Monday 6 February 2017

அம்மா புகழ் வாழ்க!

மாண்புமிகுஅம்மாவுக்கு
கவிதாஞ்சலி.
=========================================

தமிழகத்தின் நிலையான புகழ் , கழகத்ததின் உயிரான அம்மா எங்கள்  இதய தெய்வம்,தங்கத் தாரகை.மாண்புமிகு புரட்சித்தலைவி அவர்களை ஆறாவது முறையும் ஆட்சிப்பீடம் அமரவைத்து அழகு பார்த்த தமிழக மக்களுக்கு கோடானு கோடி நன்றி. மக்களின் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆறாவவது முறை பொற்கால ஆட்சிதான் மீண்டும்மீண்டும் தொடர்கிறது. இன்றுவரை 77.88 மில்லியன் தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சிறக்க 68211.05.கோடி பணம் ஒதுக்கி பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற  ஆணை பிறப்பித்து இனி தமிழ் நாட்டில் ஏழை எவரும் இல்லை என்ற  இலக்கை நோக்கிய புதிய வரலாற்றுப் புரட்சி சரித்திர நாயகி-கண்கண்ட தெய்வம் எங்கள் அம்மா அவர்கள் இன்றும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் அய்யா பன்னீர்செல்வம் வடிவில் தமிழகத்தின் காவலராக, நிரந்தர முதல்வராக நல்லாட்சி செய்து வரவும் அம்மா அவர்கள் அய்யா பன்னீர்செல்வம் அவர்களை அடையாளம் காட்டித்தான் சென்றுள்ளார். இனியும் ஆயிரம் ஆகினாளும் அம்மாவைப்போல் மாபெரும் மக்கள் சக்திகொண்ட ஒரு தலைவியோ தலைவரோ பிறப்பார் என்றால் அது ஒரு வரலாற்று அதிசயமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.அதிசயப்பிறவியான எங்கள் அம்மாவின் புகழையும், “ஜே.ஜெயலலிதாவாகிய நான்” என்ற அந்த  மந்திரச்சொல்லையும் மரணம் என்ற ஒன்றினால் மறைத்துவிடும் வல்லமை இறைவனுக்கும் கிடையாது.அன்று மானுடப் பிறவியாக வாழ்ந்த எங்கள் அம்மா இன்று காற்றாக, கடலாக, ஆகாயமாக, நமது காவல் தெய்வமாக,கதிரவனின் கதிர்களாக கரங்கள் நீட்டி ஆசிர்வதித்துக்கொண்டு நம்மைக்காத்துவருகிறார் என்பதே சத்தியமாகும்.அந்த சத்தியத்தின் மீது தமிழ் மக்களின் சாட்ச்யாக விசுவாசம் கொண்டு அந்த வாழும் தெய்வத்திற்கு எனது கவிதாஞ்சலியை காணிக்கையாகப் படைத்து நெஞ்சார வணங்கி சமர்ப்பிக்கிறேன்..நன்றி. 
===========================================================
மீண்டும்மீண்டும் அம்மா ஆட்சி
நீண்டும்நீண்டும் ஆண்டும் மாட்சி
வேண்டும்வேண்டும் தெய்வ சாட்சி
ஆண்டும்ஆண்டும் வாழுங் காட்சி.

கொ.பெ.பி.அய்யா.



1வினை தீர்க்கும் விநாயகனே

வினை தீர்க்கும் விநாயகனே
துணை செய்வாய் கணபதியே--வல்
வினை நீங்கி மீண்டும் மீண்டும்
இணை அம்மா ஆட்சி வேண்டும்.

நெஞ்சாரப் பொய் பேசும்
வஞ்சகரின் வாய் வீசும்--தீய
பஞ்சமாப் பாவங்களும்
பஞ்சாக்கு பஞ்சமுகா.

இல்லை நீ என்போரை
அல்லல் பேய் பொல்லோரை-விட
பல்பிடுங்கி பயனாக்கி
நல்வழங்கு நந்தனா!

ஓங்கார கண பதியே
தீங்காற திரு நிதியே--கொடு
ஆங்கார அவலங்களை 
நீங்காற்று ஐங்கரா!

செம்மை யாய் ஓராட்சி
அம்மை யின் நேராட்சி--கெடு
வெம்மையேதும் நேராமல் 
வெற்றிசெய் மந்திரா!

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­
--------------------------------------------------
2இறைவா உனக்கும் இரக்கமில்லையோ!?


இறைவா உனக்கும் இரக்கமில்லையோ!
இறைஞ்சும் தமிழுக்கும் அருத்தமில்லையோ!
கல்லையும் தெய்வமாய் கும்பிட்டோமோ-வெறும்
சொல்லையும் மந்திரமாய் நம்பிட்டோமோ!

வாழவைத்து சோதிக்கவும் பொறுமை யில்லையோ!
வாதாடி ஜெயிப்பதையும் பொறுக்க வில்லையோ!
ஆளைவைத்து சூன்யமும் வைத்ததாயோ-அம்மாவை
ஊழைவைத்து மேலுலகை ஆளவைத்தாயோ!

---------------------------------------------------------------------------------
3நம்ப மனம் மறுக்குதே!
பூந்தேரில் பறந்து பொன்சொர்கம் விரைந்து
அம்மா நீ போனதென்ன!நாடும் அனாதை ஆனதென்ன!
எட்டாத உயரமெல்லாம் எட்டிப் பிடித்து
அம்மா வானம் புகழாக
எவரும் செய்யாத சாதனையும் செய்து முடித்து
அம்மா ஏழைகள் தாயாக.
வறுமை இல்லாத நாடு. பெருமை பெற்றொரு பேரு
கண்டாறும் நேரம் சண்டாளக் காலம்
கொண்டேக விதியோ! என்றேங்கும் தமிழோ!
இது நடக்கும் என நினைக்கவும்
மனந்தான் நம்பவும் மறுக்குதே!
தாயில்லா குழந்தைக் கெல்லாம் தாயாகி வளர்த்து
அனாதை பேர் நீக்கினாய்.
நீயில்லாக் கொடுமைக் கின்று நேரந்தான் பொறுப்பு.
இறைவனே பாவியாகினான்.
நீயில்லாத நாடு! தாயில்லாத வீடு!
யாரென்ன சாபம்! வேறென்ன பாவம்!
விதிக்கென்ன கேடோ! வினையெங்கள் பாடோ!
இது கனவா என விழிக்கவும்
உயிர்தான் துடிக்கவும் மறுக்குதே!
நல்லவர் வாழவும் பொறுக்கவும் இல்லையோ!
கடவுள் நீ சொல்லையா?
வல்லவர் ஆளவும் விருப்பமும் இல்லையோ!
வஞ்சகன் நீ ஆண்டவனே!
தாயில்லா உனக்கும் தாயருமை தெரியுமா?
சேயில்லா மனசுக்கும் சேயழுகை புரியுமா?
நாதியில்லா பாவிக்கும் நாட்டுநிலை விளங்குமா?
இது நிசமா என விளக்கவும்
தருமம் பதில் மறுக்குதே!
---------------------------------------------------------------------------------------
ஏழை இல்லா தமிழகம்.

விரைந்தே எழுக வீர மகனே!
விடியுங் காலை வெளுக்கிறது சுகமே.
விலகும் இருளில் ஒளியாய் நானே!

வேலையில்லை என்றே நீயும் ஏங்காதே!
வேளை வருகிறது வீட்டுக்குள் தூங்காதே!
ஞாலம் முயல்க காலம் நானே.

ஏழை என்ற சொல்லே இல்லா
வாழுந் தமிழகம் ஒன்றே செய்வோம்.
வாழ்வு சமமென வரமும் நானே.

அம்மாதானே அழைக்கிறேன் நானே!
அண்ணா எம்ஜியார் அவர்வழி தானே
அன்பு மகனே ஐயமேனோ அம்மா நானே!



------------------------------------------------------------------------------------
5நிரந்தர முதல்வர்.

சுதந்திர தினமெல்லாம்
நிரந்தரம் கொடியேற்றும்-நிரந்தர
முதல்வர் அம்மா நிழலே.
வரம் தந்த மக்கள் வாழ்க!

கோட்டைக்கு அழகுதான்
நாட்டுக்குப் பெருமைதான்-தமிழக
ஆட்சிக்கு அம்மாதான்
வாழ்த்துதே கொடியுந்தான்.

பறக்குது பார் கொடி வீசி!
சிறப்பு அம்மா புகழ் பேசி-அது.
உரக்கச்சொல்லும் தேசியமே
உறுதி அம்மா வாசகமே!

பெண்ணியம் மதிக்கும் புண்ணியம்
நன்னியம் பதிக்கும் தமிழகம்.-என்றும்
அன்னையின் அரசு கோலோச்சும்
தன்னயம் தமிழால் தான்சிறக்கும்


----------------------------------------------------------------------
6வாழும் தெய்வம்.

வாழும் தெய்வம் போலவே!
ஆளும் மனிதம் வாழ்கவே!
மேலும் நூறு ஆண்டுகள்
நீளும் அம்மா ஆட்சியே!

எல்லா உயிரும் தன்னுயிராய்
எண்ணும் கருணை வாழ்கவே!
நல்லார் உருகும் வேண்டல்கள்
வல்லான் அருளும் தூண்டல்கள்.

முழு மதியாய் மீண்டும் அம்மா
நலம் புதிதாய் ஆண்டும் அம்மா
மறு பிறவியாய் அம்மாதான்
நிரந்தரமாய் பன்னீர்தான்.
------------------------------------------------------
7என்றும் அம்மாதான் எமக்கு
.....................................................................

என்றும் அம்மா தான் எமக்கு.
ஒன்றும் அந்த சொல்லே உயிர்க்கு.
கண்கள் பட்டுத்தான் இருக்கு-விலகும்
காற்றுப் போலத்தான் எமக்கு.
என்றும் அம்மாதான் எமக்கு

எங்கள் உயிர் எல்லாம் எதற்கு.
எல்லாம் உனது புகழ்பாடத்தான் இருக்கு.
பிள்ளைகள் கடன் என்ன கணக்கு-உன்னை
எண்ணாமல் பொழுதுண்டோ எமக்கு.
என்றும் அம்மாதான் எமக்கு

அநாதி என்னும் பாவம் இல்லை
அம்மா தொட்டில் தாலாடும் பிள்ளை.
பசியெனும் கொடுமை தீர்த்தும்-நீயே
பரம்பொருள் வறுமை நீர்த்தாய்..
என்றும் அம்மாதான் எமக்கு
---------------------------------------------------------------
வருகிறார் அம்மா வருகிறார்.

வருகிறார் அம்மா வருகிறார்
தருகிறார் ஆட்சி தருகிறார்.
வேதா இல்லம் மாதாதானே
சாதாரணமா என்றும் போலே
வருகிறார் அம்மா வருகிறார்
தருகிறார் காட்சி தருகிறார்.

குழந்தை மனம் சிரிப்புப் பாரு!
மலர்ந்த முகம் நிலவைப் பாரு!
அழகு மொழி தமிழைப் பாரு!
பிறந்த மறுபிறவி அம்மா பாரு!
வருகிறார் அம்மா வருகிறார்.
தருகிறார் ஆட்சி தருகிறார்.

பத்துக் கோடி தமிழருக்கும்
பெற்ற தாயும் ஒருவர்தான்.
ஒன்றே குடும்பம் போலவே
என்றும் தமிழகம் ஆளவே
வருகிறார் அம்மா வருகிறார்
தருகிறார் ஆட்சி தருகிறார்
...................................................................

 9பிறந்துவா!அம்மா பிறந்து வா!

பிறந்துவா!அம்மா பிறந்து வா!
திறந்து வானம் பிறந்து வா!
பிறந்துவா!அம்மா பிறந்து வா!

எத்தனை சிகரம் கண்டாயோ
அத்தனை  உயரம் சென்றாயோ!
பிறந்துவா!அம்மா பிறந்து வா!

கோடிக் கோடி உயிர்கள் இங்கே
தேடித் தேடி உன்னைத் தவிக்கிறது.
பிறந்துவா!அம்மா பிறந்து வா!

வாடா மலரே உன்னையும்
சூடா மரணமும் சூடுமோ!
பிறந்துவா!அம்மா பிறந்து வா!

------------------------------------------------------------------------
10 ஸ்ரீரங்கப் புகழே வா!வா!

காவிரித் தாயே பூவிரித்தோம் வா!வா!
பாவரித் தானே நாவிரிக்கும் வா!வா!
நீமுளைத்த நிலமாமே ஸ்ரீரங்கப் புகழாமே
சாமிரங்கத் தலமாமே சிறப்பேநீ வா!வா!

நோயென்ன செய்ததோ வா!வா!
நீயென்ன தொய்வதோ வா!வா!
போராடி வெல்வதுன் யோகம் அல்லவா!
வீராளி வென்றுநீ விதியேறி வா!வா!

அன்னதானத்  தாயே ஆரோக்யமாய் வா!வா!
மன்னுயிர்க் காவலே மாதரசி வா!வா!
ஆலயங்கள் மணிமுழக்கம் அம்மான்னு இறைஞ்சுதே!
காலையெழும் கதிரவனின் கதிரொளியாய் வா!வா!

சேயிங்கு வாடுகிறோம் சிறகணைக்க வா!வா!
தாயுன்னை தேடுகிறோம் தந்தணைக்க வா!வா!
மக்களால் வாழும்நீ எக்கணந்தான் மறப்பாயோ!
மக்களுக்காக ஆளும்நீ இக்கணம் பிறந்து வா!வா!
------------------------------------------------------------------------------
11 ஆயிரம் காலம் அம்மா

அம்மா அம்மா  ஆளும் தமிழே!
ஆருயிர்க் கெல்லாம் வாழும் உயிரே!
கருணை வள்ளல் காமாட்சி புகழே!
வறுமையை வென்ற வல்லரசி நீயே.

கோடிக் கோடி உயிரின் கூட்டமே!
கூடிக் கூடி உறவின் தோட்டமே!
தேடித் தேடி காக்கும் தாயே!
நீடி நீடி நித்தியம் வாழ்வே!

இயக்கப் பிறந்த  இறைவி நீயோ
ஆக்கப் பிறந்த ஆண்டவி நீயோ
அருளப் பிறந்த அவதாரம் நீயோ
ஆளப் பிறந்த அம்மா நீயோ!

ஆயிரம் காலம் ஆனாலும் அம்மா
ஆதியும் போலும் அம்மாநீ அம்மா.
தாயன்றி உலகம் தானேது அம்மா.
நீயன்றி ஆள நிகரேது அம்மா!

-----------------------------------------------------------------------------------
12 ஜெய சக்தி அம்மா.

சக்தி சக்தி ஜெய சக்தி  அம்மா!
பக்தி பக்தி பயபக்தி அம்மா!
பற்று பற்று தமிழ்ப் பற்று அம்மா!
வெற்றி வெற்றி வீரம்நீ அம்மா!

பொன்மனச் செம்மல் கழகம் கண்டார்
அண்ணா தி.மு. கழகம் என்றார் .
கழகம் நெஞ்சக் கோவில் கொண்டார்.
நிலவும் தெய்வம் அம்மாவிடம் தந்தார்.

அம்மா என்றால் தமிழகம் அருத்தம்!
சும்மா சொன்னால் பொருந்துமோ பொருத்தம்!
மக்களால் ஆளும் மாநிலம் தமிழகம்.
மக்களில் வாழும் அம்மாவின் பொன்னிலம்.

ஏழை என்றும் எவரும் இல்லை .
எங்கள் அம்மா நாட்டில் சொல்ல!
மேலை நாடும் நாடும் தமிழகம்
வேலை கூடும் விளையும் தொழிலகம்.
-------------------------------------------------------------------------

13 ஒரே மக்கள் தலைவர்..

உலகம் எல்லாம் பாராட்டும்
ஒரே தலைவர் அம்மாதான்.
மக்கள் தலைவர் எனப்போற்றும்
மக்கள் அரசும் அமெரிக்காதான்.

மக்களுக்காக வாழ்ந்த அம்மா
மக்களால் ஆண்ட அம்மா.
மக்கள் திலகம் எம்ஜியாராய்
மக்கள் தலைவர் அம்மாதான்.

கழகம் என்பதும் அம்மாதான்
காவல் தெய்வமும் அம்மாதான்.
உலகம் நெறிபடும் ஆணையந்தான்
கோவிலாய் வழிபடும் ஆலயந்தான்.

நாடே வீடாம் அம்மாவுக்கு
தேடே மக்கள் வாழ்வுக்கு.
பாடே அம்மா மக்களுக்கு.
ஈடே யாரோ புரட்சிக்கு!

தேவை அறிவதும் அம்மாதான்
நோவை உணர்வதும் அம்மாதான்.
சேய்கள் நிலைமை எண்ணியுமே
தாயின் தலைமை புண்ணியமே.
----------------------------------------------------------------------------------------------------------------------

14அம்மாவின் வெற்றி-காவேரி விடுதலை.

தனக்கென எதுவும் எண்ணாமல்
தயவென எதுவும் கெஞ்சாமல்
கர்மம் ஒன்றெனக் குறியாக-அம்மா
தர்மம் வழியென செயலாக.

மடியில் கனமில்லை தடையாக
வழியில் பயமில்லை துணிவாக
சட்டம் சத்தியம் நெறியாக-அம்மா
எட்டும் வெற்றியும் சரியாக.

வெற்றியும் சொந்தக் குடும்பத்துக்கா!
மத்தியில் மந்திரி பதவிக்கா!
மக்களுக்காக தவ வாழ்க்கை-அம்மா
தங்களுக்கேது தனி வாழ்க்கை?

சட்டம் என்ன சொல்லட்டுமே!
சத்தியம் உண்டா வெல்லட்டுமே!
பூட்டிய கதவுகள் உடைத்துமே-அம்மா
மீட்டிய காவேரி விடுதலை..
--------------------------------------------------------------------
15முதல் ஐந்து கையெழுத்து

முதல் ஐந்து கையெழுத்து
சதம் தந்து பெயர் நிலைத்து
நிரந்தர முதல்வர் என்று
வரந்தந்தார் மக்கள் இன்று.

நூறலகு மின்சாரம்
விலையிலா விநியோகம்.
ஊருலகு தான் வாழ்த்தும்.
மிகைமின் தமிழகமாம்.

மது விலக்கு அதிரடியாய்
படிப் படி முதலடியாய்.
ஐநூறு கடைகள் மூடி
செய்யலானார் சொல் நாடி.

விவசாயி கடன் நீக்கினார்.
விடியலைத் தான் காட்டினார்
தாலிக்கு சவரன் தங்கம் 
ஏழைக்கு அம்மா சொந்தம்.

தாய்சேய்க்கு தான் தாயாய்
தந்துதவி தன் சேயாய் 
குழந்தை முதல் குமரிவரை
வளர்த்துக் கல்வி வாழ்வளித்தார்.
.
---------------------------------------------------------------------
16 பொங்கி வரும் காவேரியே!

பொங்கும் நலம் காவேரியே!
தங்கும் இடம் எங்கே நிலையோ!
இங்கும் வளம் செய்யும் தாயே!
எங்கள் நலம் அம்மா நீயோ!

தர்மம் கண்ட பாதையிலே!
கர்மம் கண்ணாய் நீதியிலே!
அம்மா உன்னை மீட்டு வந்தாய்!
சும்மா நெல்லா கொண்டு தந்தாய்!

பிறந்த வீடு சொந்தமா சொல்லு?
புகுந்த வீடு சொந்தமாசொல்லு?
வளர்ந்த வீடும் வாழ்ந்த வீடும்
நலந்தரத் தான் காவேரி ஓடும்!

தர்மத் தாயை மறுப்பா ராரோ!
துர்ம வஞ்சரின் செயலும் நேரோ!.
எந்தத் தெய்வம் மன்னிக்கும் பாவம்!
அந்தப் பாவம் நெஞ்சிற்கு சாபம்

நீரோடும் காவேரி ஆறு
நீடாளும் அம்மாவின் பேரு
தீங்கு செய்தார் தீண்டார் ஆவார்.
ஓங்கும் அம்மா! சான்றோர் வாழ்வார்.!
-----------------------------------------------------------------------
17ஊரும் நாடும் ஓராட்சி

யோசிக்கும் அவசரம் தமிழன்பா!
நேசிக்கும் தமிழகம் புகழன்றோ!
நாசிக்கும் நெஞ்சிற்கும் மூச்சென்றோ!-ஏற்றிப்
பூசிக்கும் அம்மாவியம் பேச்சன்றோ!

தாயகம் உள்ளாளும் ஊராட்சியும்.
தாயவர் சொல்லாளும் நாடாட்சியும்
வீடும் நாடும் ஆளும் நெருக்கம்--உறவாய்
ஊரும் பாரும் மேலும் செழிக்கும்.

நாடாட்சி நல்லாட்சி பேராச்சி.
நமதம்மா நமக்காக ஆள்வாச்சி.
ஊராட்சி உள்ளாட்சி நமதானால் -நாடும்
உயிருள்ள உடலாகும் இணைவானால்.

இந்திய நாட்டின் முன்னோடி.
சந்தியா மகளின் பொன்னாடு.
சத்தியக் கோட்டின் சீராட்சி.-வாழ்க!
சத்தியா மகனின் நேராட்சி
18 கனவு கண்டேன்.
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்-அம்மா
கனவு நிறைவேறி வர
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன். (கனவு)

தமிழன் தலை நிமிர்ந்து எழ
கனவு கண்டேன் அவன்
தலைமை அமர்ந்த உலகை
கனவு கண்டேன்.
அஞ்சி எவர் முன்னும் இனி
கெஞ்சியும் தொங்கும் இழி
ஒஞ்சும் கொடுமை ஒழிய
கனவு கண்டேன்(கனவு)
                    
ஏழ்மை என்னும் தாழ்மை
கீழ்மை என்பார் இல்லா
எல்லாம் சமமாய் மேன்மை
கனவு கண்டேன்.
நதிகள் கைகள் கோர்த்தோடி
நாடும் பசுமை போர்த்தியாடி
தொழில்கள் மையம் தமிழகமாய்
கனவு கண்டேன்(கனவு)

ஆணும் பெண்ணும் பேதமில்லை
பேணும் உரிமை வாதமில்லை
தோணும் எண்ணம் சகோதரமாய்
கனவு கண்டேன்.
மனிதம் என்ற சொல்லுக்கு
புனிதம் தந்த அன்னைக்கு
உலகம் போற்றி வாழ்த்தவே
கனவு கண்டேன்(கனவு)
----------------------------------------------------------

19அம்மா தானே ஜெய சக்தி.

அம்மா ஒருவர் ஜெய சக்தி.
அவரே நமக்கு சுப பக்தி.
அம்மா விரலின் அசைவில்தான்
அசையும் படையும் கழகந்தான்.

ஒன்றே முடிவு என்றே துணிவு.
அன்றே தலைவர் கொண்டார் நினைவு.
என்றும் அதுதான் அம்மாவின் வழியும்
வென்றும் தொடர்வோம் வேறென்ன வினையும்.

அம்மா சக்தி நம் சக்தி.
அவர்தான் நமக்கு எரிசக்தி.
சும்மா வெற்றுப் பரட்டைகளை
சுமந்து திரியத் தேவையென்ன!

கற்பகத் தேவி அம்மாதான்.
கழகம் ன்பதும் ஆலயம்தான்
பக்தியின் உண்மை விசுவாசம்.
பதவிக்கு பக்தி பகல்வேசம்.

புரட்சித் தலைவர் போலம்மா,
மிரட்டப் பணியார் வீரம்மா.
யாருக்குப் பிறவியை அவதரித்தார்?.
ஊருக்கு உறவினை அர்பணித்தார்.

------------------------------------------------------------------

20சித்திரை மீட்ட புரட்சித்தலைவி

சித்திரை மீட்டிய புரட்சித் தலைவி
முத்திரை நாட்டிய இலக்கியத் தமிழி.
இத்தரை போற்றும் முத்தமிழ் புலவி-அம்மா
பத்தரை மாற்று வித்தகக் கலைஞி

தமிழினப் பெருமை அமிழ்தினும் இனிமை.
நமதெனப் பழமை நமக்கே உரிமை.
உணர்வில் உதித்த உன்னதத் திருமை--அம்மா
மனதில் மதிக்கும் மாண்பின் தலைமை.

தமிழுக்காக வாழ்பவர் அம்மா.
தமிழால் வாழ்வதும் அம்மா.
திருவரங்கம் மண்ணே பெண்ணே-அம்மா.
ஒருவரன்றி மற்றெல்லாம் சும்மா..

சொன்னதும் செய்ர்தார் மக்களுக்கு.
சொல்லாதும் துணிந்தார் செயலுக்கு..
என்னென்றும் எதிர்நோக்கும் முன்னே-அம்மா
எல்லாம் செய்தார் ஏழைக்கு.

உலகெங்கும் பரவியே வாழும்
உறவெங்கள் தமிழினம் ஆளும்
வளமமைதி வளர்ச்சியே மேலும்-அம்மா
உளமுறுதி இறைவி போலும்.

-------------------------------------------------------------------------
21 சங்கே முழங்கு!

தங்கத் தலைவி சிங்கக் குரலி
எங்கள் தாயென்று சங்கே முழங்கு!
தங்குந் தமிழே திங்கள் முகமே
பொங்கும் புகழென்று சங்கே முழங்கு!

தனிப்பலம் துணிந்தார்  தன்பயம் மறந்தார்
தமிழினத் தாயென சங்கே முழங்கு!
எதிர்ப்பார் எவரோ! இமயம் இவரோ!
புரட்சித் தாயென சங்கே முழங்கு!

இடியெனப் படைகள் மழையெனக் கணைகள்
பொடியெனப் பறக்க சங்கே முழங்கு!
கடலெனக் கருணை அலையென அருளை
பொழிவதும் அம்மா சங்கே முழங்கு!

அஞ்சிக் கெஞ்சி அணியெனத் தொங்கி
ஒஞ்சோ மில்லை சங்கே முழங்கு!
விஞ்சி நெஞ்சம் விரிந்த உறவாய்
துஞ்சா தமிழினம் சங்கே முழங்கு!

முடிக்கும் உரமும் தெறிக்கும் மரமும்
விடியல் ஒளியென சங்கே முழங்கு!
படிக்கும் பாடம் பழகும் உலகம்.
வழிதான் அம்மா சங்கே முழங்கு!

விடிந்தது எமக்கு முடிந்தது வழக்கு
படிந்தது பகையென சங்கே முழங்கு!
வென்றும் சத்தியம் என்றும் முதல்வர்
எங்கள் அம்மா சங்கே முழங்கு!

கொ.பெ.பி.அய்யா.



--------------------------------------------------------------------------------------
22 என்றென்றும் எம்ஜியாராய்.

என்றென்றும் வாழும் எம்ஜியாராய்-வெற்றி
இரட்டையிலை சின்னம் எம்ஜியாராய்.
ஒன்றென்றும் தலைமை அண்ணா திமுக-அம்மா
கொண்டென்றும் காவலும் எம்ஜியாராய்.

மக்கள் திலகம் எம்ஜியாராய்-என்றும்.
மக்களில் வாழும் எம்ஜியாராய்.
மக்களுக்கு ஆளும் அம்மாதான்-அம்மா
மக்கள் முதல்வராய் எம்ஜியாராய்.

அஞ்சா நெஞ்சர் எம்ஜியாராய்-அயலிடம்
கெஞ்சா விஞ்சர் எம்ஜியாராய்.
துஞ்சா பணியில் முன்னோரை-அம்மா
மிஞ்சும் வல்லமை எம்ஜியாராய்.

----------------------------------------
23 நிரந்தர முதல்வர்.

சுதந்திர தினமெல்லாம்
நிரந்தரம் கொடியேற்றும்-நிரந்தர
முதல்வரே அம்மாதான்
வரம் தந்த மக்கள் வாழ்க!

கோட்டைக்கு அழகுதான்
நாட்டுக்குப் பெருமைதான்-தமிழக
ஆட்சிக்கு அம்மாதான்
வாழ்த்துதே கொடியுந்தான்.

பறக்குது பார் கொடி வீசி!
சிறப்பு அம்மா புகழ் பேசி-அது.
உரக்கச்சொல்லும் தேசியமே
உறுதி அம்மா வாசகமே!

24வெற்றி வெற்றி என்றெழு!

விழித்தெழு மகனே!விழித்தெழு-உன்
வேளை வந்தது விழித்தெழு!
சிலிர்த்தெழு மகனே!சிலிர்த்தெழு-நீ
சிங்கம் என்றே சிலிர்த்தெழு!
விழித்தெழு மகனே!விழித்தெழு

சுற்றிச் சுற்றிச் சூளுரைத்து-பகை
பற்றிப் பற்றிப் பாடறுத்து-
வெற்றி வெற்றி வினைமுடித்து-பறை
கொட்டிக் கொட்டு வென்றெடுத்து.
விழித்தெழு மகனே!விழித்தெழு

தமிழன் என்றொரு திமிரிருக்கு-உனக்கு
தருமம் என்றொரு தரமிருக்கு.
மானம் என்றொரு மதமிருக்கு-மரபு
வீரம் கொண்டெழு விடையிருக்கு.
விழித்தெழு மகனே!விழித்தெழு

அம்மா சொன்னதும் நினைவிருக்கு-அம்மா
நெஞ்சம் நொந்ததும் கனமிருக்கு.
எண்ண எண்ண மனந்துடிக்கும்-அம்மா
சொன்ன சொல்லே சுமந்திருக்கும்..
விழித்தெழு மகனே!விழித்தெழு

அம்மா என்றொரு பலமிருக்கு-தொழில்
நுட்பம் கண்டொரு திறமிருக்கு
அம்மா தந்தொரு உரமிருக்கு-வெற்றி
வெற்றி என்றெழு விடிவிருக்கு.
விழித்தெழு மகனே!விழித்தெழு

தொடுத்தும் தேர்தல் வென்றாச்சு-முழுதும்
கொடுத்தும் காத்தல் நன்றாச்சு.
வெற்றி பரவட்டும் வினைமுடுக்கு--சுற்றிக்
கொட்டி முழக்க தனைச்ச்சொடுக்கு.
விழித்தெழு மகனே!விழித்தெழு
----------------------------------------------------------------------------------------



25விடியலே வா!வா!

குடிகாரர் இல்லா விடியலே வா! வா!
விடிவெள்ளி அம்மா வெளிச்சமே வா!வா!
முழுமையாய் மதுநீ முடிகிறாய் போ!போ!
விலகும் மதுவே விட்டுநீ போ!போ!

கண்டதைக் குடிப்பதும் கள்ளமாய் வடிப்பதும்
என்றதை நினைப்பதும் இல்லாமல் முடிப்பதும்
வென்றதை ஒழிப்பதும் விதியொன்றால் அழிப்பதும்.
அன்றம்மா தொடங்கினார் எளிதுதான் ஜெயிப்பதும்.

கடைகளின் எண்ணிக்கை கணிசமாய் குறைந்தது.
தொடக்கத்தின் நேரமும் தூரமாய் நகர்ந்தது.
படிப்படி யாகவே பார்களும் மறைவது
முடிப்பதும் அம்மாதான் முழுமது ஒழிவது.

குடிகாரர் இல்லா விடியலே வா! வா!
விடிவெள்ளி அம்மா வெளிச்சமே வா!வா!
முழுமையாய் மதுநீ முடிகிறாய் போ!போ!
விலகும் மதுவே விட்டுநீ போ!போ!
----------------------------------------------------------------------------------

26ஒன்றுபடு வென்றுஎடு!

ஒன்றுபடு சகோதரா ஒன்றுபடு!
வென்றுஎடு விரோதியை வென்றுஎடு!
அம்மா பிள்ளை அனைவரும் நாமே!
அன்னையின் ஆணை அதுமட்டுந்தானே!
ஒன்றுபடு சகோதரா ஒன்றுபடு!
வென்றுஎடு விரோதியை வென்றுஎடு!

ஆன்மா உள்ளொளிர் அம்மா சக்தி
சும்மா மற்றெல்லாம் சொல்லாள்வார் கத்தி!
ஒன்றென நன்றியாம் அம்மா பக்தி.
என்றுமே கொண்டெழும் உள்ளுயிர் தீயே!
ஒன்றுபடு சகோதரா ஒன்றுபடு!
வென்றுஎடு விரோதியை வென்றுஎடு!

பொன்மனம் கண்டொரு வன்மன எதிரி
முன்படக் கண்டெழு முன்பகை பதறி.
நம்படை ஒன்றென தன்சிகை உதறி
நின்றெழ ஓடாதோ பின்புறஞ் சிதறி.
ஒன்றுபடு சகோதரா ஒன்றுபடு!
வென்றுஎடு விரோதியை வென்றுஎடு!
-----------------------------------------------------------------------
 27மிகுமின் மாநிலம் தமிழகம்.

இருண்டு கிடந்த தமிழகம் அன்று
பரந்து ஒளிரும் பகலகம் இன்று.
மிகுமின் மாநிலம் தமிழகம் என்று
புகழுது பூமியும் அம்மாவை நன்று.

கையேந்தி நின்ற தமிழகம் அன்று
கை கூடி கண்ட மிகுமின் இன்று.
காசுக்கு வாங்கிய தமிழகம் என்று
மாசுக்கு நீங்குது அம்மாவால் நன்று.

சுயநலம் சுமந்த தமிழகம் அன்று
பொதுநலம் அமைந்த சுதந்திரம் இன்று.
தொழில் வளம்பெருகும் தமிழகம் என்று
எழில் நலம்விரியுது அம்மாவால் நன்று.

வியாபாரம் ஆண்ட தமிழகம் அன்று
சுயரூபம் மீண்ட தருமகம் இன்று.
கருணைத் தாயின் காப்பகம் என்று
பெருமைப் பேரின் அம்மாவால் நன்று.
-----------------------------------------------------------------------
28தீர்வு  ஒன்றே!

கட்சத்தீவை மீட்பது ஒன்றே!
உச்சத்தேவை தீர்வும் என்றே!
லட்சியத்தலைவி முழக்கம் நன்றே!
நிச்சயம் வெல்வார் வழக்கும் வென்றே!

எழுபத்து நான்கு எழுபத்து ஆறு;
இலங்கை இந்தியா ஒப்பந்தம் பாரு.
தன்னைக் காக்கவே மண்ணை விற்றனர்
இன்று ஏய்க்கவே பொய்யைக் கற்றனர்.

பாட்டன் சொத்தைப் பறித்திட யாரு?
மாற்றான் பத்திரம் குறித்திட யாரு?
வீட்டானைக் கட்டி விலங்கிட யாரு?
மீட்டாளும் அம்மாவை வழக்கிட யாரு?

இருந்தும் கெடுத்தவர் இன்றும் கெடுப்பார்.
அறிந்தும் விடுத்தவர் அம்பினைப்  பழிப்பார்.
துணிந்தும் எதிர்ப்பவர் அம்மா ஜெயிப்பார்.
முனைந்தும் பகைவரை அம்மா முடிப்பார்..
----------------------------------------------------------------------------------
29கூட்டம் பாரு!

கூட்டம் பாரு!கூட்டம் பாரு!
குலதெய்வம் கும்பிடவா?
ஆட்டம் பாரு! ஆட்டம் பாரு!
ஆண்டாளைக் கண்டிடவா?

அம்மாவைத் தரிசக்கத்தான்
அலை அலையாய்க் கூட்டம்.
நம்மாநிலம் ஆளும் தாயை
நம்பி வாழும் கூட்டம்.

மஞ்சள் வெய்யில் மகிமை பாரு!
மாதா முகம் ஜோரு!
கொஞ்சும் செய்யுள் மொழியும் கேளு!
கோடி பெறும் தூளு!

தெய்வம் ஒன்று தேடித்தானே;
தேரில் இங்கு நேரே.
மெய்யும் இன்று காணத்தானே;
ஊரில் கண்டு கூறே!

பொன்னான மனமும் பாரு!
எம்ஜியாரு தானே நூறு.
எண்ணுவதும் குணமும் பாரு!
அண்ணாவின் அறிவும் நூறு.

சமூகத்தின் நீதி பாரு!
சாதிக்கத்தான் பெரியார் நூறு.
பெண்ணாக வடிவம் பாரு!
மண்ணாளும் தகுதி நூறு.

அம்மாதான் அவரைப் பாரு!
ஆளவந்த தெய்வம் பாரு!
எந்நாளும் அம்மா பாரு!
மண்ணாளும் மீனா பாரு!

கண்டாலே கை குவியும்,
காட்சியது மெய் நிலையும்;
கொண்டாள இப் புவியும்:
கொண்டம்மா வாழ்கவே!


.



30இறைவியோ!தலைவியோ!

திருமகள் என்பதும் இறைவியோ-வளமே
புரட்சி என்பதும் தலைவியோ!
ஏழையர் நெஞ்சில் இறைவியோ-தமிழ்
தானையர் நெஞ்சில் தலைவியோ!

கருணைத் தாயவர் இறைவியோ-ஆளும்
அருமை யாளவர் தலைவியோ!
பொறுமை மேலவர் இறைவியோ-நாளும்
திருமை போலவர் தலைவியோ!

வள்ளல் ஆனவர் இறைவியோ-சொல்லும்
சொல்லில் நேரவர் தலைவியோ!
வன்மனம் வென்றவர் இறைவியோ-செம்மல்
பொன்மனம் கண்டவர் தலைவியோ!

வரந்தரும் அருளே இறைவியோ-எமக்கு
நலந்தரும் தருவே தலைவியோ!
புரந்தருள் புகழே இறைவியோ-தமிழக
நிரந்தர முதல்வர் தலைவியோ!
---------------------------------------------------------------------
31வெற்றி நிச்சயம்.

தங்கங்களே அம்மா சிங்கங்களே!-நீங்கள்
ஒன்றில் இல்லை கோடிகளே!
ஒருவருக் கொருவர் பொறுப்பு-உங்கள்
உழைப்பில் இருக்கணும் நெருப்பு.

உங்களுக்  குள்ளே தாயாய்-தூண்டும்
கங்கதுக் குள்ளே தீயாய்
எரியும் நெருப்பாய் துடிப்பு-அம்மா
விளையும் துணிவாய் உழைப்பு.

புரட்சித் தலைவரின் பாதை-அன்று
புறப்பட்ட பயணம் தொடர
தலைவர் தானே தேர்ந்தார்-அம்மா
தலைமை தானே நேர்ந்தார்.

தி.மு.க.என்ற ஒன்றே-தீய
சக்தி என்று கண்டே,
கூட்டம் அதனை கொள்கையில்-விரட்டும்
வேட்டை ஒன்றே இலட்சியம்.

இரட்டை இலைதான் எண்ணம்-அது
புரட்சித் தலைவரின் சின்னம்.
வெற்றியின் வெற்றி திண்ணம்-அம்மா
பற்றிய பச்சை வண்ணம்.

மீண்டும் அம்மாவின் ஆட்சி---அம்மா
வேண்டும் என்பதே சாட்சி.
தொடராய் தொடரும் மீட்சி-அம்மா
கடனாய் படரும் மாட்சி.

நல்லாட்சி என்றும் சிறக்க-அம்மா
சொல்லாட்சி கொண்டும் நிலைக்க!
வல்லாட்சி நின்றும் தொடர-நூறும்
உள்ளாட்சி வென்றும் உழைக்க!
----------------------------------------------------------
32  அன்னபூரணித் தாயே!

அன்ன பூரணித் தாயே!
அம்மா தானினி நீயே !
பட்டினி போக்கிய அமுதே!
பஞ்சம் ஏதினி தமிழே!
வாழ்க!

வறுமை விரட்டிய தாயே!
இருளை  விலக்கிய நீயே!
சிறுமை அகற்றிய அரணே!
பெருமை இயற்றிய தமிழே!
வாழ்க!

கடனை இறக்கிய தாயே!
கழனியை பெருக்கிய நீயே!
பசுமை விரித்த வளமே!
பழமை செழித்த தமிழே!
வாழ்க!

வேலை கொடுத்த தாயே!
ஊழை முடித்த நீயே!
வாழ வைத்த வரமே!
ஆள விதித்த தமிழே!
வாழ்க!

சொர்க்கம் சமைத்த தாயே!
சொந்தம் எமக்கு நீயே!
ஏழை எவர்க்கும் உயிரே!
ஆளும் நிரந்தரம் தமிழே!
வாழ்க!
----------------------------------

33வெற்றி முழக்கம்.

டமடமவெனத் தமிழ்நாடே முழக்கும் வெற்றி.
கமகமவென அமிழ்தாய் இனிக்கும் வெற்றி.
மளமளவென மடியை நிறைக்கும் வெற்றி.
கலகலவென அம்மா சிரிக்கும் வெற்றி.

அரவக்குறிச்சி தஞ்சாவூரு திருப்பரங் குன்றம்.
வரவுக்குறிச்சி நன்றிகூறு அம்மாவுக் கென்றும்.
அம்மாயென்ற சக்தியென்றும் சும்மா அல்லடா.
அம்மாவெல்ல உண்டோவுண்டோ ஆளுஞ் சொல்லடா!

பொய்களெல்லாம் பொய்யாய் போயே போச்சடா!
மெய்தானெனன்றும் மெய்யாச்சு அம்மா பேச்சடா!
எதிரியில்லா என்றும்முதல்வர் எங்களம்மா தானடா!!
எமனுங்கூட கண்டுவணங்கும் சிங்கமம்மா வானடா!
---------------------------------------------------------------------------------------

34அன்னமிட்ட இரட்டை இலை

இரட்டை இலை இரட்டை இலை.
புரட்சியார் தந்த இலை.
வறட்சி என்ற சொல்லொழித்த
புரட்சித் தலைவி மீட்ட இலை.

நாடு நலம் வேண்டுமானால்
போடுங்கம்மா உங்கள் ஓட்டு.
அன்னமிட்ட இரட்டை இலை
சின்னங் குத்து செல்லும் ஓட்டு

பெண் குலத்தைக் காக்க வந்த
அன்னையோட இரட்டை இலை.
தங்கத் தாலி தந்த அம்மா
தந்த சின்னம் இரட்டை இலை.

ஏழை இல்லா நாடு காண
ஆளும் அம்மா வெற்றிக்காக
இரட்டை இலை ஒட்டு போட்டு
உறுதி செய்வோம் நன்மையிட்டு.
-------------------------------------------------------------------------------------

 35நமது ஒட்டு இரட்டை இலைக்கே!

உள்ளாட்சி வெல்வோம்
நல்லாட்சி செய்வோம்.
எம்ஜிஆரின் சின்னம்-இரட்டை
இலைபாரு மின்னும்.

நாடாளும் அம்மா
ஊராளும் மன்றம்.
இணைந்தாளும் கூட்டு-இரட்டை
இலைபோடும் ஒட்டு.

மக்களால் அம்மா
மக்களுக்கே அம்மா.
அம்மாவின் திட்டம்-இரட்டை
இலையால்தான் எட்டும்.
----------------------------------------------------------------------
36எதிரி எவர் இங்கே!

பன்றியைக் குளிப்பாட்டி மன்றம் ஏற்றினாலும்
கொண்ட நிறந்தான் மாறுமா?-அது
கண்ட நரகலை தின்னும் புத்தியும்
எந்த உணவிலும் தீருமா?

போக்கிரிப் பிறவியை தேய்க்கிற சோப்பினால்
நீக்குற அழுக்கு போக்குமா?-அவன்
போடுற வெள்ளை ஆளுற மனதை
கேடறக் குணத்தை மாற்றுமா?

சிங்கம் ஒன்றுதான் சிலிர்க்கும் போதுதான்
பங்கம் நரிகளும் பதறுமே-ஊளை
இட்டும் கூடவே  ஏய்த்தும் ஓடவே
மட்டும் போக்கிலே சிதறுமே.

கூலிக்குப் பாடும் ஒப்பாரிக் கூட்டம்
கேலிக்கு ஆடும் கீழினமே-சுமை
டோளிக்கு ஏங்கும் சப்பானி போலே
வேலைக்கு விளங்கா வீணினமே.

நேருக்கு நேரே எதிர்க்கும் பலமும்
யாருக்கும் இங்கே உண்டோ-தமிழ்
ஊருக்குள் எதிரி இல்லை என்றே
பாருக்குள் நின்றார் அம்மா. 
---------------------------------------------------------
 37வாக்களிப்போம் இரட்டை இலைக்கே!

வாழ்வு செழிக்க ஆடு மாடு.
வசதி கொழிக்க பசுமை வீடு.
ஏழ்மை ஒழிக்க எல்லோர்க்கும் வேலை.
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

கல்லார் இல்லா காணும் நல்லாட்சி.
கற்றார் கற்போர் பேணும் நம்மாட்சி.
இல்லார் இல்லா ஏற்றம் அம்மாட்சி.
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

படிக்கும் மட்டும் படிப்பது உரிமை.
முடிக்கும் மட்டும் அம்மாதான் கடமை.
மடிக்கணினி சைக்கிள் மற்றெல்லாம் தந்த
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

பட்ட கடனெல்லாம் பாடெனத் தள்ளி
இட்ட பொருளெல்லாம் ஏலமின்றி மீட்டி
பட்ட விவசாயம் பாழ்மீட்டிக் காத்த
இரட்டை இலைக்கே வாக்களிப்போ
அம்மாவின் தொலை நோக்கு.

38அம்மாவின் தொலைநோக்கு 

அறிவியல் சிந்தனை 
எதிர்காலம் இதுதான் 
இயல்பென அறிந்து 
கழகத்தின் அதிகாரப்பூர்வ
தகவல் தொழில்நுட்பப் பிரிவு
தோற்றினார் அம்மா.வாழ்க!

அம்மாவின் தயவு 
அதனில் சேவை 
ஆற்றிடும் விசுவாசம்
அன்பரின் குழுமம் 
தோன்றி விழுமம்
தொடர்வது தொடரும்
ஆண்டாண்டும் அம்மாவின் 
ஆசியும் தொடரும் வாழ்க!

39அம்மா தானே ஜெய சக்தி.

அம்மா ஒருவர் ஜெய சக்தி.
அவரே நமக்கு பய பக்தி.
அம்மா விரலின் அசைவில்தான்
அசையும் படையும் கழகந்தான்.

ஒன்றே முடிவு என்றே துணிவு.
அன்றே தலைவர் கொண்டார் நினைவு.
என்றும் அதுதான் அம்மாவின் வழியும்
வென்றும் தொடர்வோம் வேறென்ன வினையும்.

அம்மா சக்தி நம் சக்தி.
அவர்தான் நமக்கு எரிசக்தி.
சும்மா வெற்றுப் பரட்டைகளை
சுமந்து திரியத் தேவையென்ன!

கற்பகத் தேவி அம்மாதான்.
கழகம் ன்பதும் ஆலயம்தான்
பக்தியின் உண்மை விசுவாசம்.
பதவிக்கு பக்தி பகல்வேசம்.

புரட்சித் தலைவர் போலம்மா,
மிரட்டப் பணியார் வீரம்மா.
யாருக்குப் பிறவியை அவதரித்தார்?.
ஊருக்கு உறவினை அர்பணித்தார்.
-------------------------------------------------------------------------

4௦)வயக்காட்டு பொம்மைகள்.

குழுக்கள் ஏதும் எமக்குள் இல்லை.
பலமே எல்லாம் அம்மா தில்லே!
எதிர்க்கும் இலக்கே தி,மு,க,ஒன்றே!
உதிர்க்கும் வியர்வை ஒழிப்பதற் கென்றே!

வயக்காட்டு பொம்மைகள் பயங்காட்டும் வேலை
பயக்காது அம்மா படைமுன் வீணே!
நரிஊளைக் கூச்சல் இழிகோழை வாய்ச்சொல்.
நெறியாளும் அம்மாமுன் தெறித்தோடும் ஈசல்.

எண்பத்து ஒன்பதும் எத்தனைநாள் உம்மோடு?
இருப்பது என்பதும் பொறுப்பில்லை எம்மோடு.
பண்பற்று செயல்முறை பாழான பாடமும்
படிப்பது நடைமுறை பார்க்கிறது காலமும்.

எதிர்க்கவும் பலமுண்டு என்றும்நீ நம்பினால்
உதிர்க்கவும் இடமுண்டு கண்டும்நாம் எம்பினால்.
தடை ஒன்றாய் வீட்டுக்குள்ளே தலைமகன் காத்திருக்கான்
முடிவுண்டு ஆட்டத்திற்கு முடிக்கத்தான் பார்த்திருக்கான்.

கொ.பெ.பி.அய்யா.
=======================================================
41)
தங்கத் தாரகை.

தங்கத் தாரகையே!
சிங்கப் போரழகே!
சங்கத் தமிழ்மணமே!
எங்கள் உயிர்ப்பலமே!

எங்கள் குலவிளக்கே!
பெண்கள் நலஒளியே!
நம்பிக்கை நடுநிலையே!
நாட்டுக்கு விடிவழியே!

உண்மையின் உறைவிடமே!
நன்மையின் பிறப்பிடமே!
வீரத்தின் விளைவிடமே!
தீரத்தின் தலைவிடமே!

தைரியம் எனும் அழகே!
தனதெனத் துணை மனமே!
நம்பிக்கை நாயகியே!
நல்வழிப் பேரொளியே!

அம்மா எனும் சொல்லே
அர்த்தம் தமிழ் உள்ளே.
புரட்சியின் புதுப் பொருளே!
புரட்சித் தலைவன் திருவருளே!

ஜெயம் ஜெயம் எனும் மொழியே!
ஜெய லலிதா பொருள் நிலையே!
இலை இலை இரட்டை இலையே!
இலை இலை இரட்டை நிலையே.

கொ.பெ.பி.அய்யா.




தனியொரு அகராதி.

ஜெயம் ஜெயம் என்றால் ஜெயலலிதா
ஜெய சக்தி என்பதும் ஜெயலலிதா.
பயம் பயம் என்று மிரள்வோற்கும்—பயம்
திருத்தும் அருள்முகம் ஜெயலலிதா.

பயம் என்ற சொல்லும் பயந்தோடும்.
பயந்தும் அச்சமும் நடு நடுங்கும்,
பயமும் அச்சமும் பழக்கமில்லை.-அதன்
பழக்கம் அறிவதும் வழக்கமில்லை.

அம்மா என்றோர் மொழி யுண்டு.
அவளுக் கென்றோர் வழி யுண்டு.
அச்சமும் பயமும் அவள் மொழியில்
அப்படி எதுவும் கிடையாது.

பிறந்தோம் என்பது உண்மை யென்றால்
இருந்தோம் என்பதும் அவசியம்.—அந்த
அவசியம் தொலையும் பயம் இருந்தால்.
அம்மா அவள்தான் வரலாறு.

குடும்பம் என்றொரு தன்னலமே
தடையாய் நிற்கும் பயமாமே
கடமை உணர்ந்த அம்மாவே
உடமை யாகினள் தமிழுக்கே!

அம்மா தானொரு அகராதி நூலே!
அம்மா என்பதன் பொருளும் போலே!
அச்சமும் பயமும் அவளிடம் இல்லை.
அவசியம் என்பதும் இனியென்ன வேலை.

கொ.பெ.பி. அய்யா