Monday 16 February 2015

அம்மாதான் வென்றது.

அம்மாதான் வென்றது.

அம்மாதான் வென்றது.
சும்மா மற்று என்றது.
மக்கள் மன்றம் தீர்ப்பெழுதி
திக்கெல்லாம் சேர்த்தது.

பொய்வான வேடிக்கைகள்.
செய்மோச சோடனைகள்.
மெய்தாங்கக் கதியிழந்து
தொய்நைந்து அழிந்தது.

இரண்டாயிரத்துப் பதினாறாம்
மிரண்டோடும் எதிராரும்.
எப்பவுமே அம்மாதான்
செப்பும் தமிழ் நின்றாளும்.

முடியட்டும் நரியாட்டம்.
விடியட்டும் இனியாச்சும்.
மீட்சி பெற்ற தமிழகம்
ஆட்சி என்றும் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 3 February 2015

விதியோ சதியோ!

விதியோ!சதியோ!

விதியோ சதியோ எதுதான் தாயே!
மதியால் முடிப்பாய் அதுதான் நீயே!
விரித்தவன் வீழ்வான் வலையில் அவனே
நெறித்தமிழ் ஆள்வாய் நிலையில் புகழே!

விதியும் சதியும் வினையென்ன செய்யும்
மதியும் கதியும் துணைமுன்ன செல்லும்.
தமிழினம் உனது தனிப்படை எதிர்த்தும்
எமனிடம் படவும் துணிவதும்  எவராம்.

விதியா மதியா விளையாடு தாயே !
சதியா கதியா சதுராடு நீயே!
பத்துக் கோடிகள் பலம்கொண்ட உன்னை
வெத்துப் பேடிகள் விழிக்குமோ முன்னை!

விதியென்ன சதியென்ன எதுஉன்னை வெல்லும்?
கதியென்ன அதுதன்னை மதிபின்னே தள்ளும்.
தாயிடத்தில் சேயணைய நாயெதுதான் தடுக்கும்?
கோயிலிடம் கூவைகளும் கூவியென்ன கெடுக்கும்?

விதிகெட்டு சதிபட்ட வினைக்கூட்டு முறியும்.
மதியெட்டு கதிதொட்ட கணையாட்டம் புரியும்.
பொய்யதனை மெய்யாக்க புனைந்தவொரு நாடகம்.
மையழித்துக் கைநீக்கி அணைந்துதிரை மூடாகும்.

கொ.பெ.பி.அய்யா.
.