Friday 8 August 2014

பட்டிக்காடா பட்டணமா!



பட்டணமே வேண்டாமே!

பட்டணமே வேண்டாமே பார்வதி--நம்ம
பட்டிக்காடே போகலாமே பார்வதி.
பட்டுப் போன விவசாயம் பார்வதி—அம்மா
தொட்டுத் தூக்கி நிறுத்துனாங்க பார்வதி.

தட்டுமுட்டுச் சாமான் எல்லாம் பார்வதி—உடனே
கட்டி நீயும் புறப்படடி பார்வதி.
பயிரு வச்சு வாழலாமே பார்வதி—அம்மா
பஞ்ச மெல்லாம் போக்குனாங்க பார்வதி.

நல்ல காத்து வாங்கலாமே பார்வதி—நமக்கு
நல்ல நேரம் வந்ததடி பார்வதி.
பட்டம் காசு  சேக்கலாமே பார்வதி—அம்மா
பட்ட கடன் நீக்குனாங்க பார்வதி.

காஞ்ச நிலம் ஈரமாச்சு பார்வதி.—தாயி
காவேரி கருணை வச்சா பார்வதி.
ஓஞ்ச நம்ம வாழவச்சா பார்வதி--அம்மா
உரம்தந்து விததந்து உதவுராங்க பார்வதி.  

வெளஞ்ச பொருள் இருப்புவச்சா பார்வதி—நல்ல
வெலவந்தா விக்க லாமே.பார்வதி.
குளுரு சாதனக் கிடங்குகட்டி பார்வதி—அம்மா
குலதெய்வம் காக்கு றாங்க பார்வதி..

கள வெட்டி சாதனங்கள்  பார்வதி—ஏரு
உழவு ஓட்ட கலப்பைகளும் பார்வதி.
கொறஞ்ச வெல வாடகைக்குப் பார்வதி—அம்மா
குடுத்து தவும் அரசுதான பார்வதி.

மனுஷஉயிர்க் காக்கும் தாயி பார்வதி—ஒசந்த
மருத்து வமும் செய்யுறாங்க பார்வதி.
வெதச்ச பயிர் விளைவதற்கும் பார்வதி—அம்மா
வேளாண்மக் கழகம் வச்சார் பார்வதி.

உயிர்காக்கும் காப்புப் போல பார்வதி—மொளச்ச
பயிர்களுக்கும் காப்புத் தொகை பார்வதி.
கேட்ட கடன் தருவாங்க பார்வதி—அம்மா
கூட்டுறவு வங்கி உண்டு பார்வதி.

விவசாயம் வாழ வச்ச பார்வதி—அம்மா
வேண்டும் வரம் குடுப்பாங்க பார்வதி.
வந்துருச்சு நம்ம வண்டி பார்வதி—அம்மா
தந்துருச்சு சொந்த வாழ்வு பார்வதி.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment