Sunday 16 December 2018

அம்மா இரங்கற்பா.

அம்மாவிற்கு இரங்கற்பா

அம்மா அம்மா வா என்றே
அகிலம் இன்று அழுகிறதே.
தாயே தாயே நீ என்றே
தமிழே உன்னை தொழுகிறதே.

அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!

ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!

புரட்சித் தலைவர் ஆன்மா நீ
புரட்சித் தலைவி புகழே நீ
உழைத்துக் களைத்து அவர்நிழலே
அழைத்து அமரம் ஆனாயோ!

நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவி தானென்றோம்
நிறைந்தும் தமிழகம் நீயாக
பரந்தும் துணைசெய் தாயாக.

கொ.பெ.பி.அய்யா.

Monday 29 October 2018

கனவு கண்டேன்.

கனவு கண்டேன்.

கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்-அம்மா
கனவு நிறைவேறி வர
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன். (கனவு)

தமிழன் தலை நிமிர்ந்து எழ
கனவு கண்டேன் அவன்
தலைமை அமர்ந்த உலகை
கனவு கண்டேன்.
அஞ்சி எவர் முன்னும் இனி
கெஞ்சியும் தொங்கும் இழி
ஒஞ்சும் கொடுமை ஒழிய
கனவு கண்டேன்(கனவு)
                   
ஏழ்மை என்னும் தாழ்மை
கீழ்மை என்பார் இல்லா
எல்லாம் சமமாய் மேன்மை
கனவு கண்டேன்.
நதிகள் கைகள் கோர்த்தோடி
நாடும் பசுமை போர்த்தியாடி
தொழில்கள் மையம் தமிழகமாய்
கனவு கண்டேன்(கனவு)
                   
ஆணும் பெண்ணும் பேதமில்லை
பேணும் உரிமை வாதமில்லை
தோணும் எண்ணம் சகோதரமாய்
கனவு கண்டேன்.
மனிதம் என்ற சொல்லுக்கு
புனிதம் தந்த அன்னைக்கு
உலகம் போற்றி வாழ்த்தவே
கனவு கண்டேன்(கனவு)
                   
கொ.பெ.பி.அய்யா.

Saturday 6 October 2018

காவிரித்தாய்.

காவிரித்தாய்.

தமிழகம் தலை நமிர்ந்தது.

தமிழக  அரசே-
நின்

தன்னிகரில்லா தன்மானம்

வென்றது.
இனி

காவிரித்தாய் கரை

நிறப்பி வருவாள்.

அரசிதழ் வெளியீடு

அபாரச் சாதனை.

காவிரி மேலாண்மை

தேவைக்குத் தீர்வு செய்யும்.-

பெரும்

முயற்சிகளே

திருவினையாச்சு.

நஞ்சை நனையட்டும்.

நாடு செழிக்கட்டும்.

தஞ்சை சேறானால்தான்

தமிழுக்குச் சோறுண்டு.

வேளாண்மை வாழட்டும்.

விலைவாசி குறையட்டும்.

தமிழகமே
இன்று நீ

தலை நிமிர்ந்தாய்.

அம்மா என்றால் சும்மாவா!

அசத்தி விட்டாயம்மா.

பின்னி விட்டாயம்மா.

பிறந்த நாள் பரிசாக.

வாழ்க நீ பல்லாண்டு.    

கொ.பெ.பி.அய்யா.     

Tuesday 2 October 2018

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இளம் துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்/.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்
வளம் கொழித்து வாழ்வு மலரட்டும்.
நிலை உயர்ந்து நெஞ்சம் நிறையட்டும்
நலம் நிகழ்ந்து நாடு சிறக்கட்டும்.

உழவு பிழைத்து உரிமை நிலைக்கட்டும்
பழமை படித்து பசுமை தழைக்கட்டும்
நதிகள் இணைந்து நன்செய் விரியட்டும்.
விதிகள் திருந்தி வேளாண்மை திரும்பட்டும்.

இருளும் அகன்று பகலும் போன்றாகட்டும்.
மருளும் மடிந்து அருளும் தோன்றட்டும்.
வறுமை தகர்ந்து அருமை ஊன்றட்டும்.
பெருமை நுகர்ந்து சிறுமை மாண்டாகட்டும்

காந்தி சொன்னதும் கனவில் வென்றாகட்டும்.
காட்சியில் கண்டதும்  நினைவில் நின்றாகட்டும்.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியாகட்டும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் என்றாகட்டும்.

ஆட்சித் திறனதும் மாட்சிமை அரணாகட்டும்.
ஆளுமை உரம்கண்டு அற்றது பயமாகட்டும்..
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்பாகட்டும்.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் வரமாகட்டும்..

கொ.பெ.பி.அய்யா.

 

Wednesday 30 May 2018

பாரதச்செல்வி.

தமிழினத் தலைவி!
தனிநிகர் இறைவி!
ஊரது தமிழாம்!
நேரது செயலாம்!
பாரதச் செல்வி!
பேரது அம்மா!

அம்மா என்றே
தம்புகழ் கொண்டே
இம்மா நிலமே
செம்மாந்த தரமே.
தாய்வழி ஆட்சி
தமிழகம் தொடரும்.

மக்களின் நம்பிக்கை
மண்ணாண்ட அம்பிகை
தக்கோலம் தமிழிடம்
எக்காலும் சத்தியம்.
அம்மாவே கூறும்
ந்ம்மாளே ஆளும்.

கொ.பெ.பி. அய்யா

Sunday 13 May 2018

அம்மா படை!

அம்மா படை!

கிடுகிடுங்குது நடுநடுங்குது-பூமி
மொடுமொடுங்குது அதிர்ந்து.
மடை திறந்தது அலை தொடர்ந்தது-அம்மா
படை நெருங்குது நிறைந்து.

படபடங்குது தட தடங்குது-எதிரி
தொடை நடுங்குது பயந்து .
மனம் மகிழ்ந்தது பலம் உயர்ந்தது-அம்மா
களம் விரிந்தது நிமிர்ந்து.

கலகலக்குது விலுவிலுக்குது-துரோகம்
நிலைகுலையுது தலை தாழுது.
இரதமேறுது வலம்ஊறுது- அம்மா
விதமாகுது இயக்கம் நிலைத்து .

இடிஇடிக்குது மினுமினுக்குது-வானம்
புகழ் முழக்குது வியந்து.
கொடி ஏறுது தமிழ் வாழ்த்துது-அம்மா
விடி வெள்ளி பார்த்து.

கொ.பெ.பி. அய்யா.

Friday 27 April 2018

உன்னை நம்பித்தான்.

உன்னை நம்பித்தான்.

அம்மாவின் ஆருயிரே!
நம்பிக்கையின் வேர்நிகரே!
உன்னை நம்பித்தான்
தமிழ் தன்னை தேற்றுகிறது.

அம்மாவின் செல்வமே!
அன்னை வழி வெல்வமே!
கைகளை உயர்த்தி நீ
நம்பிக்கை ஊட்டுகிறாய்.
காலமும் உன் தோளில்
கனவுடன் தொடருதே!.

திசையெல்லாம் உன் பேச்சு
திரை பாடும் உன் வாழ்த்து.
தாய் வளர்த்த பிள்ளை நீ!
தமிழ் நிலத்தின் காவல் நீ!
செல்லமகன் உன்னை நம்பி
வல்ல தாய் கண்ணயர்ந்தாள்.

சதி செய்த கூட்டங்களை
விதி முடிக்க நீ இருக்க
கதியாக உந்தன் பக்கம்
கடலாக மக்கள் கூட்டம்.
வேராக அம்மா நிழல்
வினை முடிக்கத் துணை இருக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 25 April 2018

இலை துளிர்த்தது.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்/.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்
வளம் கொழித்து வாழ்வு மலரட்டும்.
நிலை உயர்ந்து நெஞ்சம் நிறையட்டும்
நலம் நிகழ்ந்து நாடு சிறக்கட்டும்.

உழவு பிழைத்து உரிமை நிலைக்கட்டும்
பழமை படித்து பசுமை தழைக்கட்டும்
நதிகள் இணைந்து நன்செய் விரியட்டும்.
விதிகள் திருந்தி வேளாண்மை திரும்பட்டும்.

இருளும் அகன்று பகலும் நின்றாகட்டும்.
மருளும் மடிந்து அருளும் கொண்டாகட்டும்..
வறுமை தகர்ந்து அருமை உண்டாகட்டும்.
பெருமை நுகர்ந்து சிறுமை சென்றாகட்டும்

காந்தி சொன்னதும் கனவில் வென்றாகட்டும்.
காட்சியில் கண்டதும்  நினைவில் கண்டாகட்டும்.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியாகட்டும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் என்றாகட்டும்.

ஆட்சி எம்ஜிஆர் மாட்சிமை அரணாகட்டும்.
ஆளுமை சீருமை பெற்றது வரமாகட்டும்..
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்பாகட்டும்.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் திறமாகட்டும்..

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 28 March 2018

நாடு போற போக்கு.

நாடு போற போக்கு ரொம்ப நல்லாவே இருக்கு-சில
கேடு கெட்ட மனுசங்களுக்குத்தான்
கிறுக்கு பிடிச்சிருக்கு.
பாடு படும் பாட்டாளிக்கு கைகள் நிறைஞ்சிருக்கு-ஆனா
சூடு பட்ட பூனைங்கதான் ஏங்கித் திரியிது.

ஆடும் மாடும் அள்ளிக் கொடுக்கிறது செல்வம்.
வீடும் வசதியும் சொல்லிக் களிக்கிறது
இன்பம்.
ஏடும் கணிணி சீறுடை சைகிள் எல்லாம்
தேடும் கல்வி பள்ளிக் கூடம் சொர்கம்.

தேசியத் தரமாய் சாலைகள் அழகு.
கூசிய வெளிச்சம் விளக்குகள் தெருவு.
வாசிக்க படிப்பகம் வளர்த்திட அறிவு.
பூசிக்க உணவகம் பசியாற பரிவு.

தடையிலா மின்சாரம் கிடைத்திடும் அருமை
அடையாளம் அம்மாவின்  ஆட்சிக்கு
பெருமை.
கிடையாது ஏழை. உடையதார் வறுமை?
அடையாத தொழிலும் அம்மாவின் திறமை.

காவிரிக்கும் விடுதலை கட்டாயம் கிடைக்கும்.
பூவிரிக்கும் ஆணையம் பூட்டெல்லாம் உடைக்கும்.
விவசாய இடுபொருட்கள் விலையின்றி படைக்கும்.
விவசாயி ஆட்சியிது விவசாயம் செழிக்கும்.

கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.

Sunday 25 February 2018

அம்மா நீ சிலையானோயோ!

அம்மா நீ சிலை ஆனாயோ!

கலை மாது அம்மா நீ
சிலை யாக ஆனாயோ!
நிலை இல்லா புவி வாழ்வில்-நீ
நிலையாக ஆனாயோ!

நினை வாக அம்மா நீ
துணையாக ஆனாயோ!
நிழ லாக தமிழ் நெஞ்சில்-நீ
அலையாக ஆனாயோ!

இறை வியாய் அம்மா நீ
பிறவியு மானாயோ!
நிறை யாக தவ வாழ்வில்-நீ
மறையாக ஆனாயோ!

அமை தியாய் அம்மா நீ
தமிழ் வளம் செய்தாயோ!
புரட்சி யாய் தமிழ் நாட்டில்-நீ
வளர்ச்சியும் கண்டாயோ!

தலைவி யாய் அம்மா நீ
நிலவிடும் தேவியோ!
விழியாக பொது வாழ்வில்-நீ
வழியாக வாழ்வாயோ!

கொ.பெ.பி.அய்யா.





Wednesday 21 February 2018

புலி பதுங்குவது எதற்கடா?

 பதுங்குது எதுக்கடா?
பாயத்தான் அதுக்கடா.
புயல் ஓஞ்சதும் எதுக்கடா?
பேய்மழைக்குத் தானடா.

அடை காக்கும் காலத்திலே
அடைக் கோழி வேகத்திலே
சோதிக்கவும் எண்ணமா?
மோதிக்கவும் திண்ணமா?

முதல்வர்னா அம்மா தான்.
மாறாத தமிழகம் தான்.
பொதுச் செயலரும் அம்மா தான்.
எதிர் வினையே இல்லைதான்
.
கவிஞர்கொ.பெ.பி.அய்யா.: 

கம்மங்காட்டுப் புஞ்சதான்
கொல்லம்பரும்பு மந்ததான்
பன்னீர்செல்வம் ஆளுதான்
முன்னே செல்வேன் வீரந்தான்.

தூத்துக்குடி மாவட்டந்தான்.
பார்த்துப்படி சரித்திரந்தான்.
பாரதியார் வ. உ. சி. தான்
ஊரதுதான் புரியுந்தான்.

நானும் ஒரு கவிஞன்தான்
நாடும் நன்மை தமிழன்தான்
அம்மா எம்ஜிஆர் பக்தன்தான்
என்றும் அஇஅதிமுக தொண்டன்தான்.

கொ.பெ.பி. அய்யாதான்
கூறும் மொழியும் சத்தியந்தான்.
ஒன்றே கழகம் அதிமுக தான்.
அம்மா கொண்ட தலைமைதான்.

தலைமையை மறந்தவர்கள்
தலையில்லா முண்டங்கள்.
உப்பிட்டவரை எண்ணாதார்
உப்பில்லா குப்பைகள்.

அடிப்படையை மதியாதார்
அடிமரத்தை அறுப்பவர்.
மூலவரைத் துதியாதார்
மூலசக்தி புரியாதார்.

இவர் பெயர் சொல்லாரார்?
இவர் படம் கொள்ளாரார்?
இவர் அன்றி அரசியலா?
இவர் பகவான் எம்ஜிஆரார்?
[22/6/2017, 6:08 PM] கொ.பெ.பி.அய்யா.: கெத்துனா கெத்துதான்
அம்மா தான் கெத்துடா.
நெஞ்சுயர்த்தி அம்மா முன்
நிமிர்ந்து நின்றவன் எவனடா?

இன்றைக்குத்தான் ஆம்பளயா
அன்றைக்கென பொம்பளயா?
அம்மா இல்லா தைரியமா
ஆட்டம் போட்டு பார்க்கிறாயா?

அட சட்டம் கிடக்கு விடுடா.
அது அப்படியும் இப்படியும் சொல்லும்.
தீர்ப்புனா ஒரே மாதிரி இருக்கணும்டா.
ஆளுக்கொன்று சொன்னா அதுவென்ன தீர்ப்படா?

மோசம்  எப்போ வீடு தேடி படியேறிச்சோ
தோசம் கூட அப்பவே குடியேறிச்சோ!
சேராத இடம் சேர்ந்த தீவினையாலோ!
நேராத தீமையதும் நேரலாச்சுதோ!

ஆயிரம் சொன்னாலும் அம்மா தங்கம்டா.
அம்மா வாழ்ந்தவரை அம்மாதான் சிங்கம்டா.
விரட்டப்பட்ட பேயெல்லாம் வீடேறி வந்தனவோ!
சுருட்ட வந்த கூட்டமோ திருட்டு விழி விழிக்குதோ!.: 

கவிஞர்.கொ.பெ .பி அய்யா.

யாரை நம்பி தவமிருந்தார்
கூறடா கூறு-அம்மா
துணையெனத் தானே- ஓபிஎஸ்
துணிந்தார் யுத்தம்
போங்கடா போங்க.

ஜனத்துக்கு மிஞ்சி பணத்துக்கு மதிப்பா
பிணத்துக்குப் பின்னே பேசுமடா.
மனதை விற்று பணத்தை எண்ணும்
மனிதா உன் குணம் வீசுமடா.

மக்களை மதியா மிருகம் உன்னை
எக்குலமிங்கு ஏற்குமடா?
நக்கிப் பிழைக்கும் நாயினும் கீழாய்
இக்குலம் நாளை பார்க்குமடா.

மக்களின் முதல்வர் பன்னீர்செல்வம்
இக்குலம் கண்ட தங்கமடா.
நிலைத்ததை விட்டு இழைத்ததைப் பற்றி
விலைமகன் ஆனாய் பாவமடா.
[5/12/2017, 2:20 AM] கொ.பெ.பி.அய்யா.: கண்ணீர் உதிர்கிறதே-அம்மா
உன்னை நனைக்கிறதே.
மறைந்து நீ ஓராண்டா-பொய்யாக்கி
எழுந்து வா தாயாண்டாள்.

தலை வணங்கா தாயம்மா- எமனிடம்
நிலை மறந்தது ஏனம்மா?
நம்பத்தான் முடியலையே- அய்யோ
நம்பித்தான் விதி வழியே.

ஆளுமைக்கு அகராதி- எந்த
நாளுனக்கு அதிகாரி?.
மேலெவர்க்கும் விதிதானோ-தோழமை
போலுனக்கும் அதுதானோ!

கொ.பெ.பி. அய்யா
[10/1, 11:48 PM] கொ.பெ.பி.அய்யா.: என்ன செய்யப் போறீங்க - நீங்க
என்ன செய்யப் போறீங்க.
அண்ணந்தம்பி போலரெண்டு
வேஷதாரி வாராங்க.

அட்ட பத்ரகாளி போல ஆண்ட
ஆத்தாவும் போனதால
குட்டப் புழுதியாகி நாடும்
குட்டிச்சுவர் ஆனதோடா!

அடங்காத பிள்ள பெத்த
மடமான வீடு போல
கடங்கார நாடாகி
கலங்குதே மக்கள் வாழ.

ஆளுக்கொரு நாட்டாமை
ஆகிப் போச்சு நாட்டுல.
அடக்கியாளும் பஞ்சாயத்தா
மாறிப்போச்சு கோட்டுல.

அரசியல் கட்சிகெல்லாம்
ஆகிப் போச்சு வியாபாரமா.
நாட்டுக்குனு சேவை செய்ய
நாதியில்ல சத்தியமா.

கொ.பெ.பி. அய்யா
[11/1, 6:11 AM] கொ.பெ.பி.அய்யா.: இன்னும் தேர்தல் எதுக்கடா
ஒன்னும் வேண்டாம் போங்கடா.
எவன் செயிச்சு என்னடா
ஏழை வாயில் மண்ணடா.

விதைச்ச உயிர் கோடிடா
விளைஞ்ச தென்ன மயிரடா?
உயிரை விற்று உரிமை மீட்ட
பையித்தியங்கள் பாவமடா?

காசுக்காக ஆசை விற்பாள் வேசிடா
ஏதுக்காக உரிமை விற்றாய் நீயடா.
உதிரம் இன்னும் காயவில்லை பாரடா.
உரிமை விற்று அடிமை ஆனாய் ஏனடா?

அண்ணல பெற்ற பாவமோ!
கர்மர் விட்ட சாபமோ!
பணம் மட்டும் ஆளுமோ!
இனம் பட்டு வீழுமோ!

கொ.பெ.பி. அய்யா

கவிதாஞ்சலி.

[10/6/2017, 1:03 PM] கொ.பெ.பி.அய்யா.: புலி பதுங்குது எதுக்கடா?
பாயத்தான அதுக்கடா.
புயல் ஓஞ்சதும் எதுக்கடா?
பேய்மழைக்குத் தானடா.

அடை காக்கும் காலத்திலே
அடைக் கோழி வேகத்திலே
சோதிக்கவும் எண்ணமா?
மோதிக்கவும் திண்ணமா?

முதல்வர்னா ஓபிஎஸ் தான்.
மாறாத கணிப்புதான்.
பொதுச் செயலரும் ஓபிஎஸ் தான்.
எதிர் வினையே இல்லைதான்.
[10/6/2017, 6:56 PM] கொ.பெ.பி.அய்யா.: கம்மங்காட்டுப் புஞ்சதான்
கொல்லம்பரும்பு மந்ததான்
பன்னீர்செல்வம் ஆளுதான்
முன்னே செல்வேன் வீரந்தான்.

தூத்துக்குடி மாவட்டந்தான்.
பார்த்துப்படி சரித்திரந்தான்.
பாரதியார் வ. உ. சி. தான்
ஊரதுதான் புரியுந்தான்.

நானும் ஒரு கவிஞன்தான்
நாடும் நன்மை தமிழன்தான்
அம்மா எம்ஜிஆர் பக்தன்தான்
இன்று ஓபிஎஸ் தொண்டன்தான்.

கொ.பெ.பி. அய்யாதான்
கூறும் மொழியும் சத்தியந்தான்.
ஒன்றே கழகம் அதிமுக தான்.
ஓபிஎஸ் கொண்ட தலைமைதான்.
[21/6/2017, 5:06 PM] கொ.பெ.பி.அய்யா.: தலைவரை மறந்தவர்கள்
தலையில்லா முண்டங்கள்.
உப்பிட்டவரை எண்ணாதார்
உப்பில்லா குப்பைகள்.

அடிப்படையை மதியாதார்
அடிமரத்தை அறுப்பவர்.
மூலவரைத் துதியாதார்
மூலசக்தி புரியாதார்.

இவர் பெயர் சொல்லாரார்?
இவர் படம் கொள்ளாரார்?
இவர் அன்றி அரசியலா?
இவர் பகவான் எம்ஜிஆரா?
[22/6/2017, 6:08 PM] கொ.பெ.பி.அய்யா.: கெத்துனா கெத்துதான்
அம்மா தான் கெத்துடா.
நெஞ்சுயர்த்தி அம்மா முன்
நிமிர்ந்து நின்றவன் எவனடா?

இன்னைக்குத்தான் ஆம்பளயா
அன்னைக்கென்ன பொம்பளயா?
அம்மா இல்லா தைரியமா
ஆட்டம் போட்டு பாக்கயா?

அட சட்டம் கிடக்கு விடுடா.
அது அப்படியும் இப்படியும் சொல்லும்.
தீர்ப்புனா ஒரே மாதிரி இருக்கணும்டா.
ஆளுக்கொன்னு சொன்னா அதுவென்ன தீர்ப்பா?

மோசம்  எப்போ வீடு தேடி படியேறிச்சோ
தோசம் கூட அப்பவே குடியேறிச்சோ!
சேராத இடம் சேர்ந்த தீவினையாலோ!
நேராத தீமையதும் நேரலாச்சுதோ!

ஆயிரம் சொன்னாலும் அம்மா தங்கம்டா.
அம்மா வாழ்ந்தவரை அம்மாதான் சிங்கம்டா.
திருத்தி எழுதுறதும் தீர்ப்புனு சொன்னா.
திருத்தம் எப்பத்தான் சட்டமும் செய்யும்?
கொ.பெ.பி. அய்யா
[22/7/2017, 1:27 PM] கொ.பெ.பி.அய்யா.: யாரை நம்பி தவமிருந்தார்
கூறடா கூறு-அம்மா
துணையெனத் தானே- ஓபிஎஸ்
துணிந்தார் யுத்தம்
போங்கடா போங்க.

ஜனத்துக்கு மிஞ்சி பணத்துக்கு மதிப்பா
பிணத்துக்குப் பின்னே பேசுமடா.
மனதை விற்று பணத்தை எண்ணும்
மனிதா உன் குணம் வீசுமடா.

மக்களை மதியா மிருகம் உன்னை
எக்குலமிங்கு ஏற்குமடா?
நக்கிப் பிழைக்கும் நாயினும் கீழாய்
இக்குலம் நாளை பார்க்குமடா.

மக்களின் முதல்வர் பன்னீர்செல்வம்
இக்குலம் கண்ட தங்கமடா.
நிலைத்ததை விட்டு இழைத்ததைப் பற்றி
விலைமகன் ஆனாய் பாவமடா.
[5/12/2017, 2:20 AM] கொ.பெ.பி.அய்யா.: கண்ணீர் உதிர்கிறதே-அம்மா
உன்னை நனைக்கிறதே.
மறைந்து நீ ஓராண்டா-பொய்யாக்கி
எழுந்து வா தாயாண்டாள்.

தலை வணங்கா தாயம்மா- எமனிடம்
நிலை மறந்தது ஏனம்மா?
நம்பத்தான் முடியலையே- அய்யோ
நம்பித்தான் விதி வழியே.

ஆளுமைக்கு அகராதி- எந்த
நாளுனக்கு அதிகாரி?.
மேலெவர்க்கும் விதிதானோ-தோழமை
போலுனக்கும் அதுதானோ!

கொ.பெ.பி. அய்யா
[10/1, 11:48 PM] கொ.பெ.பி.அய்யா.: என்ன செய்யப் போறீங்க - நீங்க
என்ன செய்யப் போறீங்க.
அண்ணந்தம்பி போலரெண்டு
வேஷதாரி வாராங்க.

அட்ட பத்ரகாளி போல ஆண்ட
ஆத்தாவும் போனதால
குட்டப் புழுதியாகி நாடும்
குட்டிச்சுவர் ஆனதோடா!

அடங்காத பிள்ள பெத்த
மடமான வீடு போல
கடங்கார நாடாகி
கலங்குதே மக்கள் வாழ.

ஆளுக்கொரு நாட்டாமை
ஆகிப் போச்சு நாட்டுல.
அடக்கியாளும் பஞ்சாயத்தா
மாறிப்போச்சு கோட்டுல.

அரசியல் கட்சிகெல்லாம்
ஆகிப் போச்சு வியாபாரமா.
நாட்டுக்குனு சேவை செய்ய
நாதியில்ல சத்தியமா.

கொ.பெ.பி. அய்யா
[11/1, 6:11 AM] கொ.பெ.பி.அய்யா.: இன்னும் தேர்தல் எதுக்கடா
ஒன்னும் வேண்டாம் போங்கடா.
எவன் செயிச்சு என்னடா
ஏழை வாயில் மண்ணடா.

விதைச்ச உயிர் கோடிடா
விளைஞ்ச தென்ன மயிரடா?
உயிரை விற்று உரிமை மீட்ட
பையித்தியங்கள் பாவமடா?

காசுக்காக ஆசை விற்பாள் வேசிடா
ஏதுக்காக உரிமை விற்றாய் நீயடா.
உதிரம் இன்னும் காயவில்லை பாரடா.
உரிமை விற்று அடிமை ஆனாய் ஏனடா?

அண்ணல பெற்ற பாவமோ!
கர்மர் விட்ட சாபமோ!
பணம் மட்டும் ஆளுமோ!
இனம் பட்டு வீழுமோ!

கொ.பெ.பி. அய்யா