Saturday 30 April 2016

மகனே விழித்தெழு சிலிர்த்தெழு.

விழித்தெழு!சிலிர்த்தெழு!

விழித்தெழு மகனே!விழித்தெழு-உன்
வேளை வந்தது விழித்தெழு!
சிலிர்த்தெழு மகனே!சிலிர்த்தெழு-நீ
சிங்கம் என்று சிலிர்த்தெழு!

சுற்றிச் சுற்றிச் சூளுரைத்து-பகை
பற்றிப் பற்றிப் பாடறுத்து-
வெற்றி வெற்றி வினைமுடித்து-பறை
கொட்டிக் கொட்டு வென்றெடுத்து.

தமிழன் என்றொரு திமிரிருக்கு-உனக்கு
தருமம் என்றொரு தரமிருக்கு.
மானம் என்றொரு மதமிருக்கு-மரபு
வீரம் கொண்டெழு விடையிருக்கு.

செத்தது தமிழென்றோ கொக்கரித்தான்-அந்தச்
சிங்களன் சிறுபடை எக்கடையோ!
உத்தது உயிரென்றோ ஒப்பாரி--தமிழ்
பெற்றதும் பயமுண்டோ செப்பாரே!

பதவிக்கும் பொருளுக்கும் பற்றென்ன--இனம்
உதிரம் உனக்குள்ளே அற்றன்ன!
சிதையும் இனமங்கே செத்துவிழ--மனம்
பதைக்கும் குணமெங்கே பட்டுஎழ!
பற்றிச் சுற்றித் தீக்காடு--பரவி
முற்றி முற்றப் போக்காடு.
எட்டித் தீர்க்கத் துணிவில்லையோ-கை
கட்டிப் பார்க்கப் பதைக்கலையோ!.

நடந்தது எல்லாமே விதியென்றோ-அன்று
கிடந்ததும் பொல்லாமை சதியன்றோ!
அதிகாரம் எதற்கு ஆளத்தானோ-அதற்கு
துதிராகம் உமக்கு வாழத்தானா!

கொடுமைகள் சொல்லி அழவேணும்-இங்கு
அடிமைக் கிலையோ உறவேணும்
படமோ பாவக் கூத்தோ-ஈழம்
விடைதான் விடிவே மகனே!.

அம்மா என்ற பராசக்தி-ஆளும்
ஆட்சி மன்ற தீர்மானங்கள் -
சும்மா என்ற தாளன்று--ஈழம்
மீட்சி வென்ற மேலொன்று..

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 26 April 2016

இரட்டை விரல்!

அம்மா விரலின் அசைவில்.

புரட்சித் தலைவி அம்மா.
இரட்டை விரலால் சும்மா
அசைவின் விசையால் அலைகள்
திசைகளெல்லாம் இரட்டை இலைகள்

ஒற்றைத் தமிழின சிங்கம்.
ஒட்டு அணியிலாத் தங்கம்.
நேருக்கு நேராய் எதிர்க்கும்
யாருக்கு தில்லு இருக்கும்!

அன்னக் கொடிகள் தாங்கும்.
அம்மா உணவகம் எங்கும்.
வண்ணப் பச்சை எங்கும்
எண்ணமாக மின்னும்

கோடிகள் அம்மா தொண்டர்
கூடினால் மாற்றணி தெண்டர்.
புரட்சிப் படையிதைக்  கண்டார்
இரட்டை இலைகளே என்பார்.

நம்மோட வாழ்வும் அம்மா.
நமக்காக வாழ்ந்தார் அம்மா..
புரட்சித் தலைவி தவமே
இரட்டை இலைகள் ஜெயமே!

கொ.பெ.பி.அய்யா.

இரட்டை இலைகள் எழுச்சி!

இரட்டை இலைகள் எழுக!

இரட்டை இலைகள் எழுக!
புரட்சிக் கணைகள் தொடர்க!
வரட்டுத் தடைகள் உடைக!
விரட்டும் படைகள் படர்க!

வெற்றி முழக்கம் சங்கம்.
சுற்றிக் கலக்கும் எங்கும்.
ஒற்றைத் தமிழின சிங்கம்.
பற்றிப் பாரினிற் தங்கும்.

எட்டுந் தூரம் எட்டும்-
எதிரி இல்லை சுற்றும்.
இரட்டை இலைகள் மட்டும்
புரட்சிப்  பறைகள் கொட்டும்.

கோடிகள் தமிழர் நாம்
பேடிகள் எதிரோ பாவம்.
ஆடி விசைக் காற்றே யாம்
ஓடி எதிரி தோற்பார் தாம்.

நம்மோடு அம்மா தான்
நமக்காக தானே  தான்.
தவமாக  வாழ்வே தான்
சுபமாக நாமே தான்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday 24 April 2016

பொற்கையன் ஆட்சி போல்.

இலை துளிர்த்தது இல்லம் செழித்தது.

இலை துளிர்த்தது இல்லம் செழித்தது.
வளம் கொழித்தது வாழ்வு மலர்ந்தது.
நிலை உயர்ந்தது நெஞ்சம் நிறைந்தது
நலம் நிகழ்ந்தது நாடு சிறந்தது.

உழவு பிழைத்தது உரிமை நிலைத்தது.
பழமை நிலைத்தது பசுமை தழைத்தது.
நதிகள் இணையுது நன்செய் விரியுது.
விதிகள் திருந்துது வேளாண்மை திரும்புது.

இருளும் அகன்றது பகலும் போன்றது.
மருளும் மடிந்தது அருளும் தோன்றுது.
வறுமை தகர்ந்தது அருமை ஊன்றுது.
பெருமை நுகர்ந்தது சிறுமை மாண்டது.

காந்தி சொன்னது கனவில் கண்டது
காட்சி என்றது நினைவில் இன்றது.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் தன்னியம்.

ஆட்சித் திறனுண்டு மாட்சிமை அரணுண்டு
அம்மாவின் உரம்கண்டு அற்றது பயமின்று.
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்புண்டு.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் வரமென்று.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 20 April 2016

இலட்சிய வண்ணம் பச்சை இலை.

இலட்சிய வண்ணம் பச்சை இலை.

இரட்டை இலை இரட்டை இலை-வள்ளல்
புரட்சித் தலைவர் கண்ட இலை.
பச்சை இலை நல்ல பச்சை இலை-அம்மா
லட்சிய வண்ணம் பச்சை இலை.

இழந்த சின்னத்தை மீட்டதுண்டா-உலகில்
எங்கும் எவரும் கேட்டதுண்டா?.
மறைந்த பின்னும் வாழும்தலைவர்-புகழில்
எம்ஜியார் தானம்மா என்றும்நிலையர்.

மலைகள் இரண்டு இலைகளோ-நடுவில்
கலைதான் துளிர்த்த கதிர்களோ!
நிலையாய் நெஞ்சில் தலைவனோ-இரட்டை
விரல்களாய் வெற்றி அழகனோ!

மறைந்தான் சூரியன் மலைகளில்-அதை
வரைந்தான் தலைவன் இலைகளில்.
நிறைந்தான் அரசியல் கலைகளில்-எதிரி
கரைந்தான் புரட்சி  அலைகளில்.

தலைவன் வழியில் கொண்டும்தான்-என்றும்
நிழலாய் நிலையாய் நின்றும்தான்
சுபமாய் எமக்காய் வாழ்வேதான்--தந்தும்
தவமாய் புகழும் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.






Tuesday 19 April 2016

இரட்டை இலை கட்டுரை.

இரட்டை இலை அது புரட்சி இலை.

எம்ஜியார் கண்ட இரட்டை இலை.ஏழைகளின் இதயங்களில் எழுதப்பட்ட இலை.அது எப்போதும் நேரான நியதியான தேர்தல்களில் தோல்வி கண்டதே இல்லை என்பதே உண்மை.வெற்றியின் சின்னமாக வீரத்தின் அடையாளமாக எவராக இருந்தாலும் இரட்டை விரலைக் காட்டுவதுதான் உலகெங்கும் மரபாக இருந்து வருகிறது.அதனால்தான் புரட்சித்தலைவர் அந்த இரட்டை இலையை புரட்சியின் சின்னமாக தனது இயக்கத்தின் அடையாளமாக தேர்ந்து அங்கீகரித்தார்.அவர் திமுக வில் இருக்கும் போதும் உதய சூரியனைப் பாடும்போதும் வெற்றியின் குறியீடாக v எனும வடிவமாக இரட்டை விரல் காட்டியே பாடுவார், பேசுவார்.அதுவே பின்னாளில் அவர் கண்ட இயக்கத்தின் சின்னமாகவும் அமைந்ததுதான் சிறப்பு.

உதய சூரியன் சின்னத்தின் இரண்டு மலைகளை இரண்டு இலைகளாகவும் இரண்டு மலைகளுக்கு இடையில் உதயமாகும் சூரியனை துளிர்க்கும் இளந்தளிர் கொழுந்துத் தண்டுக் கோடாகவும் வடிவமைத்து இரட்டை இலை அதுதான் புரட்சியின் இலை எனவும் அறிவுப்பூர்வமாக வெற்றியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை அறிமுகம் செய்தார்.இதுதான் இரட்டை இலை தோன்றிய வரலாறு.

அண்ணா இருந்த வரைதான் தி மு க வின் சின்னம் உதய சூரியன்.அவருடைய மறைவுக்குப்பின் அது ஒளியும் சூரியன். அதாவது மறையும் சூரியன். அந்த இயக்கத்தில் எம்ஜியார் என்ற மந்திர சக்தி ஆதரவாக இருந்தவரை  கதிர்வீசி ஒளி பரப்பிய அந்த உதய சூரியன் அவர் விலக்கப்பட்டபின் அது தன் ஒளி இழந்து அஸ்தமக்காலத்தை நோக்கி அடைய ஆரம்பித்து விட்டது.இரட்டை இலைதான் மேலும் மேலும் செழித்து வளம் பெற்று நாடெங்கும் தோப்பாகி
நாட்டுமக்களுக்கு நடுவூர் நிழலாகிக் காத்து வருகிறது. அம்மாவின் அரவணைப்பில் அம்மாவின் ஆக்கப்பூர்வமான வளர்சிப்பணித் திட்டங்கள் எனும் ஓயா நன்னீர் வளத்தால் நாளும் நாளும் பலம் பெற்று நிழல் எனும் அறப்பணியால் தமிழகத்தின் அரியாசனமாய் அமர்ந்து ஆட்சி புரிந்து வருகிறது.

இரட்டை இலை எம்ஜியாரின் கரம்பட்டு என்று துளிர்க்கத் தொடங்கியதோ அன்றே தமிழகத்தில் வறட்சிஎன்ற சொல்லே வறண்டு போனது.ஏழைகளின் பசிப்பிணி பட்டுப்போனது.மக்களின் அடிப்படைத்தேவைகள் தன்னிறைவு பெற்றது.இல்லை என்ற சொல்லே இல்லாமல் போனது.தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் எனக் குமுறிக் கோவக் குரல் கொடுத்த பாரதியின் கனவு இன்று அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்டது.அதுகண்ட பாரதியும் அவன் வாழும் பரலோத்திலும் பரவசக்கூத்தாடிக் கொண்டிருக்கிறான்.

அம்மா உணவு மலிவு விலையில் அத்தனை வேளையும் சுகாதாரப் பாதுகாப்போடு அம்மா உணவகத்தில் கிடைக்கிறது.ஆலயங்கள் தோறும் வயிராற விருந்து உபசரிக்கப்படுகிறதுஅதனால்.இங்கே பசியுமில்லை பஞ்சமுமில்லை.வேற்று மாநிலத்தாரும் பெருமையோடு வேலை தேடி விரும்பி நம்பி வந்து வாழ்வாதாரம் பெற்று வாழ்கிறார்கள்.அதுவும் தமிழ் நாட்டில் வேலை என்றால் அவ்வளவு பெருமையாம் அவர்களுக்கு. தமிழ் நாட்டில் பிழைப்புக்காக வருபர்மீது அத்தனை நம்பிக்கை கொண்டு பெட்கொடுப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பெண்வீட்டார் வெளி மாநிலங்களில் தேடி அலைகிறார்கள் செய்தி ஊடகங்கள் பெருமியாகப் பாராட்டுகின்றன.ஆனால் பாவிகளின் பொறாமைக்குரல்கள்தான் வஞ்சம் பேசி வறுமை செய்யத் துடிக்கின்றன.

ஒருகுழந்தையை பெறுவதுமட்டும்தான் பெற்றோரின் கடமையாக உள்ளது.மற்றப்படி அக்குழந்தையின் கருவரைக்காலம் முதல் கல்லூரி முடித்து கல்யாணம் ஆகும்வரையுள்ள அத்தனை பொறுப்புக்களையும் அம்மாவின் அரசு அன்போடு ஏற்றுக்கொள்கிறது.

விவாசயிகளின் வேளாண்மை இடுபொருள் இலவசம் அல்லது மான்யத்தில் அம்மாவின் அரசால் வழங்கப்படுகிறது.நீர்ப்பாசனத்திற்கு மின்சாரம் இலவசம்.விளைபொருள் இருப்பு வைத்துக்கொள்ள குளிர்பதன இருப்புவைப்புக் கிடங்குகள்.குடியிருப்புக்கு பசுமை வீடுகள்.நியாய விலையில் உணவுப்பொருள்கள்.அரிசி விலையில்லாமல் கிடைக்கிறது.வயது முதிர்ந்த காலத்தில் ஆயிரம் ரூபாய் உதவிப்பணம்.உடுத்துவதற்கு சேலை வேட்டி.வேறென்ன வேண்டும். கேட்காமலே அம்மா தாயுள்ளத்தோடு தேவையறிந்து கொடுத்துவருகிறார்.அப்புறம் என்ன மாற்றம் வேண்டி கிடக்கிறது.ஏழை எளிய மக்கள் என்ன அவசரம் கருதி அம்மாவை மறப்பார்கள்.

திருமணமாகி ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு செல்லும்போது ஒரு தாய் எப்படி பார்த்துப் பார்த்து சீர்வரிசை செய்வாளோ அப்படித்தான் அம்மாவின் அரசும் அனைத்து மக்களையும் அன்புள்ளத்தோடு அரவணைத்து அத்தனை தேவைகளையும் பார்த்துப்பார்த்து அள்ளிவழங்கி நிறைவேற்றி வருகிறது.அப்புறம் எப்படி ஆக்கம் கெட்டகூவைகளின் கூச்சலை நம்பும். நன்றியுள்ளம் கொண்ட தமிழ் நெஞ்சங்கள் எவ்வாறு அம்மாவை மறந்துவாழும் அல்லது மாற்றம் வேண்டும் என்ற அவசரமும் ஏற்படும்?

பொதுவாக மாற்றுக்கட்சி மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் பாவப்பட்ட ஜென்மங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.இபோதுதான் தமிழக மக்கள் அம்மாவின் ஆட்சியில் அமைதியான சூழலில் அத்தனை அடிப்படை உரிமைகளும் பெற்று நிம்மதிப் பெருமூச்சுடன் தொல்லைகள் தொலைந்தது என்று சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்.இதைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி உங்களின் குடும்ப  சுயநலத்திற்காக நாட்டுமக்களை பலிகிடாய்களாய் ஆக்கிப் பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.அரசியல் வாதிகளை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.என்ன செய்வது அவர்கள் அப்பாவிமக்களை சுரண்டிப்பிழைத்தே பழக்கப்பட்டுப் போனார்கள்.பழக்க தோஷம் அப்படி.திடீரென்று திருந்த அஞ்சுகிறார்கள்.ஆனால் அவர்களின் போதாத நேரம் மக்கள் விழித்துக் கொண்டார்களே!என்ன செய்வது.!அவர்கள் மாறித்தான் ஆகவேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.காமராசர் அனைவர்க்கும் கல்வி என்று கட்டாய சட்டம் போட்டுவிட்டார்.அனைவரும் படிக்கக் கற்றுக்கொண்டார்கள்.சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆகையால் முழுசோம்பேறிகளாக பழக்கப்பட்டுவிட்ட அரசியல்வாதிகள் வேறு என்ன தொழில் செய்வார்கள்!அவர்களின் ஏமாற்று வித்தையும் பலிக்கவில்லை.அவர்களை நினைத்தால் ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் எள்ளளவும் இல்லை.அவர்கள் கொள்ளையடித்துக் குவித்து வைத்ததுதான் இன்னும் நூறு தலை முறைகளுக்கும் போதுமானதாக இருக்கும் என்கிறார்களே!எனவே இனிமேலாவது நாட்டைச்சுரண்டாமல் வீட்டைப்பிராண்டிக்கொண்டு கிடக்கட்டும்.விட்டு விடுங்கள் பாவம்!

கொ.பெ.பி.அய்யா.

Monday 18 April 2016

சில மாறுதல்கள்.

தேர்தலுக்குப்பின் சில மாறுதல்கள்.!

தேர்தலுக்குப்பின் சிலமாறுதல்கள் செய்யும் திட்டம் அம்மாவின் சிந்தையில் உதயமாகிக் கொண்டிருப்பதை உளவியல் ஓரளவு அறிந்த என்னால் உணர முடிகிறது.குறிப்பாக உள்ளாட்சியின் மீது அம்மா உன்னிப்பான கவனம் கொண்டுள்ளார் என்பதும் எனது ஆழ்ந்த அறிவுக்கு எட்டுகிறது.உள்ளாட்சிகள் எல்லாம் நல்லாட்சிகளாக மலர அம்மா அதற்கான ஆய்வுப்பணிகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள ஆயத்தமாகிவிட்டார் என்பது எனது சிற்றறிவுக்கும் எட்டுகிறது.ஆளும் கட்சியின் ஆக்கப்பூர்வமான அடிப்படைத் திட்டங்களும் அதன் தேவைகளும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தைக் கவனத்தில்கொண்டுதான் தீட்டப்படுகின்றன.அவ்வாறு செயலுருப்பெறும் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டுமானால் அதற்கான முழுப்பொறுப்பும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் கடமையாகத்தான் உள்ளது என்பதையும் அம்மா புரிந்துகொண்டுதான்  தனது கவனத்தை அப்பக்கமாக திருப்பியுள்ளார் என்பதையும் அறிவு சார்ந்த பெருமக்கள் அரசல்புரசலாக பேசிக்கொள்வதும் எனது செவிப்பறையை மெல்லவே தட்டுகிறது.

ஆளுங்கட்சி சாராத மற்றும் ஆளுங்கட்சியிலும் சில சுயநலப் பேர்வழிகள்
ஆளுங்கட்சியின் நற்பேர் கெடும் வகையில் செயல்படும் விதங்கள் நடுநிலையாளர்களை முகம் சுளிக்கவைத்துள்ளது என்பதையும் அம்மா உளவுத்துறை மூலம் அறிந்துகொண்டுதான் அதற்கான தருணம் பார்த்துக்கொன்டுள்ளார்.அதுதான் தேர்தலுக்குப்பின் சில மாறுதல்கள் என்ற
அதிரடி திட்டங்களில் முதன்மையான ஒன்றாக இருக்கும் என்றும் நாம் நம்பலாம்.

ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளை ஒருமுறை எச்சரிக்கைக்கை செய்து தங்களை திருத்தம் செய்துகொள்ள வாய்ப்பளித்தார் என்பதையும் நாம்
அறிவோம்.எனவே ஏழை மக்களின் இதயங்களில் என்றென்றும் தாயாக விளங்கும்  அம்மாவின் நல்லாட்சிபோல் உள்ளாட்சிகளும் நல்லாட்சிகளாக மலரும் என்பதில் ஐயமில்லை.மாறுபடும் உள்ளாட்சி எதுவானாலும் செல்லாட்சி அதுவாகும் என்பதிலும் பொய்யுமில்லை.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 13 April 2016

சித்திரை மீட்ட புரட்சித் தலைவி.

சித்திரை மீட்ட புரட்சித்தலைவி.

சித்திரை மீட்ட புரட்சித் தலைவி.
இத்தரை போற்றும் எங்கள் தலைவி.
முத்திரை நாட்டும் மொழியுயர்க் கலைவி.
பத்தரை தங்கம் தமிழினத் தலைவி.

முந்திப் பிறந்த முன்னைத் தமிழே!
பிந்திய மொழிகட் கும்நீ அன்னையே!
உந்தன் ஒலியிலா எந்த மொழியுமே!
இந்த உலகினில் கண்ட திலையே!

நாள்கள் வாரம் வருடம் தான்.
கோள்கள் நேரம் பொருத்தம் தான்.
காலம் கணித்த தமிழே தான்.
ஞாலம் வழுத்தும் அறிவே தான்.

கருவிகள் அறியாக் கால மதில்
அறிவியல் அறிந்த சீல மதில்
வானம் ஆய்ந்த வல்லமை யதில்
ஞானம் சித்திரை உள்ளமை பதில்.

சித்திரை என்பதும் அறிவென் போம்
அத்தினம் மன்னுயிர் நிரையென் போம்.
புத்தியில் கணிதம் பூத்த தினம்
நித்தியத் தமிழுன்னை போற்றுந் தினம்.

கூடி வாழச் சொல்லி சொல்லி
பாடி வந்த சித்திரையே!
கோடு இல்லா உறவு கொண்டும்
ஓடி வாயேன் இளந்தமிழே!

சித்திரை போற்றுதும் சித்திரை போற்றுதும்.
முத்திரை போன்றதும் சித்திரை போற்றுதும்.
தமிழெனத் தயவென தகையெனப் போற்றுதும்.
அமிழ்தென அறிவெனச் சித்திரை போற்றுதும்.

கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh725KwUGFuD_LqnnQMqJDDg1T3Xq_2aNVU5dzn7yAGT9xFCcWEd5Kq5qwnLHITk7yIAoHHhD07MHG1I0TD1uusHk5GVqR37W2vV5JsrMSFSdtV7JMzX_TWgaBSxHkFSyFPrSb95CFdLEw/s1600/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+(1).jpg

Tuesday 12 April 2016

வெற்றி நமதே கட்டுரை.

வெற்றி நமதே கொட்டி மகிழ்வோம்.

ரத்தத்தின் ரத்தமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அன்பு நெஞ்சங்களே அடைந்தோம் வெற்றியென ஆர்ப்பரிப்போம் வாரீர் வாரீர்!
அம்மாவின் ஆட்சி ஆயிரம் ஆண்டுகள் தொடரும்.அவருக்கு நிகரான எதிரி எவரும் இன்னும் பிறக்கவில்லை.2016 சட்டமன்றத் தேர்தலில் நமது வெற்றி நிச்சயம் செய்யப்பட்ட நிசம்,இதில் எள்ளளவும் ஐயமில்லை.நம்முடைய கட்சி வாக்குகள் நமக்குக் கிடைத்தாலே போதுமானது.ஏனெனில் நமது வாக்கு (44%)வங்கியை எட்டும் அளவிற்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் உயரம் கொண்டதாக இல்லை,மேலும் இம்முறை ஆறு முனை போட்டி என்பதால் எஞ்சியுள்ள சதவிகித வாக்குகளை மாற்றுக்கூட்டணிகள் பிரித்துக்கொண்டு நம்மைப் பின்தொடர இயலாத தூரத்திற்கு பின்தங்கி விடுவார்கள் என்பதே அரசியல் வல்லுனர்களின் தீர்கமான புள்ளியல் கணக்கு.அவ்வாறிருக்கும் பட்சத்தில் அம்மாவின் சுனாமி அலை வீச்சில் அத்தனை கட்சிக் கூட்டணிகளும் காணாமல் போகுமோ! அல்லது கரை ஒதுங்கி காக்கை கழுகுகளுக்கு இரையாகிப் போகுமோ !கடவுளுக்கே வெளிச்சம்.
அம்மா மட்டும் இத்தேர்தலில் தனிப்பெரும் சக்தியாக 234 தொகுதிகளையும் தன் மடியில் அள்ளிக்கொண்டு விசுவ ரூபம் எடுத்து விண்ணும் மண்ணும் வாழ்த்த சாந்தி சொருபமாய் சகலமுமாகி காட்சியருள்வார்.அப்போது வணங்கா முடிகளும் வணங்கி சாஸ்டாங்கமாய் அம்மாவின் பாதமலர்களை தொட்டு அருளாசி பெற அவசரமாய் முந்திக்கொண்டு வருவார்கள் என்பதே சத்தியம்.
பொதுவாக ஆளும் கட்சி என்றாலே அதிருப்தி இருக்கத்தான் செய்யும் என்பதும் சாத்தியம்தான்.ஆனால் இம்முறை அம்மாவின் அபூர்வ திட்டங்களின் அரவணைப்பால் மக்கள் மத்தியில் அதிருப்தி இல்லை என்பதே
உண்மை.ஆகவே அம்மாவின் ஆதரவு அலையின் ஆர்ப்பரிப்பு கட்டுக்குள் அடங்காமல் வேகம் குறையாமல் அதிவேகமுடன் எழுச்சியுற்றுள்ள அதிசயத்தை அம்மாவின் பரப்ப்ரைக்கூட்டங்களில் கண்கூடாகக் காணமுடிகிறது.
ஆகவே ஆருக்கும் கிடைக்காத அருமைக் கழகக் கண்மணிகளே!அனுதினமும் அயராது களம் கண்டு நமக்கான ஆதரவு அலை மேலும் மேலும் எழுச்சியுற்று
விசையாகி வீச்சாகி அற்புதம் செய்ய ஒவ்வொரு தொண்டனும் தூண்டலாய்
துடிப்பாய் செயல்படுவோம்.நமக்கான பரிசுக்கனிகள் அம்மாவின் கரங்களில்
காத்திருக்கின்றன.உழைப்போம் உறுதியுடன்.விளைவிப்போம் வெற்றிகளை.
புரட்சித் தலைவனின் ஊக்கமும் புரட்சித்தலைவியின் ஆக்கமும் தீர்க்கமும் நமக்கு என்றும் நமக்குள் சக்திக் கனலாக சுடர்விட்டுக்கொண்டு தூண்டலாய்
ஒளிர்கின்றன..விடியல் நமக்கே!முடிப்போம் நாமே!
வாழ்க எம்ஜியார் நாமம்.

கொ.பெ.பி.அய்யா.