Sunday 27 March 2016

தில்லு முள்ளு.

தில்லு முல்லு கள்ளம்.

தில்லும் முல்லும்  கள்ளத்தனமும்
சொல்லும் சொல்லும் செல்லாது.
பொய்யும் புரட்டும் புளுகினித்தனமும்
வையம் குமட்டும் கொள்ளாது.

என்னது கிழித்தாய் என்பதும்
சொன்னதும் ஒளித்த பண்பதும்
நெஞ்சது மறந்தும் மறையுமோ!
பின்னது விளைந்ததும் ஆறுமோ!

பதவியின் போதை மயக்கத்தில்
உதவும் அதிகார தயக்கத்தில்
விதியென ஈழம் எரிந்ததோ! 
சதியென தமிழும் புரிந்ததோ!

ஊழிடம் டெல்லி மிரட்டலா?
ஊழிடம் மீத்தேன் வரவேற்பா?
படிக்கத் தெரியா பாமரனா?.
அடிக்குப் பயந்த ஆம்பளயா?

குடிக்கப் பழக்கிய நல்லவரோ!
விடியலை முடக்கிய வல்லவரோ!.
வடிக்கும் ஆலைகள் யாருக்கோ!
முடிப்பேன் என்பது பேருக்கோ!

செங்குளவிக் கூட்டில்  தேனோ!
எங்களுக்கும் குத்தியாச்சி காதோ!.
வியாபாரி பேசசதும் மெய்யாமோ!
சுயலாபக் கொள்கையும் பொய்யாமோ!

தாலிக்குத் தங்கம் தந்த அம்மாவே
நாளைக்கும் மதுவிலக்கும் தெய்வமே!!
பட்டினி ஒழித்தம்மா பரா சக்தியே!
சத்தியம் அவராட்சி நிரந்தரமே!

இலையின்றி இல்லை வளமே!
நிலையென்ற சொல்லது புரட்சியே!
மலை வானம் கடல் போல்கவே
கலையாண்ட தலை வாழ்கவே!


கொ.பெ.பி.அய்யா.