Wednesday 30 April 2014

நலாலவேளை.

நல்ல வேளை.

நல்ல வேளை எம்ஜியாரை
கண்டு கொண்டோமோ!.
இல்லை யெனில் நாடு என்ன
ஆகும் கண்டமோ!!

அள்ளிக் கொள்ளை தானேன்னு
அடித்திருப்பாரோ!-ஐயோ
கொள்ளிக் குடம் அந்நாளே
உடைத் திருப்பாரோ!

சரியான நேரம் எம்ஜியாரை
கண்டு கொண்டாமோ!--பூமி
சரித்திரத்தில் தமிழ் நாட்டை
வென்றெடுத்தோமோ!

நிரந்தரமாய் தமிழர் புகழ்
நிலைத்திருக்கவே—தர்மம்
நிறை அம்மாவை எம்ஜியார்
தெரிந்தெடுத்தாரோ!

நினைக்கும் பொழுதே நெஞ்சம்
எல்லாம் பதற்றமாகுதே!--கொஞ்சம்
எம்ஜியார் அசந்திருந்தால்
என்ன கதி நேர்ந்திருக்குமோ!

விசக்கிரிமி பரவி மோசம்
ஆகிருப்போமோ!-–ஐயோ
விடியாத இருளுக்குள்ளே
துடிச்சிருப்போமோ!

விடிஞ்சதையும் அடைஞ்சு போக
ஊதிப் பாத்தாங்க--கதை
முடிஞ்சாருன்னு பழையபடி
நுழைய வந்தாங்க.

அம்மா யாரு எம்ஜியாரு
தேர்ந்த பேருங்க—நம்மை
அம்மா தெய்வம் போல
காத்து வாராங்க.

கொ.பெ.பி.அய்யா.





கமழுந்தமிழே

கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!

தமிழ்மகளேதமிழ்மகளேவா!வா!
கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!
தமிழீழம் மலர்ந்ததென்றே வா!வா!
தமிழரிங்கு தலை நிமிர்ந்தோம் வா!வா!

தமிழாளுந் தனியரசி வா!வா!
தரணிக்கு வல்லரசி வா!வா!..
அமிழ்தமே இலக்கியமே வா!வா!
அம்மா புரட்சித் தலைவியே வா!வா!

பெண்ணினப் பெருமையே வா வா!
பெண்ணிலை உரிமையே வா வா!
சுய உதவிப் பொருளே நீ வா வா!
தயவொளி அருளே நீ வா வா!

பட்டினியை ஒழித்தவளே வா வா!
பிச்சையவலம் முடித்தவளே வா வா!
தொட்டில்த்திட்டம் கண்டவளே வா வா!
தாய்க்குலத்தைக் காத்தவளே வா வா!

அனாதை சொல்லழித்தாய் வா வா!
அவலையற்கு வாழ்வளித்தாய் வா வா!
மழலையன்பில் மகிழ்பவளே வா வா!
தலைவராட்சி தொடர்பவளே வா வா!

 ன்னிடேன்னிட
புரட்சியாரின் வாரிசே  வா!வா!
வறுமையிருள் விடியலே  வா!வா!
குலமுயர்த்துங் கலைமகளே வா!வா!
நலமருளும் காவேரியே வா!வா!

ஒற்றுமையின் உணர்வே நீ வா!வா!
பற்றுணர்த்துந் தாயே நீ வா!வா!
மாற்றாருந் தொழுவோளே வா!வா!
வேற்றுமை யொளித்தோளே வா!வா!

காற்றான கருணையே நீ வா!வா!
ஊற்றான உரிமையே நீ வா!வா!
ஆற்றான அம்மா நீ வா!வா!
ஊற்றினோம்  பூமழை நீ  வா!வா!



.கொ.பெ.பி.அய்யா.








கொடியேறுது.

கொடியேறுது.

இரட்டை இரட்டை இலைகளாய்
பரந்து கொடிகள் பரவுது.
விந்திய மலைகள் தாண்டியும்
இந்தியாவை சுற்றுது..

இமய மலையை வளையுது.
எவரெஸ்ட் சிகரம் ஏறுது
தமிழனன்று நட்ட கொடி
தானுங்கண்டு வாழ்த்துது.

படர்ந்து படர்ந்து நிறையுது.
பார் முழுக்க படருது.
பாராளும் மன்றம் கண்டு
நாடாள விரையுது.

அய்யன் காம ராசரும்
அவர் காண நினைத்ததும்
மெய்யாகும் பசுமையும்
வைபவம் செய்யுதாம்`

அம்மா புகழ் பாடுது.
சிம்மாசனமும் ஏறுது.
எம்ஜியாரின் நாடிது
என்றே கொடி ஏறுது.

கொ.பெ.பி.அய்யா.





Tuesday 29 April 2014

வாராரு வாத்தியாரு






















வாராரு வாத்தியாரு வாராரு.!


வாராரு வாராரு 
வாத்தியாரு வாராரு 
வணங்காமுடி வீரரவர் 
வரிச காட்டி வாராரு.
சாட்டை கொண்டு சுழட்டியே
வேட்டையாட வாராரு.
புரட்சித் தலைவி ரூபத்திலே
புதுமை செய்ய வாராரு.

பட்டப் பகல் கொள்ளைகளை 
பட்டொழிக்க வாராரு.
வெட்டவெளி வீதிக் கொலை 
தட்டி ஒடுக்க வாராரு.
வன்கொடுமைக் கற்பழிப்பு 
இன்னல் நீக்க வாராரு.
பெண்ணடிமை செய்வோரை 
பிச்செறிய வாராரு.

ஊழல்செய்யும் பேயர்ககளை
ஓட்டத்தானே வாராரரு
கூலிப்படை நாய்களையும் 
காலிசெய்ய வாராரு.
பொய்யரசியல்ப் பித்தர்களைப் 
புறம்போக்க வாராரு..
கையூட்டுக் கள்வர்களைக் 
களையெடுக்க வாராரு..

சுயநலக் கூட்டத்திற்கு 
சூடு வைக்க வாராரு..
சுரண்டும் பேர்வழிகளுக்கு 
கரண்டு வைக்க வாராரு..
பதுக்கும் கொள்ளைத் திருடர்களை 
ஒதுக்கி வைக்க வாராரு..
பணம் பறிக்கும் பாவிகளை 
இனம் பிரிக்க வாராரு..

காமவேட்டைக் கயவர்களை 
காவு கொள்ள வாராரு..
பாவச்செயல் பாவிகளை
ஆவிபோக்க வாராரு.
ஊதாரிக் கூட்டங்களை 
ஒழித்துக்கட்ட வாராரு.. 
நீதிவழி நியாயங்களை 
நிலை நாட்ட வாராரு..

ஈழத் தமிழ் மக்களுக்கு 
தோள்கொடுக்க வாராரு..
வீரம் போற்றும் வீரருக்கு
வாள்கொடுக்க வாராரு..
ஈனங்கொண்ட எதிரிகளை 
வேரறுக்க வாராரு..
மானம் போற்றும் தமிழினத்தை 
மகுடமேற்ற வாராரு..

புரட்சித் தலைவி பேரிலே
புரட்சித்தலைவர் வாராரு.
கனக்கும் நம்ம  சுமை இறக்கக்
கட்டாயம் வாராரு..
கணக்குப் போட்டு வாராரு.
காலம் இது வாராரு.
கணக்குத் தீர்க்க வாராரு
காவல்காரன் வாராரு.

கொ.பெ.பி.அய்யா.




மின்னலாகள்

மின்னும் நட்சத்திரம்.

மின்னல் மின்னும்  நட்சத்திரம்
விண்ணில் மின்னும் நட்சத்திரம்.
என்ன நீங்கள்  அதிசயம்.

எமக்கும் மேலே எத்தனை தூரம்?
எம்மோட உலகில்  உம்மைப் போலே
உம்போல் மின்னும் வைரம் எவரோ!!

எம்ஜியார் ஜெயா எனும் மீன்கள்
எந்நாளும் மின்னும் தாரகைகள்.
ஏழைகள் எங்கள் விடி வெள்ளிகள்.

இரட்டை இலைகள் தாம் நீங்கள்
என்றும் பசுமை தாம் நீங்கள்.
விரட்டும் இருளை ஒளி நீங்கள்.

கொ.பெ.பி.அய்யா.

எம்ஜிஆர் புகழ் மந்திரம்.

எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்

எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
இருந்தார் எனுமொரு நிரந்தரம்.
கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
கூடி வாழ்ந்த அதிசயம்.

வண்ணமும் எண்ணமும் தங்கம்—நீ
வாழ்ந்த வரையும் சிங்கம்.
இன்னமும் உன்னையும் வெல்ல—இனி
என்றும் பிறப்பார் இல்லை.

கடவுள் தானவன் முதலாளி—அவன்
கண்டதில் நீயொரு தொழிலாளி.
கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.—இறைவன்
கொடுத்ததை எல்லாம் கொடுத்தான்.

மரணம் என்பது உனக்கில்லை—இந்த
மண்ணும் மரணம் ஆவதில்லை.
இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்—என்றும்
ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.

இருந்த போது இழித்தோரே—உயிர்
துறந்த போது விழித்தாரே.
இன்றும் உன் முகம் பாடாமல்—நாள் 
ஒன்றும் விடிவதும் இல்லையே!

மறைந்தும் வழங்கும் வள்ளலே—உனை
மறைத்திட எது எழும் இமயமே!
உறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
திரைகளால் பாடி வங்கமே!

கொ.பெ.பி.அய்யா.  

 .
http://aiadmkpaadalkal.blogspot.in/




Monday 28 April 2014

சவால்.

சவாலுக்கு சவால்.

நல்லார்க்கு நல்லாராய்
வில்லாற்கு வல்லாராய்
கள்ளார்க்குப் பொல்லாராய்
கல்லாற்கும் சொல்லோராய்
உள்ளாரும் ஒருவராய்
எல்லாம் அவர் அம்மாவாய்.

சேவலுக்கு சேவலாய்
கூவிடும் துணிச்சலாய்      
தூவலுக்குச் சீறலாய்
பாவிடும் அணிகளாய்
சவாலுக்கு சவாலாய்
காவல் அவர் அம்மாவாய்.

தீவினை அழிக்கவே!
தீர்வினை தேறவே!
நாவினை அடக்கவே!
நஞ்சுரை மடிக்கவே!  
நேர்வினை அம்மாவே!
நேர்ந்திட்டார் புரட்சியார்.

பொய் மொழி வழக்குகள்
புறமுதுகு காட்டாமல்
மெய்வழி வழக்கிலே
மெய்ப்பித்து நிறுத்தியே
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்தம்மா நிலை செய்வார்.

கொ.பெ.பி.அய்யா.



காந்த சக்தி.

காந்த சக்தி.

இனிக்கும் தமிழ் அறிஞர் அண்ணா 
இதயக் கனி எம்ஜியார்.
கழகத்தின் காந்த சக்தி
கலைச் செல்வன் எம்ஜியார்.

முகம் காட்டு போதும் கோடி
தகும் ஒட்டு எம்ஜியார்.
அரசியலும் அழகு என்றால்
அது விளங்கும் எம்ஜியார்.

வற்றாத ஜீவ ஆறு
வள்ளல் அவர் எம்ஜியார்.
பொன் மனச் செம்மல் அவர்
மென் குணத்தார் எம்ஜியார்.

சிலை அழகு கலை என்றால்
கலை அழகு எம்ஜியார்.
அண்ணாவின் கழகம் என்றால்
அண்ணல்அவர் எம்ஜியார் .

தமிழ்த் தாயின் செல்லப் பிள்ளை.
தங்க மகன் எம்ஜியார்.
தலைவர் அண்ணா புகழ் காக்க
கழகம் கண்டார் எம்ஜியார்.

அலைந் தலைந்து சேவைசெய்து
களைத்த புரட்சி எம்ஜியார்
தலைவியிடம் ஒப்படைத்து
அலை அயர்ந்தார் எம்ஜிஜியார்..

கொ.பெ.பி.அய்யா.

Sunday 27 April 2014

நானும் அவர்போலே.

நானும் அவர் போலே!

என்னுறவே என்னுயிரே
எண்ணுவதும் உன்னலமே!
தமிழினமே தாய் மனமே!—இந்த
தாயும் நான் உனக்காக.

நாதி என்று சொல்லிக்கொள்ள
சாதி இந்தத் தமிழ்தானே!
மீதி என்ன வேறெனக்கு?—தமிழே
போதும் உந்தன் அரவணைப்பு.

சந்தியா ஜெயராமன்
தந்த மகள் ஜெயலலிதா
இந்தியா என்றாலும்—எந்தன்
தமிழ்தானே எனையாளும்.

தமிழ்தானே தாயெனக்கு
தாய்தானே நானுனக்கு.
வேறென்ன உறவிருக்கு?-வேறு
யாரென்ன துணையிருக்கு?

தாய் தந்த தமிழ் பாலே
சேய் எந்தன் உயிர் நாளே!
வாழ்வதும் நான் யார்க்காக?—என்
வாரிசான உனக்காக.

தந்தை வழி தமிழ்வழியே!
எந்தன் வழி அவ்வழியே!
சிந்தை எல்லாம் நீதானே—எனது
சிறப்பு எல்லாம் நீதானே!

என்னுடைய சொத்தே நீ!
என்னுடைய சுகமே நீ!
தமிழே என் சந்ததியே!-தமிழ்
தாய் மடியே தானெனக்கே!


எனக்குத் தலைவர் எம்ஜியார்
எதை எடுத்துப் போனாரோ!
தனது சொந்தம் தமிழென்றார்.-அது
எனது சொந்தம் தானன்றோ!

கொ.பெ.பி.அய்யா.


http://aiadmkpaadalkal.blogspot.in

Saturday 26 April 2014

நன்றி சொல்லுவோம்


















நன்றி சொல்லுவோம்.

நன்றி சொல்லுவோம் நாமே வெல்லுவோம்
நமக்குள் நாமே நன்றி கொள்ளுவோம்.
நாளையப் பாரதம் நமது கைகளில்
வேளை வந்தது விடியல் காணுவோம்.

எம்ஜியார் படைத்ததும் இயக்கம் வென்றதும்
இரட்டை இலையதும் புரட்சி என்பதும்
தமிழன் உயர்ந்ததும் தரணி ஆள்வதும்.
தர்மம் ஜெயமெனப் பரணி பாடுவோம்.

தென்திசைக் கோடியும் விண்மிசை ஏறியும்
பண்ணிசைப் பாடியும் பரவசம் கூடியும்
வெற்றியை முழக்கியும் சுற்றியே கூவியும்
பற்றினோம் நடுவணை முத்தமிழ் சூடியும்.

கட்டியம் கூவிடும் நிச்சயம் ஒலிக்குது
சத்தியம் மேவிடும் பச்சையம் ஒளிருது.
சத்தியா சந்தியா அன்னையர் குலவைகள்
சத்தமாய்ப் பாடிடும் சங்கீதம் கேட்குது.

ஜெயம்ஜெயம் என்றங்கே ஜெயம்பாடும் வாழ்த்துக்கள்
பயமறியாப் பாவையவள் பாரதத்தாய் ஏற்புகள்.
ஜெயலலிதா எங்கள்தாய் தமிழகத்தின் நம்பிக்கை
புயம்தாங்கி ஏற்கிறாள் பிரதமராய்த் தன்சுமை.

கொ.பெ.பி.அய்யா.


Friday 25 April 2014

தங்கக் குணத்தான்.

தங்கக் குணத்தான்.

தங்கக் குணத்தான் தாராள மனத்தான்.
திங்கள் முகத்தான் தேனான அகத்தான்.
தங்கத் தாரகை நெஞ்சத் திருப்பவன்
எங்கள் எம்ஜியார் என்றும் புகழிருப்பான்.

அன்றவன் காட்டிய இரட்டை விரல்கள்.
நின்றெம் வாழ்வில் புரட்டும் இடர்கள்`
வென்றவன் ஏற்றிய புரட்சிக் கொடிகள்
என்றுமே போற்றிப் பறக்கும் புகழ்கள்.

பஞ்சம் விரட்டிய அன்னக் கனவு.
நெஞ்சம் நிரம்பிய அம்மா உணவு.
மிஞ்சும் தமிழகம் இந்திய மண்ணில்
அஞ்சா மனத்தினள் அம்மா செயல்கள்.

உன்வழி தொடர பின்வழி அம்மா.
நன்வழி படர உன்மொழி கொள்வம்.
என்றும் மறவா மந்திரம் அய்யா!
எம்ஜியார் புகழே நிரந்தரம் அய்யா.

கொ.பெ.பி.அய்யா.  



விடி வெள்ளி.

விடிவெள்ளி அம்மா.

அம்மா நலம் வாழ இறையருள வேண்டும்--நிரந்தரம்
இம்மா நிலம் ஆள தமிழருள வேண்டும்.
எம்முள் உரமாக தாயருள வேண்டும்---எமக்கு
உம்முள் வரமாக வாழ்வருள  வேண்டும்.
  
இல்லறம் துறந்த கோமள வள்ளி அம்மா--வாழ்வில்
சொல்லறம் சிறந்த நேர்மனப் புள்ளி அம்மா.
வெல்லறம் துணிந்த போர்க்குண வல்லி அம்மா--அரசியல்
நல்லறம் புரிந்திடும் சீர்விடி வெள்ளி அம்மா.

எம்ஜியார் கனவினை நிறை செய்யும் அம்மா--நெஞ்சில்
எம்முயிர் நினைவினை சுமை கொஞ்சும் அம்மா..
தன்னல உணர்வினை சிறை வைத்த அம்மா---என்றும்
எம்நலம் வினையினை அமைவித்த அம்மா.

சுய நலம் சுரண்டி சரிந்திட்ட மண்ணை--அம்மா
புய பலம் கொண்டு உயர்த்தினார் இன்னை
இட வலம் கண்டு இயக்கியும் அரசை--அம்மா
நெடு வளம் வென்று நிறுத்தினார் வரிசை.


கொ.பெ.பி.அய்யா.
  



Wednesday 23 April 2014

ஜெயம் ஜெயமே

தனியொரு அகராதி.

ஜெயம் ஜெயம் என்றால் ஜெயலலிதா
ஜெய சக்தி என்பதும் ஜெயலலிதா.
பயம் பயம் என்று மிரள்வோற்கும்—பயம்
திருத்தும் அருள்முகம் ஜெயலலிதா.

பயம் என்ற சொல்லும் பயந்தோடும்.
பயந்தும் அச்சமும் நடு நடுங்கும்,
பயமும் அச்சமும் பழக்கமில்லை.-அதன்
பழக்கம் அறிவதும் வழக்கமில்லை.

அம்மா என்றோர் மொழி யுண்டு.
அம்மாவுக் கென்றோர் வழி யுண்டு.
அச்சமும் பயமும் ஜெயம் மொழியில்
அப்படி எதுவும் கிடையாது.

பிறந்தோம் என்பது உண்மை யென்றால்
இருந்தோம் என்பதும் அவசியம்.—அந்த
அவசியம் தொலையும் பயம் இருந்தால்.
அம்மா ஜெயம்தான் வரலாறு.

குடும்பம் என்றொரு தன்னலம் துறந்து
தடையாய் நிற்கும் அச்சமும் மறந்து
கடமை உணர்ந்த அம்மாவே.பொதுவாழ்வு
உடமை யாகினள் தமிழுக்கே அகவாழ்வு.

அம்மா தானொரு அகராதி நூலே!
அம்மா என்பதன் பொருளும் போலே!
அச்சமும் பயமும் ஜெயமிடம் இல்லை.
அவசியம் என்பதும் இனியென்ன வேலை.


கொ.பெ.பி.அய்யா.

அன்பு நெஞ்சங்களே என் பாடல்கள் அம்மாவின் புகழ் பாடும்
இசை வட்டுகளாக்கிப் பரப்புவீர்.

Tuesday 22 April 2014

இரட்டை இலை ஓட்டுக்காரி.

ரெட்ட இலை ஒட்டுக்காரி

ரெட்ட மாட்டு வண்டிக்காரா!
ரெட்டப் பனை புஞ்சக்காரா!
ரெட்ட மலை ஊருக்காரா!
ரெட்ட இலை ஓட்டுக்காரா!
ஓட்டுப்போட ரெட்ட இலைக்கு
ஓடுறேன் ரெட்ட மீசைக்காரா!.

ரெட்ட இலை கொண்டக்காரி!
ரெட்ட மடை பண்ணக்காரி!
ரெட்ட ஜடை பின்னல்காரி!
ரெட்ட இலை ஒட்டுக்காரி!
ஓட்டுப்போட ரெட்ட இலைக்கு
ஓடிவாறேன் சேலைக்காரி!.

நீயும் நானும் ரெட்ட இலை
நேரம் பாரு அம்மாங்காரா!
ஆணும் பெண்ணும் ரெட்ட இலை.
அர்த்தம் அது ரெட்ட இலை.
வெற்றி இலை வெற்றிலை
குத்து ஓட்டு ரெட்ட இலை!

நானும் நீயும் ரெட்ட இலை
வேணும் அம்மா வெற்றி நிலை
காணும் தூரம் ரெட்ட இலை
காட்சி தானே ரெட்ட இலை
வீசுது பார் வெற்றி அலை
வெற்றி என்பதே ரெட்ட இலை.

கொ.பெ.பி.அய்யா.

அன்பு நெஞ்சங்களே என் பாடல்கள் அம்மாவின் புகழ் பாடும்
இசை வட்டுகளாக்கிப் பரப்புவீர்.



இரட்டை இலைக்கோலம்

இரட்டை இலைக் கோலம்.

வாசல் எங்கும் இரட்டை இலைக்
கோலம் பாருங்கள்.—அது
பாசமுள்ள பச்சை வண்ணம்
ஜாலம் பாருங்கள்.
கோலம் போடும் கன்னியரின்
எண்ணம் கேளுங்கள்—நல்ல
காலம் கூறும் வண்ணமதன்
திண்ணம் கேளுங்கள்.

பின்னல் ஜடை பின்னலிலே
என்ன பாருங்கள்.—பச்சை
வண்ணமதில் இரட்டை இலை
சின்னம் பாருங்கள்.
இரட்டை இலை சூடிக்கொண்ட
வண்ணம் கேளுங்கள்.—பசுமை
வரட்டும் எனப் பாடுகின்ற
பண்ணும் கேளுங்கள்.

கருப்பு சிவப்பு இடையே தூய
வெள்ளை பாருங்கள்.-தமிழன்
கருத்து சிவந்த உடன்பிறப்பின்
உள்ளம் பாருங்கள்.
சட்டமான வண்ண ஓரம்
வகையைக் கேளுங்கள்.—அம்மா
திட்டம் நிறை தீர்கமெனும்
ஞானம் கேளுங்கள்.

கொ.பெ.பி.அய்யா.

அன்பு நெஞ்சங்களே என் பாடல்கள் அம்மாவின் புகழ் பாடும்
இசை வட்டுகளாக்கிப் பரப்புவீர்.
/



தங்கத்தாரகை.

தங்கத் தாரகை.

தங்கத் தாரகையே!
சிங்கப் போரழகே!
சங்கத் தமிழ்மணமே!
எங்கள் உயிர்வரமே!

எங்கள் குலவிளக்கே!
பெண்கள் நலஒளியே!
நம்பிக்கை நடுநிலையே!
நாட்டுக்கு விடிவழியே!

உண்மையின் உறைவிடமே!
நன்மையின் பிறப்பிடமே!
வீரத்தின் விளைவிடமே!
தீரத்தின் தலைவிடமே!

தைரியம் எனும் புகழே!
தமிழினத் தலைமகளே!
நம்பிக்கை நாயகியே!
நல்வழிப் பேரொளியே!

அம்மா எனும் பொருளே!
அன்பின் திரு வடிவே!
புரட்சியின் விளக்கமே!
புரட்சியார் ஒளிவிளக்கே!

ஜெயம் ஜெயம் எனும் மொழியே!
ஜெய லலிதா தனி நிலையே!
இலை இலை இரட்டை இலை
இலை இலை இரட்டை நிலை.

கொ.பெ.பி.அய்யா.


http://aiadmkpaadalkal.blogspot.in/