Thursday 26 June 2014

எம்ஜிஆர் (குழந்தைப் பாடல்)


எம்ஜியாரு(குழந்தைப் பாடல்)

எம்ஜி ஆரு எம்ஜி ஆரு--அவர்
எங்கே வாழ் கிறாரு?—தமிழ்
எங்கே வாழ் கிறதோ—எம்ஜிஆர்
அங்கே வாழ் கிறாரு.

தமிழ் பேசும் இனமதிலே-இனிக்கும்
அமிழ்தமாக எம்ஜிஆர்—தமிழ்
மொழி யதிலே ஒலியாக-இரட்டை
இலையாகத் வாழ்கிறாரு.

அண்ணாவின் இதயத்திலே-அன்புக்
கனியாகத் எம்ஜிஆர்-சத்து
அன்னமிட்ட கையாக--கல்வித் 
தந்தையாக வாழ்கிறாரு.

ஏழையின் சிரிப்பினிலே-காணும்
இறைவனாக எம்ஜிஆர்-என்றும்
அறிஞரண்ணா காந்திவழி-தோணும்
ஒளியாக வாழ்கிறாரு.


நல்ல நல்ல பிள்ளைகளில்-நாளைத் 
தலைவராக எம்ஜிஆர்-நாட்டின்
நம்பிக்கையின் ஒளியாக-வாழும்
வழியாக வாழ்கிறாரு.

தர்மனாக தமிழனாக-தங்கத்
தலைவனாக எம்ஜிஆர்—வாழ்வில்
தனக்கெனவும் வாழாத-கொடை
வள்ளலாக வாழ்கிறாரு.


புரட்சி எனும் சொல்லிற்கே-புகழ்
அருத்தமாக எம்ஜிஆர்—நாட்டில்
வறுமை எனும் சொல்லையே-ஒழித்த
வாத்தியாராய் வாழ்கிறாரு.

நிலையான சூப்பர்ஸ்டாரு-இன்றும்
அரசியலில் எம்ஜிஆர்--என்றும்
இவருக் கிணை இல்லையேழ்-மக்கள் 
திலகமாக வாழ்கிறாரு.

கவிஞர். கொ.பெ.பி.அய்யா. 

Friday 20 June 2014

மாறவேண்டும் மனிதன்.


மாறவேண்டும் மனிதனே!

மாறவேண்டும் மனிதனே
தீரவேண்டும் மயக்கமே!
காரணங்கள் ஆராய்ந்தும்
சேர வேண்டாம் கொள்கைகள்.
தீர்வுக்குத் தேர்வென்ன?
தேடுங்கள் தெளியுங்கள்.

சாதியா வர்க்கமா? சமயமா சாத்திரமா?
ஆதியா அந்தமா?ஆதாரம் தேடாமல்
இம்சைதான் சாபமா?இச்சைதான் பாவமா?
ஆசைதான் அழிவாமா?காரணம் தோண்டாமல்
தீர்வுக்கு வழியென்ன தேடுவோம் வாருங்கள்
தேவைக்குப் பொருளென்ன நாடுவோம் சேருங்கள்.

சான்றோரின் சரித்திரமும் ஆன்றோரின் கருத்தறமும்
தீண்டாத பொருளாச்சோ! வேண்டாத சொல்லாச்சோ!
தருதலைத் தலைவர்கள் திருந்தாத தொண்டர்கள்.
ஒருதலை மயக்கமோ உருப்படா அடிமைகள்
சுயநல வேடத்தில் சொக்கித்தான் கிடந்திடும்
சுதந்திரம் பாவமோ சுபாஸ் விட்ட சாபமோ!

மனிதனை மாற்றத்தான் மார்க்கமென்ன காண்போமோ!.
மனம் நிறைந்த மயக்கத்தை தீர்க்கவென்ன செய்வோமோ!
மாலைக்காக சிலைகளா மனம் மாற்றா நிலைகளா?
வேலையற்ற வெறுங்கல்லா வீணான கலைகளா?
கல்வியெனும் தீர்க்கமதை கசடற வழங்கினோமோ!
வல்லவை ஏதுண்டு வளம்பெற மனித மனமோ!


கொ.பெ.பி.அய்யா.

Wednesday 18 June 2014

என்ன இது காதலா@

என்ன இது காதலா?

என்ன இது காதலா?
அன்பில் காதலா?இல்லை 
ஆசைக் காதலா?

அன்பில் நிறைந்த காதலானால்
அருமை குலையாது--அது
ஆசை வரைந்த காமமானால்
பாசம் பழகாது.

என்ன இது காதலா?
உண்மைக் காதலா?இல்லை
உறவில் காதலா?

உண்மை மணந்த காதலானால் 
கண்கள் பரவாது--அது 
உறவுக்கான கூடலானால்
கண்கள் பேசாது.

என்ன இது காதலா?
கருணைக் காதலா?இல்லை 
கடமைக் காதலா?

கருணை அருளும் காதலானால்
கைகள் தயங்காது--அது
கடமை வருடிய பரிவேயானால்
காமம் மயங்காது.

என்ன இது காதலா?
கனவுக் காதலா?இல்லை
காமக் காதலா?

கனவில் பூத்த காதலானால்
கற்பனை முடியாது--அது 
காமம் கூடிய மயக்கமானால்
காலம் விடியாது.

என்ன இது காதலா?
எண்ணக் காதலா?இல்லை
வண்ணக் காதலா?

எண்ணம் கொண்ட காதலானால்
என்றும் மாறாது--அது
வண்ணம் கண்ட நெருக்கமானால்
வறுமை தாங்காது.

என்ன இது காதலா?
என்னில்க் காதலா?இல்லை
என்மேல்க் காதலா?

பழகி என்னில் காதலானால்
விலகி ஓடாது—அது
பருவம் என்மேல் மோகமானால்
பழமை நிலையாது.

என்ன இது காதலா?
அழகில் காதலா?இல்லை
அறிவில் காதலா?

அழகில் நனைந்த காதலானால்
ஆயுள் வளராது—அது
அறிவில் வளர்ந்த பந்தமானால்
அன்பில் குறையாது.

என்ன இது காதலா?
இளமைக் காதலா?இல்லை
இயல்பில் காதலா?

இளமை குளிர்ந்த காதலானால்
முதுமை காயாது—அது
இயல்பில் முதிர்ந்த சொந்தமானால்
இதயம் தேயாது..

என்ன இது காதலா?
உணர்வில் காதலா?இல்லை
உடமைக் காதலா?

உணர்வில் கலந்த காதலானால்
கனவில் கலையாது—அது
உடமை நினைந்த உறவேயானால்
நினைவில் தொடராது.

என்ன இது காதலா?
உடல்மேல்க் காதலா?இல்லை
உள்ளத்தின் காதலா?

உடலால் தீண்டிய காதலானால்
உணர்வில் இணையாது—அது
உள்ளம் தழுவிய உருக்கமானால்
உயிரில் பிரியாது.

கொ.பெ.பி.அய்யா.




Monday 16 June 2014

அது அப்படித்தான்.


பாவம் அந்தப் பெண்மணி.!

ஜனநாயகம் பேசுவோர் பலர் ஜனநாயகம் மதிப்பதேஇல்லை.அது வெறும் பேச்சுக்கலை என்பதைப் புரிந்து கொள்ளாதவள் பாவம் அந்தப் பெண்மணி!

பழைய வரலாறை தெரிந்து புரிந்து கொள்ளாமல் ஒருவழி பாதையில் நுழைந்தவள் மறுவழிப் பாதை இல்லை என்று அறிந்து கொண்டபோது எந்த வழிப் பாதையில் நுழைந்தாளோ அந்த வழிப் பாதையில் எப்படியோ ஒருவிதமாக திரும்பி வந்ததும் அவள் நல்லநேரமே.எஞ்சியுள்ள நாட்களில் இனி தான் எண்ணியதைப் பெற முயற்சிக்கலாம்.அல்லது தனக்காகக் கொஞ்சம் வாழ்வதோடு நாட்டு மக்களுக்காகவும் வாழ்வது பற்றியும் யோசிக்கலாம்.

மகளே!நீ இருந்த இடம்.ஒரு தனியொரு ஏகாதிபத்தியம் நிறைந்த இடம்.அங்கே அவர்களின் சொந்தத்திற்கே எல்லா உரிமைகளும்.மற்றவர்கள் அவர்களுக்காக தங்களைத் தியாகம் செய்துகொள்ளத் துணியவேண்டும்.யாரும் தங்களுக்காக வாழக் கூடாது.அவர்களுக்காகவே மற்றவர்கள் வாழ்ந்தாக வேண்டும்.அதுதான் அவர்களின் இயக்கம் கொண்டுள்ள கொள்கை லட்சியம் எல்லாம்.அப்படி இருந்தால் அவர்களிடம தாக்குப்பிடிக்கலாம்.எப்போது அன்னியர் ஒருவர் அவர்களின் வாரிசை மிஞ்சுவதாக முந்துவாரோ அல்லது மக்கள் செல்வாக்கைப் பெறுகிறார் என்று தோன்றுவாரோ.அப்போதே அவர் ஓரம் கட்டப்படுவார் அல்லது தூக்கிவீசப்படுவார்.அப்படி வீசப்பட்டவர்கள்தான் புரட்சியார்,போர்வாளார் எனப்போற்றப்பட்டவர்கள் எல்லாம்.இன்னும் எத்தனையோ லட்சியவாதிகள் எல்லாம் அப்படித்தான் கழட்டிவிடப்பட்டனர் என்பதை நாடறியும்.ஆனால் பாவம் நீ ஏன் அறியவில்லை.

நீ ஏதோ ஒன்றை எதிர் பார்த்துக் காத்திருந்திருப்பாயானால் அது இதுவாகத்தான் இருந்திருக்கும்.ஏனென்றால் என்றும் இவர்களிடம் பொதுவான எதிர்பார்ப்பு எல்லோர்க்கும் இது ஒன்றுதான் நிச்சயம்.பாவம் யாரை நீ முந்த நினைத்தாயோ.?நூறோடு நூற்று ஒன்றாக இருந்திருந்தால் நீயும் வேரோடு விழுதாக அவர்களுக்கு தாங்கலாகவே இருந்து காலத்தை ஓட்டியிருக்கலாமே.சரி விடு என்றிருந்தாலும் ஒருநாள் இது நிகழ்வது உறுதிதான்,அது இன்று நிகழ்ந்த்ததும் நல்லதுதான்.

இனிமேல்தான் உனக்கு நல்லநேரம் ஆரம்பம்.நல்லஇடமாகபார்த்துஉன்னை இணைத்துக்கொண்டு இனியாவது உனக்காக முடிந்தால் நாட்டுக்காகக் கொஞ்சம் பயனுள்ள வகையில் வாழ்வாயாக.

கொ.பெ.பி.அய்யா.



 
கொ.பெ.பி.அய்யா.

கரட்டை இலை.



எம்ஜிஆர் இரட்டை இலை

இலைஇலை இரட்டை இலைங்க
எம்ஜியாரு எழுதி வரைஞ்ச
இரட்டை இலைங்க--எம்
நெஞ்சில் நிலையா பதிஞ்சு
நிறைஞ்ச இரட்டை இலைங்க.

அம்மையாரும் எம்ஜியாரும்
அமைஞ்ச நல்ல தமிழுக்கு
அழகு முகமுங்க—அந்த
இரண்டு முகம் இரண்டு இலை
என்பதுதான் இரட்டை இலைங்க.

பசுமையான இரட்டை இலைங்க
பழகி நல்லா புடிச்சுப்போன
பாச இலையுங்க—சின்னம்
எத்தனைதான் இருந்தாலுங்க
இழுக்குமிந்த இரட்டை இலைங்க.

இயற்கை அது சொல்லுவதும்
இரண்டில் எல்லாம் அடங்குவதும்
இப்படித் தானுங்க—அது
வெற்றி எனக் காட்டுவதும்
இரட்டை விரல் இரட்டை இலைங்க

பாத்துப் பழகின இரட்டை இலைங்க.
பதிஞ்ச மனசு இரட்டை இலைங்க.
மறக்க இல்லீங்க—எங்க
உசுரு போல உதிரத்தோட
உறஞ்ச சின்னம் இரட்டை இலைங்க.

போடுங்க போடுங்க ஓட்டுப் போடுங்க
பொத்தான் நல்லா அழுத்திப் போடுங்க.
இரட்டை இலைங்க-நம்ம
புரட்சித்தலைவர் இரட்டை இலைங்க
புரட்சிதலைவி மீட்ட இலைங்க.

கொ.பெ.பி.அய்யா.






Saturday 14 June 2014

மக்கள் மனங்களில் அம்மா கட்டுரை








மக்கள் மனங்களில் அம்மா./தலை வணங்காத் தாய்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் மக்கள் மனங்களில் தனிச்சிறப்புடன் தனியொரு இடத்தில் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் போற்றிப் புகழ்ந்து கொண்டாடக்க்கூடிய உன்னத நமது காலத்து அரசியல் மாமனிதர்கள் என்று எடுத்துக்கொண்டால் தந்தை பெரியார்,அறிஞர்.அண்ணா பெருந்தலைவர் காமராஜர் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் அது மிகையாகாது.அந்த வரிசையில் இன்று அம்மா அவர்களும் தமிழ் நெஞ்சங்களில் இடம் பெற்றுள்ளார் என்றால் அவரின் தன்னலமற்ற அரசியல் வாழ்க்கை என்பதுதான் உண்மை.

முந்தைய தமிழக அரசியல் என்று வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கும்போது எவரெல்லாம் குடும்பங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களை தன் மக்களாக ஏற்றுக்கொண்டு அந்த மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அற்பணித்தார்களோ அவர்களே மக்கள் தலைவர்களாக மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றார்கள்.அவ்வாறே இன்று புரட்சித்தலைவியும் தமிழகம் போற்றும் தனிப்பெருந்தலைவியாக தமிழ் மக்கள் மனங்களில் தனி இடம் பெற்றுள்ளார்.

அரசியல் என்பதும் ஒரு துறவறம்தான்.அதுவும் ஒரு பற்றற்ற நிலைதான்.தனக்கென்றோ தன் உறவுக்கென்றோ தன் குடும்பத்திற்கென்றோ இல்லாமல் எவர் ஒருவர் தன் நாட்டு மக்களுக்காக அரசியல் வாழ்வை மேற்கொள்கிறாரோ அவரே மக்கள் நாயகராக பரிமளிககிறார்.அப்படித்தான் இன்று அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள் மக்களுக்காக என்று ஒரு முடிவை எடுக்கும்பொழுது அதனால் தனக்கென்ன நேரும் என்றும் எண்ணாமல் துணிச்சலாக மக்கள் பிரச்சனைகளை அணுகக்கூடிய தலைவராக விளங்குகிறார்.

முல்லைப் பெரியாறுப் பிரச்சனை மற்றும் காவிரிப் பிரச்சனை எதுவானாலும் அதை எதுவரை சென்று போராடிப்போராடி உரிமையை மீட்டெடுக்க முடியுமோ அதுவரை தளராது சென்றுசென்று வாதாடிவாதாடி நீதிமன்றங்கள் மூலமாகவும் மீட்டெடுக்கக் கூடிய நம்பிக்கையும் துணிவும் உள்ள ஒரு தலைவர் இன்று இந்தியாவில் உண்டும் என்றால் அந்த ஒரே தலைவி நம் புரட்சித்தலைவி அம்மாதான் என்றே தமிழராகிய நாம் பெருமையோடு மார்தட்டிக் கொள்ளலாம்.

அது போலவே ஈழத்ததமிழர் பிரச்சனையிலும் அதற்கு எதிரான அரசுதான் மத்தியில் ஆள்கிறது என்றே தெரிந்தாலும் எதற்கும் அஞ்சாமல் மாநில சட்டமன்றத்தில் தைரியமாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் நடுவண் அரசுக்கு எதிராகவும் இலங்கை அதிபர் ராசபச்சே போர்க்குற்றவாளிதான் என தீர்மானம் இயற்றும் துணிவும் வேறு எவருக்கு வரும்.இது ஒரு உலகத் தமிழரின் உரிமைக்கான ஓங்கிய குரலின் வரலாற்றுப்பதிவு ஆகும்..

ஈழத்தமிழர்மூவர் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தண்டனைக்குறைப்பு மற்றும் விடுதலை விவகாரங்களில் துணிச்சலாக ஒரூ தாயுள்ளத்தோடு சட்டமன்றத்தில் ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றும் வரை உச்சம் சென்று தமிழ் உணர்வோடு செயல்பட்ட நம் அம்மாவின் உயர்வேங்கே?அய்யோ அய்யோ இந்த தேர்தல் காலத்தில் அந்த மூவரும் விடுதலை என நீதிமன்றம் அறிவித்துவிட்டால் நமக்குத் தேர்தல் முடிவு பாதகமாக அமைந்துவிடுமே .அதனால் தீர்ப்பு  தள்ளிப்போகட்டும் எனகடவுளைவழிபட்டபகுத்தறிவாளர்களின்சுயநலம்எங்கே?என்ற நன்மை தீமை  ஆராய்ந்து பார்த்துத்தான் மக்கள் தீர்ப்பை சரியாக வழங்கியுள்ளார்கள்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகளைக் கூட அவர் நினைத்திருந்தால் நடுவண் அரசு அதிகாராம் பெற்றவர்களின் முன்னே பணிந்து நின்று நீக்கியிருக்க முடியும்.ஆனால் எவர் முன்னும் தலை வணங்கத் துணியாத அம்மா அவர்கள் சட்டப்படி தன்னைக்குற்றம் அற்றவராக நாட்டுக்கு மெய்ப்பிக்கவே அவர் நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.சர்க்காரியா வழக்கு எப்படிக்காணாமல் போனது என்று மக்களுக்குத் தெரியாதா என்ன?

தன்னைச்சுற்றி வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக நான் எதுவரையும் முயன்று எட்டிப் பறிப்பேன்.அதனால் எனக்கு என்ன நேர்ந்தாலும் அதுபற்றி எனக்குக் கவலைகள் இல்லை.என் மக்களின் சுபிட்சம் ஒன்றே என் குறிக்கோள்.அதுவே என் மூச்சு என வாழும் ஒரே தலைவி நம் அம்மாதான்.அம்மா என அன்போடு இன்று தமிழகம் உச்சரிக்கும் ஒரே தாரக மந்திரம் இதுதான்.இது என்றென்றும் நிரந்தரம்.

தொடர்ந்தும் தமிழ் மண்ணில் அம்மாவின் ஆட்சியே தொடர்ந்திருந்தால்.தமிழ் நாட்டில் மின்வெட்டு என்ற சொல்லே தென்பட்டிருக்காது.விலைவாசி உயர்வு விண்தொட்டிருக்காது.வறுமை எனும் சாபம் ஒழிக்கப்பட்டு வளமை எனும் தீபம் ஏற்றப்பட்டு பசுமை மிளிர்ந்திருக்கும்.நீரில்லை சோறில்லை எனும் கொடுமைகள் நீங்கி சுபம் பெற்றிருக்கும்.வன்மைகள் அங்கொன்றும் இங்கொன்றும் கூட இல்லாமல் மண்விட்டு மறைந்தே ஒழிந்தும் தொலைந்தே போயிருக்கும்.

ஆகவே நாம் இனிமேலாவது விழித்திருப்போம்.வில்லங்கம் இனி நிகழ்ந்துவிடாமல் தமிழகத்தைக் காத்திருப்போம்.நிசம் என்ன?பொய் என்ன ?என்பதை இப்போதாவது நாம் புரிந்துகொண்டோமே.அது போதும்.நல்லவேளை ஆண்டவன் செயலால் முழுமையாகப் பராகரியாவதற்குள் விழித்துக்கொண்டுவிட்டோம். உசாராக இருப்போம்.அம்மாவின் அற்பணிப்பு சேவைகளுக்குக் நாம் கரங்களாக உயர்ந்து உதவுவோம்.


வாழ்க அம்மா.வளர்க அம்மாவின் ஆட்சி.

என்றும் ஒலிக்கட்டும் எம்.ஜி.ஆர் எனும் இனிய நாமம்.

கொ..பெ.பி.அய்யா.

Friday 13 June 2014

சிங்கம் ஒன்றுதான்.


சிங்கம் ஒன்றுதான்.

சிங்கம் ஒன்றுதான் சிலுக்குதடா.
சீற்றம் கொண்டுதான் சீறுதடா.
எங்கே தேடுறே துணைக்கு ஆளுடா?
எதிர்க்கத் துணிவது எத்தனை பேருடா?

ஆம்பளை நீயென்றால் ஆயுதம் எதற்கடா?
ஆளா ஒத்தையா மோதத் துணிவயாடா.
அம்மா பேருன்னா அதிரும் உலகமடா..
சும்மா இல்லடா தர்மம் துணையடா.

துரியோதனக் கூட்டமே உன்பின்னே
தூரம் திரும்பிப் பாரடா.
துச்சாதனன் அவன் அச்சம்
தொடை நடுக்கம் கேளடா.
எண்ணிக்கை எதற்கு
இடத்தை நிறைக்கவாடா?
ஒன்றெனச் சிங்கம்
உறுமி நின்றால் போதுமடா.

புரிந்த பாவங்கள் உன்னை
போரில் எதிர்க்குமடா.
புரிந்தும் உன்படை கலங்கி
புறமுதுகு காட்டுமடா.
செய்த தீவினை சகுனி போலடா   
சேர்ந்தே அழிக்குமடா.
சிந்திக்கும் மனமே பலமே
சத்தியம் இதுவே ஜெயமே!

கொ.பெ.பி.அய்யா.




Thursday 12 June 2014

மழை நீர் சேகரிப்போம்.




மழை நீரை சேகரிப்போம்.

அம்மாசொல் கேட்டோமோ அய்யகோ!
சும்மாதான் விட்டோமோ 

அவசரம் அறிந்துதான் சொன்னாரே.
அகிலமும் உணர்ந்தது அம்மாசொல்-வாழ்த்தி
வீடெங்கும் நாடெங்கும் செய்யுவோம்

வீணாகும் நீரை தேனாக சேகரிப்போம்.

தண்ணீர் தண்ணீர் என தவிக்கும் காலமும்
தரணியில் வரும் கோலம்—அதை
எண்ணி எண்ணி இன்றே நாமும்
சேகரிப்போம் மழை நீரை.

நிலத்தடி நீர்மட்டம் முழத்தடி முன்னூறும்
இழுத்தடி கீழ்மட்டம் இறங்கியும் போனதும்
அலுத்துத்தான் சாகுது அம்மாடி நோகுது.
வெளுத்துத்தான் விவசாயம் வீணாகி வாடுது.

என்றோ ஒருநாள் கண்டால் திருநாள்
அந்தோ அதுவும் கடலுக்குப் போனால்
ஊருக்குப் பாவம் யாருக்கு லாபம்?
சேகரிப்போம் மழை நீரை.

ஒரு சொட்டு நீருக்கு உலகமே தேடுது.
பெருவெள்ளம் கூடியே கடலுக்கு ஓடுது.
ஒரு சொட்டு நீருக்கு உலகப்போர் ஆகலாம்
உணர்ந்திந்த அவசரம்  சேகரிப்போம் மழை நீரை.

தேங்கிய கடல்நீரை ஏங்கியே கரையில்
நோங்கியே நின்றாலும்—தனக்குள்
வாங்கிய நீரை தவிக்கும் உயிருக்கும்
தந்தாலும் பயன்படுமா?



கூரை நீரை பூமிக்குள் புதைப்போம்
பூமி நீரை கரைகட்டித் தடுப்போம்.
ஒவ்வொரு துளியும் உயிரெனக் காப்போம் 
ஔவ்வை மொழியென அம்மாவை மதிப்போம்.

தண்ணீர் தண்ணீர் என தவிக்கும் காலமும்
தரணியில் வரும் கோலம்—அதை
எண்ணி எண்ணி இன்றே நாமும்
சேகரிப்போம் மழை நீரை.


கொ..பெ.பி.அய்யா.


  


காக்கும் தெய்வம்

























அம்மா! அம்மா!

தாயே தமிழே தன்னிகரில்லாப் புகழே வாழ்க!
நீயே நிசமே உன்னிகரில்லா விண்ணே வாழ்க!
நோயே இலலா உலகைப் படைத்தாய் வாழ்க!
தீயே நீயே தீவினை அழிக்கும் தெய்வமே!வாழ்க!

வறுமை இல்லா வண்ணம் செய்தாய் வாழ்க!
சிறுமை சொல்லா திண்ணம் எய்தாய் வாழ்க!
அருமைத் தாயே அறிவியல் அறிந்தாய் வாழ்க!
பெருமை பெண்மை பேசிடச்சிறந்தாய் வாழ்க!


பசியெனும் சொல்லை பழக ஒழித்தாய் வாழக!
பிணிஎனும் சொல்லையும் விலக அழித்தாய் வாழ்க!
அம்மா உணவு அம்மா குடிநீர் அம்மா உப்பு வாழ்க!
அம்மா கனவு ஆயிரம் இன்னும் மலரும் எல்லாம் வாழ்க!

அம்மா அம்மா அகிலம் எல்லாம் சொல்லும் சொல்லே வாழ்க!
அம்மா அம்மா அவர் வழி தொடரும் அவணி பின்னே வாழ்க!
அம்மா அம்மா அது திரு மந்திரம் முழங்கும் உலகே வாழ்க!
அம்மா அம்மா தமிழுக்குச் சொந்தம் பெருமை நமதே வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.