Thursday 28 August 2014

அன்பின் அவதாரம் அம்மா.

சும்மா இல்லை அம்மா

அம்மா எங்கள் உயிர்ச்சொல்லே.
ஆன்மா தங்கும் தமிழ்ச்சொல்லே.
சும்மா சொல்லும் சொல்லல்ல
சொந்தம் எல்லாம் சொல்லுள்ளே.

அம்மா ஆளும் தமிழ்நாடே.
இம்மா நிலத்தின் முதல்நாடே.
சும்மா சொல்லும் சொல்லல்ல.
சுந்தரம் ஆனது செயலாலே.

அம்மா அன்பின் அவதாரம்.
அண்ணல் எம்ஜியார் மறுபிறப்பு.
சும்மா சொல்லும் சொல்லல்ல.
எண்ணம் அவராய் நிறைசிறப்பு.

அம்மா மனதில் தமிழினமே.
அவருள் இருப்பதும் வேறென்ன!
சும்மா சொல்லும் சொல்லல்ல.
சொந்தம் சொல்ல யாரென்ன!

அம்மா நினைவில் கனவாக
அதுவே வளரும் வளமாக .
சும்மா சொல்லும் சொல்லல்ல.
திட்டம் எல்லாம் பயனாக.

அம்மா எழுதும் ஆணைகளோ!
அனைத்தும் அருளும் மழைபோல.
சும்மா சொல்லும் சொல்லல்ல.
சொர்க்கம் காட்டும் சுபம்வாழ.

அம்மா அவரே சக்தியாம்.
ஆவது அனைத்தும் சத்தியம்.
சும்மா சொல்லும் சொல்லல்ல.
எண்ணுவ தெல்லாம் எட்டுதே!


கொ.பெ.பி.அய்யா.

Saturday 23 August 2014

ஆவதும் அம்மாவால்.


ஆவது அம்மாவால்.

அம்மா என்றால் தமிழகம்.
ஆள்வது அடுத்து இந்தியா.
இயக்கம் அவரது உறவாகும்.
ஈகை  இயற்கை குணமாகும்..
உலகின் பெண்மை புகழானார்.
ஊக்கம் அம்மா சிறப்பாகும்.
எழுந்தும் இந்தியா வல்லரசாகும்.
ஏற்றம் செய்வார் அம்மாதான்..
ஐயம் என்பது அறியாதார்.
ஒருவர் முதல்வர் நிலையேதான்.
ஓசை ஒன்றே அம்மாதான்
ஔடதம் போலவர் அமைதிக்கு.
அஃதின் காவலர் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.




உரிமைக் குரல்.


உரிமைக்குரல்.

கருப்பு வெள்ளை சிவப்புக் கறை
கட்சி வேட்டி கட்டி மச்சான்.
உரிமைக் குரல் எம்ஜியாரு
தெரிகிறாரே அம்ச மச்சான்.

இறக்கி விட்டு வேட்டியத்தான்
முறுக்கி விட்டு மீசையைத்தான்.
நடந்தயின்னா எம்ஜியாரு
நடையழகு அருமை மச்சான்.

இறுக்கி வேட்டி மடிச்சிக் கட்டி
எம்ஜியாரு ஸ்டைலக் காட்டி.
செருக்கி நின்னா நேச மச்சான்.
இருப்பதாரு எதிரேதான் வீர மச்சான்.

தமிழனுக்கு அடையாளம்
தலைமுறைக்கு மிச்சமாம்
வெள்ளை வேட்டி பெருமையாம்.
சொல்லு அம்மா புகழ் மச்சான்.

பெரியாறு மீட்டினார்
பேறுபெற்ற அம்மாதான்.
பாரம்பர்யம் காத்தவர்
வரலாறும் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.


Monday 18 August 2014

யாருகுகாக அம்மா.


யாருக்காக அம்மா?

யாருக் காக அம்மா?.
யார் வாழ அம்மா?.
யார் சொந்தம் அம்மா?--நமக்கே
நம் சொந்தம் அம்மா.

நாம்தானே சொத்து.
நம்மைத் தான்சேர்த்து.
நம்முகமே பார்த்து-மலரும்
அம்மா முகம் பூத்து.

நமக்காகத் தான்கடமை
நாம்தானே அவர்உடமை.
வேறென்ன அம்மாவுக்கு-பிள்ளை
நாம்தானே அம்மாவுக்கு.

தமிழ் அம்மாமூச்சு.
தமிழ்இனமே பேச்சு.
பொத்தி நம்மைகாக்கும்--தாய்போல்
பெற்ற அம்மாநமக்கு.

பிள்ளையாரு பேத்தியாரு
சொல்லுயாரு நம்மயாரு
எல்லாமே அம்மாவுக்கு -உறவு
நம்மைவிட்டால் வேறயாரு?

பத்துக்கோடி பந்தங்கள்
மொத்தம் உமது சொந்தங்கள்.
இத்தனைபேர் தாயாக-உம்போல்
ஒத்த்ணைய யாரம்மா?


கொ.பெ.பி.அய்யா.

Thursday 14 August 2014

அம்மாவுக்கு புகழ்மாலை.

ஆசி வழங்குவீர்!
(நூறாவது படைப்பு)
http://aiadmkpaadalkal.blogspot.in/

அம்மா உமக்கே புகழ் மாலை
அடியேன் தொகுக்கும் சொல்மாலை..
நூறாம் பாட்டாய் ஒரு மாலை-உம்
நேராய் போற்றும் பாமாலை.

கருணைக் கடலை கேட்டது உண்டு.
அருள்உம் நிசமெனக் கண்டது உண்டு.
உரிமைக் குரலை கேட்டது உண்டு-உம்
உயிரில் எம்ஜியார் புகழின்று.,

அம்மா என்னும் பந்தம் உண்டு.
அன்பால் எம்மில்  சொந்தம் உண்டு.
ஆன்மா அம்மா  சொல் உண்டு-உம்
ஆளுமை அதற்கு பொருளின்று,

புரட்சி என்றொரு சொல் உண்டு.
புரியும் அதற்கொரு அம்மா உண்டு.
தலைவி என்றொரு தகுதியும் உண்டு-உம்
தலைமை கண்டது பொருளின்று,

சுதந்திரம் நாடும் கொண்டது உண்டு.
சுவாசம் உணரும் சொர்கமும் உண்டு..
தேசியம் என்றொரு பேச்சும் உண்டு-உம்
நேசியம் கண்டதில் நின்றதின்று.

பொதுவாழ் வெனவும் பொய்ப்பார் உண்டு.
பொய்ப்பார் வியக்கவும் மெய்ப்பார் உண்டு.
அரசியல் உலகம் படித்தது உண்டு-உம்
அரசில் ஆள்வகை கற்றதின்று.

புத்துலகம் ஒன்றும் கனவில் உண்டு
சத்தியம் வென்றும் சரித்திரம் உண்டு.
ஊழல் தானே ஒழிவது உண்டு-உம்
ஆளும் நுட்பம் தோன்றுதின்று.

காந்தி ராஜ்ஜியம் காண்பது உண்டு.
காலத்தை வென்றவர் கருத்தில் உண்டு.
பரத நாடும் ஆள்வதும் உண்டு-உம்
விரதம் தொடரும் நிலையிலின்று.

எனக்கும் அம்மாவோர் ஆசை உண்டு.
வணங்கும் தரிசனம் நேரில் உண்டு.
அன்றே எந்தன் முக்தியும் உண்டு-உம்
ஆசியும் நானும் பெறுவதன்றோ!

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 13 August 2014

அன்பின் பரிச


அன்பின் பரிசு.

பாப்பா பாப்பா நீ சொல்லு
பாடம் முதலில் “அ” சொல்லு
அம்மாதானே ஆரம்பம்
அவளைப் போற்றி நீநில்லு.

இருக்கும் காலம் ஈடில்லை.
உனக்குள் ஊக்கம் ஊறில்லை.
எண்ணம் ஏக்கம் ஏறுமுகம்
ஐந்துள் அடக்கம் அன்னைமுகம்.

ஒழுக்கம் ஓதும் நன்பாடம்
விழுப்பம் ஆகும் பொன்போலும்.
ஔவை மொழியே செவ்வைநெறி
பவ்வியம் பழகி அவ்வழியறி.

பிறக்கும் நாளே பரிசாக
பெற்றால் தாயே உனையாக..
பரிசும் தந்தாள் அம்மாவும்
பதித்து முத்தம் அன்பாக.

மருத்துவம் தானே தாயவளே!
கருத்தும் காப்பும் நீயவளே!
வருத்தும் கல்வி தாயவளே!
பொருத்தும் செல்வம் நீயவளே!

அம்மா என்றால் அன்பேதான்.
அன்பே தெய்வம் அவளேதான்.
அவளே வாழ்வின் ஆதாரம்.
அவளொரு பிறவி அவதாரம்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 12 August 2014

என்றும் முதல்வர்

நிரந்தர முதல்வர்.

ஆலோலம் கேட்குது அம்மாபுகழ் பாடுது.
காலமும் கூடுது கதிர்விளைஞ் சாடுது
மகிழுது சனமெல்லாம் மனசார வாழ்த்துது.
அகிலத்தின் பறவைகள் தமிழ்நாடு தேடுது.

சுவர்க்கம் மண்ணில் இறங்கி வந்ததா?
பக்கம் கண்ணில் வழங்கித் தந்ததா?
எங்கும் பசுமை தென்றல் சுமந்துமே
பொங்கும் வளமை கொண்டு நிறைந்ததா?

காடு கழனி மேடுகள் எல்லாம்
நாடு உழவு பாடுகள் சொல்லும்
வீடு வழிந்து வெள்ளாமை அள்ளும்
ஓடும் நதிகளும் அம்மான்னு துள்ளும்.

பட்டணம் கரைந்து பட்டியில் நிறையும்
பட்டதும் மறைந்து  கெட்டியில் விரையும்.
திட்டம் அம்மா தீட்டிய விதமே
கொட்டுது சும்மா ஈட்டிய நிலமே!

அம்மா விருப்பம் அழகுப் பச்சை
அள்ளும் கழனி அலையின் பசுமை.
அம்மா கனவு அடைவது நிறைவு.
கொள்ளும் உயர்வு கொழிப்பது உழவு

காவேரி பெரியாறு கரையேறி ஓடும்.
தாவாக்கள் முடிவாகி தமிழ்நாடு வாழும்.
தேவைகள் நிறைவாகி தேடலும் கூடும்.
பூவையர் தாயாக போற்றுவம் நாளும்.

சீராளும் அம்மாவால் செழிக்கும் தமிழகம்.
வேராழம் நிற்கவும் போராடும் தன்னுரம்
நேராளும் நெஞ்சம் நிரந்தரம் முதல்வராம்
பாராளும் பக்குவம் பண்டிதர் அம்மாதான்.!

இனத்தை பலியிடும் குடும்பத் தலைமை.
குடும்பம் பலியிடும் இனத்தின் தலைமை.
தனக்கென வாழா தாயெனும் தலைமை
தமிழென வாழ்க அம்மா தலைமை.

கொ.பெ.பி.அய்யா.

Saturday 9 August 2014

வாஞ்சி மணியாச்சி.





மணியாச்சி முறுக்கு.

முறுக்கு முறுக்கு முறுக்குல—வாஞ்சி
மணியாச்சி முறுக்குல..
நொறுக்கு நொறுக்கு நொறுக்குல--பத்து
விரல்அள்ளி நொறுக்குல.
கறுக்கு கறுக்கு கடியில--புதுச்
சரக்குநல்ல சரக்குல.
இருக்கு இருக்கு இருக்குல-- இன்னும்.
இருக்கு தின்ன உனக்குல.

வாசம் தூக்குது மூக்குல--அது
வடிக்குது ஜொள்ளு வாயில.
வாயில போட்டுப் பாருல--நாக்கு
வளைப்பதக் கேட்டுக் கூறுல.

ஆசை முறுக்குது உடம்புல--உன்னை
ஆட்டிப் படைக்குது அடங்கல.
மீசை துடிப்பது எதுக்குல?—பின்னே
மேலே தொடுவது அதுக்குல.

தொட்டுப் பாத்தா சும்மால--நானும்
விட்டுப் போவேனோ வீணாலே.
துட்டப் போடுல கையில--எடுத்துப்
புட்டுச்ச் சுவைச்சு ருசியில.

புரிஞ்சு போச்சுல பயபுள்ள--என்னைப்
புடிச்சி நெனைக்கிற மனசுல.
அறிஞ்சு நானுந்தான் லவ்வுல--கட்டி
அணைச்சா என்னல தடையில்ல.

முறுக்கு முறுக்குல மீசைய---எனக்கு
மூணு முடிச்சுப் போடுல..
முந்தாண உனக்குப் புடியுல—அன்னைக்கு
எந்தாயும் என்னப் பெத்தால.

இன்னும் என்னல யோசன?—நமக்கு
இருக்கு அம்பாள் துணையுல.
தாலி தந்ததும் அம்மால—அந்தத்
தாய வணங்கி வாழுல..


கொ.பெ.பி.அய்யா.  

Friday 8 August 2014

பட்டிக்காடா பட்டணமா!



பட்டணமே வேண்டாமே!

பட்டணமே வேண்டாமே பார்வதி--நம்ம
பட்டிக்காடே போகலாமே பார்வதி.
பட்டுப் போன விவசாயம் பார்வதி—அம்மா
தொட்டுத் தூக்கி நிறுத்துனாங்க பார்வதி.

தட்டுமுட்டுச் சாமான் எல்லாம் பார்வதி—உடனே
கட்டி நீயும் புறப்படடி பார்வதி.
பயிரு வச்சு வாழலாமே பார்வதி—அம்மா
பஞ்ச மெல்லாம் போக்குனாங்க பார்வதி.

நல்ல காத்து வாங்கலாமே பார்வதி—நமக்கு
நல்ல நேரம் வந்ததடி பார்வதி.
பட்டம் காசு  சேக்கலாமே பார்வதி—அம்மா
பட்ட கடன் நீக்குனாங்க பார்வதி.

காஞ்ச நிலம் ஈரமாச்சு பார்வதி.—தாயி
காவேரி கருணை வச்சா பார்வதி.
ஓஞ்ச நம்ம வாழவச்சா பார்வதி--அம்மா
உரம்தந்து விததந்து உதவுராங்க பார்வதி.  

வெளஞ்ச பொருள் இருப்புவச்சா பார்வதி—நல்ல
வெலவந்தா விக்க லாமே.பார்வதி.
குளுரு சாதனக் கிடங்குகட்டி பார்வதி—அம்மா
குலதெய்வம் காக்கு றாங்க பார்வதி..

கள வெட்டி சாதனங்கள்  பார்வதி—ஏரு
உழவு ஓட்ட கலப்பைகளும் பார்வதி.
கொறஞ்ச வெல வாடகைக்குப் பார்வதி—அம்மா
குடுத்து தவும் அரசுதான பார்வதி.

மனுஷஉயிர்க் காக்கும் தாயி பார்வதி—ஒசந்த
மருத்து வமும் செய்யுறாங்க பார்வதி.
வெதச்ச பயிர் விளைவதற்கும் பார்வதி—அம்மா
வேளாண்மக் கழகம் வச்சார் பார்வதி.

உயிர்காக்கும் காப்புப் போல பார்வதி—மொளச்ச
பயிர்களுக்கும் காப்புத் தொகை பார்வதி.
கேட்ட கடன் தருவாங்க பார்வதி—அம்மா
கூட்டுறவு வங்கி உண்டு பார்வதி.

விவசாயம் வாழ வச்ச பார்வதி—அம்மா
வேண்டும் வரம் குடுப்பாங்க பார்வதி.
வந்துருச்சு நம்ம வண்டி பார்வதி—அம்மா
தந்துருச்சு சொந்த வாழ்வு பார்வதி.

கொ.பெ.பி.அய்யா.