மா. 
உலகம் சொன்னவள் அம்மா.

எண்ணும் எழுத்தும்  அம்மா.
எல்லாப் புகழும் அம்மா.
ஏற்றம் தூண்டல் அம்மா.
ஆக்கம் வேண்டல் அம்மா.

ஐயம் தீர்த்தவள் அம்மா.
ஐம்புலன் காத்தவள் அம்மா.
ஐந்தில் வளைத்தவள் அம்மா.
ஐநிலம் விளக்கம் அம்மா.

ஒலியும் மொழியும் அம்மா.
ஒளியும் வழியும் அம்மா.
ஓங்காரப் பொருளே அம்மா.
ஓம் எனும் மந்திரம் அம்மா.

ஔதசியம் ஊட்டிய அம்மா
ஔடதம் ஏற்றிய அம்மா.
ஔவை அவளே அம்மா.
செவ்வை வழியே அம்மா.

ஔதசியம்—பால்.

கொ.பெ.பி.அய்யா.