Sunday 30 August 2015

மாசிலாமணி.

புரட்சித் தலைவி அம்மா!

அம்மா முகத்தைப் பாருங்கள்.!
அன்பின் வனப்பைக்க் காணுங்கள்!.
இந்த முகம்தான் எங்கள் தெய்வம்.!.
பந்தம் கழகம் பாசறை அம்மா.

கள்ளம் அறியா உள்ளம் அம்மா.
துள்ளும் சிரிப்பே வெல்லும் அம்மா...
வெள்ளை மனமே பிள்ளைக் குணமே.
இல்லை சினமே எங்கள் அம்மா.!

மாசிலா மணியே மங்களம் அம்மா.
ஆசிலா மொழியே அன்பாம் அம்மா..
பேசுந் தென்றல் பிழையதில் புயலே.
கூசும் மன்றில் கறைபடாஅம்மா.!

வணங்கா முடியும் வழிபடும் அம்மா.
துலங்கும் பகலாய் விளங்கும் அம்மா.
கலங்கா மலையோ துணிவின் நிலையோ!
விளங்கும் கலையோ கடமை அம்மா.

சோதனை உடைத்த நீதியும் அம்மா.
சாதனை படைத்த பாதையும் அம்மா.
வாதினை எதிர்த்து வழக்கினை முடிக்கும்
மாதென உதித்த தேவதை அம்மா.

கள்ளம் செய்வார் காலன் அம்மா.
நல்லன பெய்வார் மாலன் அம்மா..
வில்லர் முறித்து விடியல் காட்டும்
வெள்ளம் காவிரி உள்ளம் அம்மா.

நிழல்  தரும் ஆலமரம் கருணையம்மா.
விழுதாம் பலமாம் தமிழுக்கு அம்மா.
நிலைபெறும் ஆட்சி வளம்பெறும் மாட்சி.
தொழிலதன் புரட்சி தலைவி அம்மா.

கொ.பெ.பி.அய்யா,

Monday 24 August 2015

ஜெயம் ஜெயலலிதா.

எதிரியும் அஞ்சும் அஞ்சா நெஞ்சம்.
“தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?” என்று ஜெயலலிதாவிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. “ஒன்றா, இரண்டா வார்த்தைகளில் சொல்ல...?” என்று அவர் திருப்பிக் கேட்டார்! “பெண்ணாகப் பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை... இல்லவே இல்லை!” என்றும் உறுதியாகச் சொன்னார் ஜெயலலிதா! அத்தகைய உள்ள உறுதியின் உருவகம்தான் ஜெயலலிதா! அதுதான் அவரை தமிழக அரசியலில் வலிமையான தலைவர்கள் வரிசையில் இடம்பெற வைத்துள்ளது. அரசியல் தோல்விகளைக் கடந்து வந்து, அழிக்க முடியாத இடத்தைப் பெறுபவர்களைத்தான் தவிர்க்க முடியாத சக்திகளாகச் சொல்ல முடியும். ஜெயலலிதாவும் அப்படிப்பட்டவர்தான்! ஜெயலலிதாவின் அரசியலோடு கருத்து மாறுபாடு உள்ளவர்கள்கூட அவரது துணிச்சல், தளராத முயற்சி, தொடர்ச்சியான போராட்டக் குணம் ஆகிய மூன்றையும் ஒப்புக் கொள்வார்கள்.