Tuesday 16 September 2014

அன்புள்ள மகனுக்கு.


அன்புள்ள மகனுக்கு.

அன்புள்ள மகனுக்கு அம்மா எழுதும் கடிதம்.
அம்மா தரும் ஆயிரத்தால் அன்னையும் சுபமே.
உண்ண மணிஅரிசியும் உடுத்த துணி சேலையும்
உறங்கத் தனிவிடுதியும் ஒருகுறையும் இல்லை மகனே!

நாயொன்று வளர்த்தாயே அது நலமா மகனே!
தாயன்று ருசித்தகஞ்சியை நாயின்று குடிக்குதா மகனே!
பேயென்று பேசிப்பேர் வைத்தபோது மகிழ்ந்தேன் மகனே!
நாயின்று குரைத்துமகிழ என்னபேர் அழைத்தாய் மகனே!

தாய்க்குத் தந்த அன்னத்தட்டு நாய்க்கும் வேண்டாம் மகனே!
வாய்க்கு வந்து எட்டும் போதுபட்டு வெட்டிவிடும் மகனே!
விரலா லோட்டை அடைக்கும் வித்தை நாயுமறியாது மகனே!
மறவா ததனை மகனுக்குத் தெரியாமல் ஒளித்துவை மகனே!

தாய்நான் படுத்த பாயதுபாவம் நாய்க்கும் வேண்டாம் மகனே!
காய்ந்து கிழிந்த கோரைகிழித்து  புண்ணாகும் மகனே!
உதறிவிரிக்கப் பழகாநாயும் கதறியழுதும் கண்ணீர்விடும் மகனே!
சிதறியதனை சிதையில்கொழுத்தி சீக்கிரம் அழித்திடு மகனே!

தாய்தான்குளிரை தாங்கியவலிமை நாய்க்கும் வேண்டாம் மகனே!
வேய்போர்வை போர்த்தியும் மெத்தைமேல் கிடத்து மகனே!
தாய்போல் பொறுமையும் நாயும் கொள்ளாது மகனே!
வாயில்லா ஜீவனதும் வருத்தம் சொல்லப்புரியாது மகனே!

தாய்க்கூற்றிய தொட்டிக்கஞ்சி நாய்க்கும் வேண்டாம் மகனே!
சேய்க்காற்றும் சேவையெல்லாம் நாய்க்காற்று நல்ல மகனே!
நன்றியுள்ள பிராணியது நாளையது எண்ணும் மகனே!
என்றுமுன் தாய்நான் ஏங்குமுந்தன் நலம்தான் மகனே!

எப்படிநீ செய்வாயோ அப்படிநீ கொள்வாய் மகனே!
தப்படிநீ வைக்காதே ஒப்படிநீ முன்வை மகனே!
இப்படிநீ வாழ்வாயே என்றுமென் அன்பு மகனே!
இப்படிக்குன் நலம்விரும்பும் என்றுமுன் அன்புத்தாய் மகனே!

கொ.பெ.பி.அய்யா.

Monday 15 September 2014

எம்ஜிஆர் சின்னம்.












எம்ஜி யாரு தந்த சின்னம்
----தெம்மாங்கு-----

பெண்:--
கட்சிக் கரை வேட்டி கட்டி
கண்டு ஒட்டு கேக்கும் மச்சான்.
கச்சிதமா எம் ஜி யார
கண்குளிரக் காண வச்சான்.
கண்ணு படும் சாமி-- காலடி
மண்ணு எடு பூமி.

ஆண்:-
ரெட்ட இலை குத்தி வச்சி
வட்டக் கொண்ட நிறுத்தி மச்சி
நம்ம கட்சி சேலை கட்டி
அம்மா போல வெரலக் காட்டி
அசத்துறைய குட்டி—நீ
ஒசத்தி வெல்லக் கட்டி.

பெண்:-
அம்மா போல யாரு உண்டு
ஆட்சி செய்வார் கூறு ஒன்று.
சும்மா கிடந்த காடு அன்று
சொர்க்கம் ஆச்சு நாடு இன்று.
ரெட்ட இலை சின்னம்--வீசி
பறக்கும் கொடி அன்னம்.

ஆண்:-
சந்தியாவின் மகளைப் போல
இந்தியாவில் யாரும் இல்ல.
சிந்து கங்கை காவேரியும்
சேர்ந்து வரும் செழிக்க
கை எடுத்தேன் வணங்க.—இது
பொய் இல்லையே அணங்கே!

பெண்:-
முதல் இடத்தில் முந்தி வந்து
முன்னே நின்ற தமிழகம்தான்
சதிகார கூட்டம் ஒன்றால்
விதிமாறி போன அன்றால்
அதிகாரம் மாறி --நாடு
அசந்த துதான் கேடு.

ஆண்:-
எம்ஜி யாரு தந்த சின்னம்.
இதயமெலாம் மின்னும் எண்ணம்.
ஏழை வாழ எழுந்த சின்னம்.
இரட்டை இலை என்னும் வண்ணம்.
அம்மா கையப் பாரு---தெய்வம்
அரவணைக்கும் சீரு

பெண்:-
கேடு இனி கூடாதுன்னா.
நாடு நலம் அம்மா தான்னா
பாடு படு துணிந்து ஒண்ணா
ஓடிவிடும் எதிரி தன்னால்.
கூடும் இடம் பூத்து.—ஒட்டு
போடு இலையைப் பாத்து.

கொ.பெ.பி.அய்யா.

Sunday 14 September 2014

கழகம் ஒன்றே அம்மா


கழகம் என்றே அம்மா.

தலைமை ஒன்றே ஆளும்
தமிழகம் என்றும் வாழும்.
கழகம் என்றே அம்மா
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தமிழகம் என்றும் வாழும்.

பேருக்கு ஒன்று தலைமை
ஊருக்கு ஒன்று நிலைமை
ஆளுக்கு ஒன்று அதிகாரம்
யாருக்கு நின்று செயலாகும்?
கழகம் என்றே அம்மா
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தமிழகம் என்றும் வாழும்.

சொந்தம் கூடி கொண்டாடும்
பந்தம் தேடி தந்தாளும்
மந்தை ஒன்று அரசாண்டால்
சந்தை போன்று நாடாகும்.
கழகம் என்றே அம்மா
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தமிழகம் என்றும் வாழும்.

வியாபாரிகள் நாடாண்டால்
வியாபாரமே பாடென்றால்
விலையாவது மக்களென்றால்
விதியாவது வினைமறந்தால்.
கழகம் என்றே அம்மா
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தமிழகம் என்றும் வாழும்.

வழக்கு வந்தால் எதிர்கொண்டு
இழுக்ககன்று புதிர் வென்று
நிலைத்தாள்வார் அம்மா நின்று.
தலைத்தாய் தமிழே என்று.
கழகம் என்றே அம்மா
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தமிழகம் என்றும் வாழும்.

கொ.பெ.பி.அய்யா.

Monday 8 September 2014

முதல் சங்கம்



முதல் சங்கம்.

வெற்றியின் முதல் சங்கம் 
வீர மண்ணில் தான் முழக்கம்.
சுற்றியும் அப்படித் தான்
சூழ வரும் தான் முழக்கம்.  

நெல்லை மேயர் புவனேஸ்வரி 
நல்ல காலை சகுனமே!
எல்லை எதிரி இல்லையே
நல்ல ஆட்சி சாட்சியே!

அம்மா பெரும் சக்தி முன்னே.
சும்மா வரும் பக்தி தன்னே.
வாலியின் அவதாரம் தான்
வருவது யார் அம்மா முன்?

எதிர்க்க என்ன தேவையில்?
எங்கள் அம்மா ஆட்சியில்.
கதிர் விளைஞ்ச தோட்டத்தில்
கரடி விடப் பைத்தியமோ?

தமிழ் நாட்டுக்கு காவலாக 
தாயாரே இருக்க லாக
திருடருக்கு அழைப்பு வைக்க 
குருடரல்ல தமிழ் இழக்க.

எத்தனைக் காலம் தான் 
ஏமாறு வோம் இப்புவியில்?
அத்தனை பாடங்களும் தான்
அறிந்து நாங்கள் விழித்துவிட்டோம்.

அம்மா அவரின் அன்பில் நாமே 
அணைந் திருப்போம் இணைந் திருப்போம்.
நிம்மதி நிலவும் அம்மா நிழலே 
நிலைத்தால் போதும் மகிழ்ந்திருப்போம்.

கொ.பெ.பி.அய்யா.

அம்மா போதும்.



அம்மாவே எங்கள் சொத்து.

வாடா புழுகுத் தம்பி
வாய்தான் கிழிந்த தும்பி.
வழக்கு ஒன்றை நம்பி
முழக்கம் என்னடா அம்பி?.

பொய் பொய்யா சொல்லி
போட்ட கேசக் கிள்ளி
நொய் நொய்ன பல்லி
நுழைஞ்ச தெங்கடா லொள்ளி.

சவ்வு சவ்வா இழுத்து
சாட்சி பொய்கள் சேர்த்து
வவ் வவுனு கொலச்சு
வறண்டு தொண்ட போச்சா?

இன்னும் என்னடா இருக்கு.
இத்துப் போன சரக்கு.?
முன்னும் பின்னும் உனக்கு
எண்ணிப் பாரு கணக்கு.

இதுவும் ஒரு பொழப்பா?
எதுப்பதாக நெனப்பா.?
முதுகுப் புற மொறப்பா?
முடியப் போகுது பொறுப்பா.

வழக்கம் தான உனக்கு
வழுக்கிச் சாயும் இழுக்கு.
பலிக்காது உன் கணக்கு.
இழிப்பதென்ன சுழுக்கு?

நெஞ்சத் தொட்டு சொல்லடா.
செஞ்சதென்ன கொஞ்சமா?
இமயமலை இருக்குமா?
அமஞ்சதுனா மிஞ்சுமா?

தர்மனாக இருந்தயின்னா
தமிழகமே தலை வணங்கும்.
கர்மம் புடிச்ச சண்டாளா
கதபடிச்சா நம்பிடுமா?

தங்கத்தைக் குத்தம் சொல்வானோ!
தரையில் உரசவும் ஏற்போமோ!?
பங்கம் சொன்ன படுபாவி
படுவதும் தான் பொய்யாமோ?

தமிழ்தானே சொந்தமென்று.
தங்கத்தாய் வாழுகிறார்.
அமிழ்தமான அம்மாவே.
எங்கள் சொத்து போதுமே!

உத்தமன் சொன்னான் என்றா
இத்தமிழ் நம்பிவிடும்.?
சத்தியம் தோற்பதில்லை
வெற்றியே எங்கள் அம்மா.

கொ.பெ.பி.அய்யா.

Sunday 7 September 2014

எல்லாம் பொய்யோ?!


பேய்களுக்கென்ன புரியும்?.

ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்தும்
ஒருவரில் மறுவர் ஆதிக்கம் துறந்தும்.
அன்பும் பாசமும் சமமெனப் பகிர்ந்தும்
அமைதி நிறைந்து வாழ்ந்ததும் பொய்யோ!.

இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்தும்
எல்லாம் ஒன்றில் ஒருசுதி அமைந்தும்
நம்பிக்கை தன்னில் நாளும் வாழ்ந்தும்
நன்னிலை நின்று வாழ்ந்ததும் பொய்யோ!

அச்சம் அற்ற நம்பிக்கை கொண்டும்
உச்சம் காண எண்ணில் துணிந்தும்.
துச்சம் என்றே தூரம் மறந்தும்.
எச்சம் வாழ வாழ்ந்ததும் பொய்யோ!

தம்மைது தாழ்த்தும் தாழ்மை அகற்றி
செம்மை ஏற்றும் உள்ளறி வேற்றி
பின்னை பயத்தின் பேதமை விடுத்து
நன்மை முயன்று வாழ்ந்ததும் பொய்யோ!

பொய்யான சொந்தம் போனதோ அய்யோ!
மெயுயான சொந்தமே மேலெள மெய்யோ!
வந்ததெல்லாம் சொந்தமென ஆகுமோ!
தந்தவரை தானது பந்தம் போலுமோ!

இரத்தம் ஒட்டா ஒட்டு வெறும் ஒட்டுத்தானோ!
பற்றும் வரை பற்றிவிட்டு விட்டோடுமோ!
பணம் பாரத்து கூடுவதும் கூட்டமோ!
பிணமாக்கி ஓடுவதும் பாசமோ!

எடுப்பார் கைபிள்ளை சிறப்பார் இல்லை.
தொடுப்பார் உறவெல்லாம் பொறுப்பார் இல்லை.
இடையிலே வந்த சொந்தம் எடை சபோடத்தான்
கிடைப்பது கிடைத்துவிட்டால் நடைபோடத்தான்.

வண்ணத்துப் பூச்சியோ வளறும்வரை பொறுக்கும்.
தன்னைத் தூக்க வளர்ந்தவுடன் கூட்டை.
.அறுக்கும்.
பழகிவந்த சொந்தமெல்லாம் பயணம் போலத்தான்..
இடம் வந்தால் இறங்கி விடும் அது வரைக்குத்தான்.

கொ.பெ.பி.அய்யா.