Monday 21 September 2015

ஆளும் அம்மா மீனாட்சி.

தமிழகம் ஆளும் மீனாட்சி.

தமிழகம் ஆளும் மீனாட்சி
தரணியில் தனிப்புகழ் அரசாட்சி.
அம்மா என்றே பேராச்சி.
அகிலம் அறிந்த நிலையாட்சி.

தமிழகம் துலங்கும் திருவரங்கம்
தந்த தாய்தான் ஆண்டாளாம்.
தமிழே பிறப்பின் அடையாளம்.
தன்னுயிர் வாழ்வதும் தமிழுக்காம்

தமிழர் தம்மக்கள் தானாளும்
தன்னலம் போற்றா தாயாளும்
உலகத் தமிழர் உளம் வாழும்
ஒன்றே உண்டே தமிழ் நாடாம்.

நெஞ்சுக்கு நீதி கொண்டாளும்
அஞ்சா நெஞ்சம் அம்மாவாம்.
இணையே எவரும் இல்லைதான்.
இதய தெய்வம் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.


Sunday 20 September 2015

ஆண்டாள் அம்மா.

அம்மாவின் கணக்கு.......!

அம்மாவின் கணக்கு அடக்கமாய் இருக்கு.
சும்மா உன் முறுக்கு செல்லாத சரக்கு.
நமக்கு நாமே நாடகம் எதற்கு?
உமக்கு நீமே பாடந்தான் அதற்கு.

புரிஞ்சிரிச்சு நாடு தெளிஞ்சிரிச்சு மூடு.
பிடி படாமல் ஓடு ஒளிஞ்சொழிய தேடு
ஊருக்கெல்லாம் விடிஞ்ச்சிரிச்சே!
உனக்குமட்டும் அடைஞ்ச்சிரிச்சோ!

வீட்டைத் திருத்தத்தான் விதியில்லையாக்கும்!
நாட்டை வருத்த நீ நடக்கிறயாக்கும்!
பாவம் தீரவோ பாதை யாத்திரையாக்கும்!
சாபம் ஆறுமோ சண்டாளக் கூத்தராக்கும்!

உனக்காக நீயே உருவாக்குந் திட்டம்
ஊரை ஏய்க்கவே ஆடுற ஆட்டம்.!
மிச்சம் மீதியோ மிஞ்சிய நிலமும்
சுத்தமா சுருட்டவோ சுத்துறயாக்கும்!

அம்மா தீட்டும் திட்டம் எல்லாம்
நம்மால் போற்றும் ஆக்கம் சொல்லும்
வாழும் நாடு வளரட்டும் மேலும்.
ஆளும் அம்மா போதும் போ!போ!

மீண்டவர் எமக்கு மாண்டவர் வேண்டாம்.
ஆண்டதும் போதும் மாண்டதும் போதும்.
ஆண்டாள் அம்மா ஸ்ரீரங்கத் தமிழாம்
நீண்டாள் எம்மா நிரந்தருள் அமிழ்தாம்.

ஒத்தைக்கு ஒத்தையாய் வித்தைக்கு வாரியா!
கத்திநீ கூவினாலும் சத்தியத்தை எதிர்ப்பாரர்?
இரட்டை இலைதான் சரித்திர நிலைதான்.
புரட்சித் தலைவிதான் நிரந்தர முதல்வர்தான்.

கொ.பெ.பி.அய்யா.



Monday 14 September 2015

தலை வணங்கா தாய் கட்டுரை.

மக்கள் மனங்களில் அம்மா./தலை வணங்காத் தாய்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் மக்கள் மனங்களில் தனிச்சிறப்புடன் தனியொரு இடத்தில் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் போற்றிப் புகழ்ந்து கொண்டாடக்க்கூடிய உன்னத நமது காலத்து அரசியல் மாமனிதர்கள் என்று எடுத்துக்கொண்டால் தந்தை பெரியார்,அறிஞர்.அண்ணா பெருந்தலைவர் காமராஜர் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் அது மிகையாகாது.அந்த வரிசையில் இன்று அம்மா அவர்களும் தமிழ் நெஞ்சங்களில் இடம் பெற்றுள்ளார் என்றால் அவரின் தன்னலமற்ற அரசியல் வாழ்க்கை என்பதுதான் உண்மை.

முந்தைய தமிழக அரசியல் என்று வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கும்போது எவரெல்லாம் குடும்பங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களை தன் மக்களாக ஏற்றுக்கொண்டு அந்த மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அற்பணித்தார்களோ அவர்களே மக்கள் தலைவர்களாக மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றார்கள்.அவ்வாறே இன்று புரட்சித்தலைவியும் தமிழகம் போற்றும் தனிப்பெருந்தலைவியாக தமிழ் மக்கள் மனங்களில் தனி இடம் பெற்றுள்ளார்.

அரசியல் என்பதும் ஒரு துறவறம்தான்.அதுவும் ஒரு பற்றற்ற நிலைதான்.தனக்கென்றோ தன் உறவுக்கென்றோ தன் குடும்பத்திற்கென்றோ இல்லாமல் எவர் ஒருவர் தன் நாட்டு மக்களுக்காக அரசியல் வாழ்வை மேற்கொள்கிறாரோ அவரே மக்கள் நாயகராக பரிமளிககிறார்.அப்படித்தான் இன்று அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள் மக்களுக்காக என்று ஒரு முடிவை எடுக்கும்பொழுது அதனால் தனக்கென்ன நேரும் என்றும் எண்ணாமல் துணிச்சலாக மக்கள் பிரச்சனைகளை அணுகக்கூடிய தலைவராக விளங்குகிறார்.

முல்லைப் பெரியாறுப் பிரச்சனை மற்றும் காவிரிப் பிரச்சனை எதுவானாலும் அதை எதுவரை சென்று போராடிப்போராடி உரிமையை மீட்டெடுக்க முடியுமோ அதுவரை தளராது சென்றுசென்று வாதாடிவாதாடி நீதிமன்றங்கள் மூலமாகவும் மீட்டெடுக்கக் கூடிய நம்பிக்கையும் துணிவும் உள்ள ஒரு தலைவர் இன்று இந்தியாவில் உண்டும் என்றால் அந்த ஒரே தலைவி நம் புரட்சித்தலைவி அம்மாதான் என்றே தமிழராகிய நாம் பெருமையோடு மார்தட்டிக் கொள்ளலாம்.

அது போலவே ஈழத்ததமிழர் பிரச்சனையிலும் அதற்கு எதிரான அரசுதான் மத்தியில் ஆள்கிறது என்றே தெரிந்தாலும் எதற்கும் அஞ்சாமல் மாநில சட்டமன்றத்தில் தைரியமாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் நடுவண் அரசுக்கு எதிராகவும் இலங்கை அதிபர் ராசபச்சே போர்க்குற்றவாளிதான் என தீர்மானம் இயற்றும் துணிவும் வேறு எவருக்கு வரும்.இது ஒரு உலகத் தமிழரின் உரிமைக்கான ஓங்கிய குரலின் வரலாற்றுப்பதிவு ஆகும்..

ஈழத்தமிழர்மூவர் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தண்டனைக்குறைப்பு மற்றும் விடுதலை விவகாரங்களில் துணிச்சலாக ஒரூ தாயுள்ளத்தோடு சட்டமன்றத்தில் ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றும் வரை உச்சம் சென்று தமிழ் உணர்வோடு செயல்பட்ட நம் அம்மாவின் உயர்வேங்கே?அய்யோ அய்யோ இந்த தேர்தல் காலத்தில் அந்த மூவரும் விடுதலை என நீதிமன்றம் அறிவித்துவிட்டால் நமக்குத் தேர்தல் முடிவு பாதகமாக அமைந்துவிடுமே .அதனால் தீர்ப்பு  தள்ளிப்போகட்டும் எனகடவுளைவழிபட்டபகுத்தறிவாளர்களின்சுயநலம்எங்கே?என்ற நன்மை தீமை  ஆராய்ந்து பார்த்துத்தான் மக்கள் தீர்ப்பை சரியாக வழங்கியுள்ளார்கள்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகளைக் கூட அவர் நினைத்திருந்தால் நடுவண் அரசு அதிகாராம் பெற்றவர்களின் முன்னே பணிந்து நின்று நீக்கியிருக்க முடியும்.ஆனால் எவர் முன்னும் தலை வணங்கத் துணியாத அம்மா அவர்கள் சட்டப்படி தன்னைக்குற்றம் அற்றவராக நாட்டுக்கு மெய்ப்பிக்கவே அவர் நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.சர்க்காரியா வழக்கு எப்படிக்காணாமல் போனது என்று மக்களுக்குத் தெரியாதா என்ன?

தன்னைச்சுற்றி வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக நான் எதுவரையும் முயன்று எட்டிப் பறிப்பேன்.அதனால் எனக்கு என்ன நேர்ந்தாலும் அதுபற்றி எனக்குக் கவலைகள் இல்லை.என் மக்களின் சுபிட்சம் ஒன்றே என் குறிக்கோள்.அதுவே என் மூச்சு என வாழும் ஒரே தலைவி நம் அம்மாதான்.அம்மா என அன்போடு இன்று தமிழகம் உச்சரிக்கும் ஒரே தாரக மந்திரம் இதுதான்.இது என்றென்றும் நிரந்தரம்.

தொடர்ந்தும் தமிழ் மண்ணில் அம்மாவின் ஆட்சியே தொடர்ந்திருந்தால்.தமிழ் நாட்டில் மின்வெட்டு என்ற சொல்லே தென்பட்டிருக்காது.விலைவாசி உயர்வு விண்தொட்டிருக்காது.வறுமை எனும் சாபம் ஒழிக்கப்பட்டு வளமை எனும் தீபம் ஏற்றப்பட்டு பசுமை மிளிர்ந்திருக்கும்.நீரில்லை சோறில்லை எனும் கொடுமைகள் நீங்கி சுபம் பெற்றிருக்கும்.வன்மைகள் அங்கொன்றும் இங்கொன்றும் கூட இல்லாமல் மண்விட்டு மறைந்தே ஒழிந்தும் தொலைந்தே போயிருக்கும்.

ஆகவே நாம் இனிமேலாவது விழித்திருப்போம்.வில்லங்கம் இனி நிகழ்ந்துவிடாமல் தமிழகத்தைக் காத்திருப்போம்.நிசம் என்ன?பொய் என்ன ?என்பதை இப்போதாவது நாம் புரிந்துகொண்டோமே.அது போதும்.நல்லவேளை ஆண்டவன் செயலால் முழுமையாகப் பராகரியாவதற்குள் விழித்துக்கொண்டுவிட்டோம். உசாராக இருப்போம்.அம்மாவின் அற்பணிப்பு சேவைகளுக்குக் நாம் கரங்களாக உயர்ந்து உதவுவோம்.

வாழ்க அம்மா.வளர்க அம்மாவின் ஆட்சி.

என்றும் ஒலிக்கட்டும் எம்.ஜி.ஆர் எனும் இனிய நாமம்.

கொ..பெ.பி.அய்யா.

இதய தெய்வமே போற்றி போற்றி.

இதய தெய்வமே போற்றி!போற்றி!

இந்தியாவின் இதயம் தமிழகம்--எங்கள்
இதய தெய்வம் அம்மா!
சந்தியா அன்னை  வள்ளல்--தந்த
தங்கத் தாரகை அம்மா!
இதய தெய்வமே போற்றி!போற்றி!

அம்மாவின் தமிழ் நாடு வாழ்த்து.
--------------------------------------------------
தருவேயருளே திருவே வாழ்க!
தமிழே!எமையாள் அம்மா வாழ்க!

பல்லவம் கொங்கு பாண்டியம் நாஞ்சில்
வல்லவ சேது ஈழம் சோழம்
சேரம் செழித்த இலக்கியத் தமிழகம்
சீராம் சிறப்பாம் அம்மா வாழ்க!

காவேரி பொன்னி பாலாறு பெண்ணை
தாமிரபரணி வைகை பெரியாறு
பூமூன்று விளைய பொங்கிடக்கருணை
நீ தந்தாளும் வளநாடு வாழ்க!

வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள்
பங்கமாகா கீழ்தென் அரண்கள்.
மங்கா உன் புகழ் பாடிடும் அலைகள்
சங்கம் பாடும் அம்மா வாழ்க!

மேற்கும் கிழக்கும் மலைத்தொடர் கூட்டம்
ஈர்ககும் வாசனை இந்திரத் தோட்டம்.
பார்ககும் உலகின் பரவச ஆட்டம்
தீர்க்கம் பொழிலாம் அம்மா வாழ்க!

இனிக்கும் தன்மை இயலிசை நாடகம்.
கணக்கின் செம்மை தொகையும் பாட்டும்.
காவியம் காப்பியம் தொன்மை போற்றும
மேவிய செந்தமிழ் அம்மா வாழ்க!

அம்மா அம்மாதான்.
-----------------------------------
அம்மா என்றாலே திக்கெட்டும்--சும்மா
அதிருதுல்ல திக்கென்றும்.
அம்மா என்றாலே அம்மாதான்--நிலையாய்
இம்மாநில முதல்வர் அம்மாதான்.

அம்மா என்னும் அன்பின் சொல்--சிலரை
அச்சம் பற்றும் மாயமென்ன!
மம்மி என்றும் அயல் பழகியும்-தானே
தும்மலில் வெளிப்படும் அம்மாதான்.

அம்மா என்றால் சும்மாவா!-ஏழை
அன்பில் உதித்த சொல்லல்லவா!
வறுமை ஒழித்தவர் அம்மாதான்--தமிழ்
பெருமை உயர்த்தினார் அம்மாதான்.

கூலிக்கு உழைக்கும் ஏழை-- வயிறு
வேளைக்கு உணவு சாலை .
யாருக்கு விளங்கும் துயரு--இதை
பாருக்கும் சொன்னார் புரிவு.

அன்னபூரணி அம்மா திட்டம்--வேறு
எண்ண யாரினி உண்டோ சொல்.
அம்மா உணவகம் அட்சயபாத்திரம்-நன்மை
அருளிய அம்மா அம்மாதான்.

ஆலயம் தோறும் அன்னதானம்.--உண்டு
ஆற்றும்பசிக்கு அம்மா ஞானம்
பிள்ளைச் சோறும் கேட்பாரில்லை--இன்று
பிச்சை கோரும் பாவமுமில்லை.

வயது முதிர்ந்தும் சிறுமயில்லை--எவரும்
அருமை குறைந்தும் அநாதியில்லை.
ஏழை என்றொரு சொல்லிருந்தாலும்--வறுமை
ஏழ்மை என்றிங்கு துயரமில்லை.

விதிவெல்லும் உயர்நிலை மருத்துவம்--தாய்மை
கதிகூட்டும் கற்பினியர் சிகிச்சைகள்
பிறப்பும் முதலே காலந்தொட்டும்--அரசே
பொறுப்பெனும் அம்மா அம்மாதான்.

அம்மா உணவு அம்மா மருந்து
அம்மா குடிநீர் அம்மா அரங்கு
அம்மா கனவு ஆனது நினவு
அம்மா! அம்மா!அவரே அம்மா.

அம்மாவின் தொழிற் புரட்சி.
------------------------------------------
தொழில் வளற்சி மாநாடு 
பொழில் எழுச்சி தாய்நாடு.
எழில் மலற்சி வளநாடு--அம்மா
எழு புரட்சித் தமிழ்நாடு.

சிந்தனைகள் வேறில்லை 
நிந்தனைகள் பாடில்லை.
கண்டடையும் உச்சயெல்லை--அம்மா
கொண்டநடை தமிழ்நாடு.

அரசியல் வெறும்பேச்சு
விரசியல் விடும்மூச்சு
உரசாத நெருப்பாச்சு--அம்மா
புரட்சித் தொழில் தமிழ்நாடு.

பன்னாடும் கண்ணுயர்த்தும்.
பொன்னாடு என்றுயர்த்தும்.
இரண்டு லட்சம் கோடிமுதல்-அம்மா
திரட்டித் தந்த தமிழ்நாடு.

முன்னேறும் பாதையொன்றே
தன்னோட பார்வையென்றே
கொண்டாளும் நேர்மைகொண்ட--முதன்மை
அம்மாவின் தமிழ்நாடு.

மழை நீரை சேகரிப்போம்-
--------------------------------------
தண்ணீர் தண்ணீர் என தவிக்கும் காலமும்
தரணியில் வரவேண்டாம்—அதை
எண்ணிச் செய்தார் இன்றே அம்மா
இந்தியாவின் முன்னோடியாய்

கூரை நீரை பூமிக்குள் புதைத்தார்
பூமி நீரை கரைகட்டித் தடுத்தார்--மழைநீர்
ஒவ்வொரு துளியும் உயிரெனக் காத்தார். 
இவ்வையம் வாழ்த்த அம்மா உயர்ந்தார்.

இருள் விலகியது
--------------------------------
பகலிலும் சிலர்க்கு
இருட்டாய் தெரியும்.
இரவா பகலா புரியாது.-அதிசயம்
இரவும் பகலானது

உபரி மின்சாரம்
சுபமாச்சு தமிழகம்.
சபை முழங்கட்டும்
சபாஸ் அம்மாவுக்கு.


எதிரி எவருண்டு!
------------------------
எதிரிதான் எவருண்டோ!
எதிர்க்க ஒரு பொருளுண்டோ!
உதிரிகள் ஊளையிங்கோ!
விதிவழி சடங்கன்றோ!

விதியோ மரபோ! எதுவானாலும்
எதிர்க்கவும் ஓராள் இருக்கட்டும்
என்றே நாமே கொண்டுவந்தோம்
ஆனாலிங்கு ஆளில்லை காணோம்.

எங்கோ செய்யும் நகைச்சுவைகள்
இங்கும் செய்தால் சிரிக்கலாம்.
துருத்தாமல் நாவு திருத்தமாய்
உரைத்தால் ஆஹா ரசிக்கலாம்

ஊருக்கெல்லாம் பெய்யும் மழை
உமக்கும்தான் உண்டும் முறை
பாருக்கெல்லாம் அம்மாதான்
பாவம் நீவீர் சும்மாதான்.

பொச்சாப்புப் புலம்பல்கள்..
பொறுப்பில்லா ஓட்டங்கள்.
மிச்சமுள்ள தொடர்களேனும்
வருகை தந்தால் வாழ்த்தலாம்.

இந்தியாவின் முன்னோடி
எந்தநாளும் தமிழ்நாடே!
சந்தியாவின் மகளேதான்
இந்தியாவின் எதிர் காலம்.

இதய தெய்வமென்று சொன்னாலென்ன!
-------------------------------------------------------------
செய்யுந்துணை என்றுமே
மெய்கருணை கொண்டுமே-எம்மை
உய்விக்க நேர்ந்தாரை
உள்ளத்தால் அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!--பணிந்தும்
தொழுவதும் எம்பெருமை.

சொந்தங்கண்டு வாழாமல்
தன்னலமும் பேணாமல்—எம்மை
பந்தமென்று தாங்கிடும்
பாசங்கொண்ட அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!-பணிந்தும்
தொழுவதும் எம்பெருமை


கொ.பெ.பி.அய்யா.


Saturday 12 September 2015

அம்மான்னா அம்மாதான்.

அம்மான்னா அதிருதுல்ல!

அம்மா என்னும் சொல்லுக்கு-பொருள்
அன்பு ஒன்றே உலகுக்கு.
அம்மா என்றும் சொன்னாலே-சும்மா
அதிருதுல்ல விண்ணுக்கு.

அம்மா என்று மொழிவதற்கு--உயிர்
ஆன்மாவில் பிறப்பதற்கு.
அம்மா தான் மொழிகளுக்கு--சொல்லின்
ஆதாரம் சிறப்பதற்கு..

அம்மா சொல் இயல்புக்கு--ஐயோ!
மம்மி  தானோ !
அம்மா என்றே இசைக்கின்ற---இளங்
கன்றுக்கென்ன பயிற்றுவதோ!

அம்மாவுக்கும் மாற்றெதற்கு--தமிழ்
அறிந்தும் தானே ஏற்றிருக்கு--மொழி
அம்மா ஒன்றே மொழிவற்கு--நிலை
கொண்டும் அம்மா ஆள்வதற்கே!

கொ.பெ.பி.அய்யா.


Wednesday 9 September 2015

தொழிற் புரட்சி

அம்மாவின் தொழிற் புரட்சி.

தொழில் வளற்சி மாநாடு
பொழில் எழுச்சி தாய்நாடு.
எழில் மலற்சி வளநாடு
எழு புரட்சித் தமிழ்நாடு.

ஒன்றுக்குள் ஒன்றான
இந்தியாவின் நன்றான
நன்றுக்குள் வென்றான
நின்ற புகழ் தமிழ்நாடு.

சிந்தனைகள் வேறில்லை
நிந்தனைகள் பாடில்லை.
கண்டடையும் உச்சயெல்லை
கொண்டநடை தமிழ்நாடு.

வந்தனையும் வரவுகள்
கொண்டனையும் உறவுகள்.
என்றுணர் புரிவுகள்
என்றும்வளர் தமிழ்நாடு.

அரசியல் வெறும்பேச்சு
விரசியல் விடும்மூச்சு
உரசாத நெருப்பாச்சு
புரட்சித்தொழில் தமிழ்நாடு.

பன்னாடும் கண்ணுயர்த்தும்.
பொன்னாடு என்றுயர்த்தும்.
நன்னார்வம் முந்திவரும்
தன்னாடாம் தமிழ்நாடு.

முன்னேறும் பாதையொன்றே
தன்னோட பார்வையென்றே
கொண்டாளும் நேர்மைகொண்ட
அம்மாவின் தமிழ்நாடு.

கொ.பெ.பி.அய்யா.


எதிரி எதிரே யார்?

எதிரி எவருண்டு!

எதிரிதான் எவருண்டோ!
இமயத்தின் நிகருண்டோ!
உதிரிகள் ஊளையீட்டே
உலகையும் உருட்டல் கண்டோ!

பொச்சாப்புப் புலம்பல்கள்.
எச்சைகளின் அலம்பல்கள்
அச்சமில்லா அம்மா முன்
துச்சமெனும் தூசு மண்.

இந்தியாவின் முன்னோடி
எந்தநாளும் தமிழ்நாடே!
சந்தியாவின் பெண்ணேதான்
இந்தியாவின் எதிர் காலம்.

யாருக்கென்ன இல்லையோ!
ஊருக்குள் கேட்ட சொல்லோ!
நேருக்கு நேரே நில்
நீருக்கு நெருப்போ சொல்!

மக்களின் சக்தியடா!
சிக்கினால் முக்தியடா!
திக்கெல்லாம் தொண்டரடா!
சக்கையும் மிஞ்சுமாடா!

காவடி ஆட்டமெல்லாம்
சேவிக்கத் தானென்றால்
பாவிக்கும் தீட்சமுண்டு
கூவிக்கேள் அம்மா என்று.

ஊருக்கெல்லாம் மழையுண்டு.
உனக்கும்தான் நலமுண்டு.
பாருக்கெல்லாம் அம்மாதான்.
பாவம் நீயும் நம்மாள்தான்.

கொ.பெ.பி.அய்யா.