Monday 18 August 2014

யாருகுகாக அம்மா.


யாருக்காக அம்மா?

யாருக் காக அம்மா?.
யார் வாழ அம்மா?.
யார் சொந்தம் அம்மா?--நமக்கே
நம் சொந்தம் அம்மா.

நாம்தானே சொத்து.
நம்மைத் தான்சேர்த்து.
நம்முகமே பார்த்து-மலரும்
அம்மா முகம் பூத்து.

நமக்காகத் தான்கடமை
நாம்தானே அவர்உடமை.
வேறென்ன அம்மாவுக்கு-பிள்ளை
நாம்தானே அம்மாவுக்கு.

தமிழ் அம்மாமூச்சு.
தமிழ்இனமே பேச்சு.
பொத்தி நம்மைகாக்கும்--தாய்போல்
பெற்ற அம்மாநமக்கு.

பிள்ளையாரு பேத்தியாரு
சொல்லுயாரு நம்மயாரு
எல்லாமே அம்மாவுக்கு -உறவு
நம்மைவிட்டால் வேறயாரு?

பத்துக்கோடி பந்தங்கள்
மொத்தம் உமது சொந்தங்கள்.
இத்தனைபேர் தாயாக-உம்போல்
ஒத்த்ணைய யாரம்மா?


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment