Sunday 23 November 2014

ஒற்றைச்சிங்கம்.

ஆள் தேவையில்லை.

ஒத்தையான சிங்கமா நிக்கிறாங்க எங்கம்மா
சத்தியமா சொல்லுவேன் சுத்தமான தங்கம்மா.
வெத்துப்பேச்சு வீரமா கத்துனாலும் ஆகுமா?
நிச்சயமா வெல்லுவோம் சத்தியம் மாறுமா?

மீசையில்லா ஆம்பள பேசுறதும் யாருதான்.!
ஓசையில்லா காட்டுல ஊளைச்சத்தம் ஊதுறான்.
ஆளில்லா ரோட்டுல மேடை கட்டி தேடுறான்.
.வாலில்லா கூத்துல  ஆடை மாத்தி ஆடுறான்..

மக்களென்ன கொக்காயா தொக்காக எண்ணுறே!
நிக்கிமா வெண்ணவக்க சிக்குமா ஏங்குற!.
சக்கரைப் பொய்யெல்லாம் விக்கிற சரக்கில்லை.
அக்கரை எப்பய்யா! இப்பவந்து அவுக்குற.!

பதுங்கியுள்ள சிங்கத்தைநீ ஒளிஞ்சிநின்னு சீண்டுற
ஒதுங்கிநீ ஓடிவிட்டால் உனக்குத்தான் நல்லது.
எதுக்கு தம்பி வம்பெல்லாம் பாவம்நீ.
எதுக்கவும் என்னதான் இருக்குனக்கு தகுதியும்!

அம்மா தான்னு தெரிஞ்சு போச்சு.
அப்புறம் ஏம்பா வீணாப் பேச்சு.
ஆளும் ரொம்ப இளச்சித்தான் போயிட்ட.
ஆளெடுத்தா சொல்லுறோம் இப்பநீ போபோ!

கொ.பெ.பி.அய்யா.

  

 

Thursday 6 November 2014

பாவம் விடாது.





பாவம் விடாது!

பாவிகளே! பாவிகளே! பலிகொண்ட பாவிகளே!
பாவம் சும்மா விடுமோடா சண்டாளப் பேய்களே!
சாபம் என்றும் பொய்க்காது சாவும் வீணாகாது.
தீபம் அதும் தீயும்முன் தீவிழுங்காத் தீராது..

உயிரோடு விளையாடி வயிரிங்கு எரியுதடா!
உயிரென்ன மயிராடா!உருப்படாப் பாவிகளா!
தின்னஉயிர் எத்தனை தீர்ந்ததோ வெறியுனக்கு?
எண்ணும்உயிர் அத்தனையும் என்னபாவம் செய்தது?

அம்மான்னா சும்மாவா அகிலாண்ட ஈஸ்வரி.
கம்மனாட்டிக் கள்ளனே கணக்குண்டு காத்திரு!
பதிலென்ன கூறுவாய் பலிகொண்ட உயிர்களுக்கு.
விதியென்ன ஆறுமா வினையறுக்கப் பொறுத்திரு!

கோடிகோடி உயிர்களை கொண்டமகா சக்தியை
கூடிக்கூடி ஒன்றென குவிந்தமாக் காளியை.
தேடித்தேடி அழித்தாலும் கூடிக்கூடி தழைக்குமே!
ஓடிஓடி ஒளியவும் உனக்குஇடம் ஏதடா?

சூலம்தேடி வருகுதோ காலம்கூலி தருதற்கே!
நாளும்கூடி தீர்ப்பினை வேளையொன்றில் எழுதுமே!
பாவம்பழி தீர்க்குமே சாபம்பலி ஏற்குமே!
தீபஒளி அதுவரை தவமேற்று முடிக்குமே!

கொ.பெ.பி.அய்யா.