Thursday 14 August 2014

அம்மாவுக்கு புகழ்மாலை.

ஆசி வழங்குவீர்!
(நூறாவது படைப்பு)
http://aiadmkpaadalkal.blogspot.in/

அம்மா உமக்கே புகழ் மாலை
அடியேன் தொகுக்கும் சொல்மாலை..
நூறாம் பாட்டாய் ஒரு மாலை-உம்
நேராய் போற்றும் பாமாலை.

கருணைக் கடலை கேட்டது உண்டு.
அருள்உம் நிசமெனக் கண்டது உண்டு.
உரிமைக் குரலை கேட்டது உண்டு-உம்
உயிரில் எம்ஜியார் புகழின்று.,

அம்மா என்னும் பந்தம் உண்டு.
அன்பால் எம்மில்  சொந்தம் உண்டு.
ஆன்மா அம்மா  சொல் உண்டு-உம்
ஆளுமை அதற்கு பொருளின்று,

புரட்சி என்றொரு சொல் உண்டு.
புரியும் அதற்கொரு அம்மா உண்டு.
தலைவி என்றொரு தகுதியும் உண்டு-உம்
தலைமை கண்டது பொருளின்று,

சுதந்திரம் நாடும் கொண்டது உண்டு.
சுவாசம் உணரும் சொர்கமும் உண்டு..
தேசியம் என்றொரு பேச்சும் உண்டு-உம்
நேசியம் கண்டதில் நின்றதின்று.

பொதுவாழ் வெனவும் பொய்ப்பார் உண்டு.
பொய்ப்பார் வியக்கவும் மெய்ப்பார் உண்டு.
அரசியல் உலகம் படித்தது உண்டு-உம்
அரசில் ஆள்வகை கற்றதின்று.

புத்துலகம் ஒன்றும் கனவில் உண்டு
சத்தியம் வென்றும் சரித்திரம் உண்டு.
ஊழல் தானே ஒழிவது உண்டு-உம்
ஆளும் நுட்பம் தோன்றுதின்று.

காந்தி ராஜ்ஜியம் காண்பது உண்டு.
காலத்தை வென்றவர் கருத்தில் உண்டு.
பரத நாடும் ஆள்வதும் உண்டு-உம்
விரதம் தொடரும் நிலையிலின்று.

எனக்கும் அம்மாவோர் ஆசை உண்டு.
வணங்கும் தரிசனம் நேரில் உண்டு.
அன்றே எந்தன் முக்தியும் உண்டு-உம்
ஆசியும் நானும் பெறுவதன்றோ!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment