Saturday 9 August 2014

வாஞ்சி மணியாச்சி.





மணியாச்சி முறுக்கு.

முறுக்கு முறுக்கு முறுக்குல—வாஞ்சி
மணியாச்சி முறுக்குல..
நொறுக்கு நொறுக்கு நொறுக்குல--பத்து
விரல்அள்ளி நொறுக்குல.
கறுக்கு கறுக்கு கடியில--புதுச்
சரக்குநல்ல சரக்குல.
இருக்கு இருக்கு இருக்குல-- இன்னும்.
இருக்கு தின்ன உனக்குல.

வாசம் தூக்குது மூக்குல--அது
வடிக்குது ஜொள்ளு வாயில.
வாயில போட்டுப் பாருல--நாக்கு
வளைப்பதக் கேட்டுக் கூறுல.

ஆசை முறுக்குது உடம்புல--உன்னை
ஆட்டிப் படைக்குது அடங்கல.
மீசை துடிப்பது எதுக்குல?—பின்னே
மேலே தொடுவது அதுக்குல.

தொட்டுப் பாத்தா சும்மால--நானும்
விட்டுப் போவேனோ வீணாலே.
துட்டப் போடுல கையில--எடுத்துப்
புட்டுச்ச் சுவைச்சு ருசியில.

புரிஞ்சு போச்சுல பயபுள்ள--என்னைப்
புடிச்சி நெனைக்கிற மனசுல.
அறிஞ்சு நானுந்தான் லவ்வுல--கட்டி
அணைச்சா என்னல தடையில்ல.

முறுக்கு முறுக்குல மீசைய---எனக்கு
மூணு முடிச்சுப் போடுல..
முந்தாண உனக்குப் புடியுல—அன்னைக்கு
எந்தாயும் என்னப் பெத்தால.

இன்னும் என்னல யோசன?—நமக்கு
இருக்கு அம்பாள் துணையுல.
தாலி தந்ததும் அம்மால—அந்தத்
தாய வணங்கி வாழுல..


கொ.பெ.பி.அய்யா.  

No comments:

Post a Comment