Friday 15 January 2016

சங்கே முழங்கு!

சங்கே முழங்கு!

தங்கத் தலைவி சிங்கக் குரலி
எங்கள் தாயென்று சங்கே முழங்கு!
தங்குந் தமிழே திங்கள் முகமே
பொங்கும் புகழென்று சங்கே முழங்கு!

தனிப்பலம் துணிந்தார்  தன்பயம் மறந்தார்
தமிழினத் தாயென சங்கே முழங்கு!
எதிர்ப்பார் எவரோ! இமயம் இவரோ!
புரட்சித் தாயென சங்கே முழங்கு!

இடியெனப் படைகள் மழையெனக் கணைகள்
பொடியெனப் பறக்க சங்கே முழங்கு!
கடலெனக் கருணை அலையென அருளை
பொழிவதும் அம்மா சங்கே முழங்கு!

அஞ்சிக் கெஞ்சி அணியெனத் தொங்கி
ஒஞ்சோ மில்லை சங்கே முழங்கு!
விஞ்சி நெஞ்சம் விரிந்த உறவாய்
துஞ்சா தமிழினம் சங்கே முழங்கு!

முடிக்கும் உரமும் தெறிக்கும் மரமும்
விடியல் ஒளியென சங்கே முழங்கு!
படிக்கும் பாடம் பழகும் உலகம்.
வழிதான் அம்மா சங்கே முழங்கு!

விடிந்தது எமக்கு முடிந்தது வழக்கு
படிந்தது பகையென சங்கே முழங்கு!
வென்றும் சத்தியம் என்றும் முதல்வர்
எங்கள் அம்மா சங்கே முழங்கு!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 12 January 2016

எட்டா சாதனை.

முந்தும் அம்மா.

தாயே!தமிழே நீ சொல்லு!
தந்திரம் மந்திரம் வீண் தள்ளு!
எட்டா சாதனை சரித்திரம்-அம்மா.
முந்தும் மேதகு விசித்திரம்.

தமிழின் புண்ணியம் தாய்நாடு..
தானே தன்னியம் தமிழ்நாடு.
முதலென எண்ணியும் நம்நாடு-அம்மா,
முந்தும் மின்னியம் மிகைநாடு.

சந்தை அரசியல் மலியாத
முந்தை புரட்சியார் வழியாக
விந்தை புரியும் ஈர்ப்பாக-அம்மா
முந்தும் தொழிற்துறை தோப்பாக.

காந்தியார் பாதை நோக்காக
காண்பதும் இருபத்து மூன்றாக
தேர்ந்த கிராம இராஜ்யமே-அம்மா
முந்தும் வேளாண்மை இலட்சியமே!

கொ.பெ.பி.அய்யா.


Monday 11 January 2016

யோசிக்கும் அவசரம்.

யோசிக்கும் அவசரம்!

யோசிக்கும் அவசரம் தமிழன்பா!
நேசிக்கும் தமிழகம் புகழன்றோ!
நாசிக்கும் நெஞ்சிற்கும் மூச்சன்றோ!-ஏற்றிப்
பூசிக்கும் அம்மாவியம் பேச்சன்றோ!

தாயகம் உள்ளாளும் ஊராட்சியும்.
தாயவர் சொல்லாளும் நாடாட்சியும்
வீடும் நாடும் ஆளும் நெருக்கம்--உறவாய்
ஊரும் பாரும் மேலும் செழிக்கும்.

நாடாட்சி நல்லாட்சி பேராச்சி.
நமதம்மா நமக்கான நேராட்சி.
ஊராட்சி உள்ளாட்சி இணைவானால் -நாடும்
உயிருள்ள உடலாகும் நிசமானால்.

இந்திய நாட்டின் முன்னோடி.
சந்தியா மகளின் பொன்னாடு.
சத்தியக் கோட்டின் சீராட்சி.-வாழ்க!
சத்தியா மகனின் பேராட்சி.

கொ.பெ.பி.அய்யா.


Saturday 9 January 2016

எதற்கிந்த ஆத்திரம்!


எதற்கிந்த ஆத்திரம்!

எதற்கிந்த ஆத்திரந்தான்!ஏங்குறீங்க!
புதுசாத்தான் வேசமெல்லாம் போடுறீங்க!
பழசான பாத்திரந்தான் ஆகாதுங்க!
நிலையான பாசமெல்லாம் அம்மாதாங்க!!

குடும்பங்களா!கட்சிகளா!புரியல!
கூடிமேயும் பச்சிகளா!தெரியல!
இங்கிலாந்தா!இந்தியாவா!துலங்கல!
இங்கேயின்னும் வாரிசா!விளங்கல!

சுதந்திரமே உங்களுக்கே பெற்றதா!
அதிகாரமே எங்களுக்கு  மற்றதா! .
ஆடுகளா ஏமாறாத்தான் நாங்களா!
நாடாள மட்டும் சொந்தம் நீங்களா!

நடப்பதம்மா நல்லாட்சி நடக்குது!
கெடுப்பதுக்கா கெட்டதுக அலையுது!
விட்டுஇன்னும் உள்ளதையும் தொலைக்கவா!
விட்டசனி தொட்டுயினி அலைக்கவா!

உள்ளாட்சித் தேர்தல் இப்போ வருகுது.
உள்ளூரின் நலம் கருதும் பொறுப்பது.
நல்லாட்சி தொடரும் அம்மா பலமாக
வெல்ல வைப்போம் இரட்டைஇலை நலமாக.


கொ.பெ.பி.அய்யா.