Saturday 31 October 2015

அம்மா உம்போல்.......

பெண்ணேதான் ஆளும்!

அம்மா உம்போல் அன்புக்கு யாரோ!

சும்மா வீம்பால் சொல்வீச்சர் நேரோ!
நல்லாவே செல்லும் நல்லாட்சி கெடுப்பார்
பொல்லாதார் சொல்லும் செல்லாது தாயே!

தாய்தன் வீட்டை காத்திடும் பாசம்,
நீயுன் நாட்டை ஆண்டிடும் வாசம்.
பேய்வெம் பேச்சால் ஏய்த்திடும் மோசம்.
சேய்யெம் கூட்டால் தீய்த்திடும் நீசம்.

யாரென்ன செய்யும் ஊருந்தன் பக்கம்.
வேரன்ன பற்றும் நேருந்தன் சுற்றம்.
சீரென்ன நொய்யும் செருக்கரின் திட்டம்
கூரன்ன தொண்டர் கொடுவாள் சுற்றும்.

பெண்ணென எண்ணும் பொச்சாப்பு கூச்சம்.
விண்ணென விஞ்சும் பெண்ணெதிர் தாக்கம்.
என்னென்ன வீசும் வீசட்டும் காப்போம்.
பெண்ணேதான் ஆளும் அன்னைதான் நாடும்.

கொ.பெ.பி.அய்யா.

Friday 30 October 2015

அஞ்சா நெஞ்சம் அம்மா.

போர்க்காலம்.

தேர்தல் காலம் என்றால்-ஒரு
போர்க் காலம் போலத்தான்.
நேரில்லா பொய்க் கணைகள்--மொழி
கூர் கொண்டு தீய்த்திடுவோம்.

நெஞ்சம் தனை நிமிர்த்திவிட்டால்-எதிர்
எஞ்சும் வினை ஏது முன்னால்.
விஞ்சும் எழுச்சி துணி வொன்றால்--பகை
அஞ்சும் அதிர்ச்சி  அணி நின்றால்.

இட்டுக் கதைகள் ஏய்ப்ப தெல்லாம்-சும்மா
விட்டுக் கணைகள் வேடம் செய்யும்.
எட்டி உதைத்து முன் நகர்ந்தால்--கை
கட்டிப் பதைத்து பின்தயங்கும்.

ஊளை நரிக் கூட்டம்தான்--பயம்
வாலைக் குறி ஆட்டும்தான்
பார்வைப் பொறியில் பட்டும்தான்--நடுங்கி
நாவை ஒடுக்கி ஒடும்தான்.

அம்மா நமது ஆன்ம சக்தி--உயிரில்
நின்று நிறைந்த ஆழ்ம பக்தி.
எம்மாம் படைதான் எமக்கு நேர்!---நாம்
தும்மல் விடுத்தால் துதிக்கும் பார்!

கொ.பெ.பி.அய்யா.


Thursday 29 October 2015

நல்லாத்தான் போகிறது

நல்லாத்தான நடக்கிறது!

நல்லாத்தானே நடக்கிறது
நமது அம்மா அரசு--தீயர்
சொல்லுவதும் நினைப்பதுவும்
எல்லாம் தீயும் பழசு.


விளம்பரமே தேவையில்லை
புலம்பும் பொய் போதும்--அந்த
பொய்கூட புரிய வைக்கும்
மெய்மறைக்கும் செயலை.

பிழைப்புக்காக கட்சி செய்யும்
அலப்பரைகள் கூச்சல்-- ஏதோ
இருக்குறோமென காட்டத்தான்
தெருக்கூத்து பாய்ச்சல்.!

அழியின்னா இழியிங்கிறது
எடக்கு மடக்கு பேச்சு--பாவம்
நல்லதே அறிந்திடாமல்
நொல்லக்கண்ணும் போச்சு.

மனச்சாட்சி இல்லாமல்தான்
மறைத்துப் பேசும் செயலாம்--அம்மா
புரட்சிப்பா பாதை தாக்கத்தினால்
புரட்டி உருட்டும் பேச்சாம்.

எதிர்காலம் தொலைந்ததென
எரிஞ்சி விழுகிறாங்க--அம்மா
நிரந்தரமா முதல்வரென்றால்
பொரிஞ்சி அழுகிறாங்க.

எப்பொழுதும் எதிர்ப்பவர்கள்
இப்படித்தான் போங்க--அட
இதை ஏன்தான் பெருசாக
எண்ணுறீங்க நீங்க!

கொ.பெ.பி.அய்யா.






Wednesday 28 October 2015

அம்மா அம்மாதான்

அம்மா அம்மாதான்.

அம்மா அம்மாதான் மற்றெல்லாம் சும்மாதான்.
செம்மாந்து நம்நாடு பெற்றபேரும் அம்மாதான்.
தம்முயிர் தமிழ்நாடு எம்பணி மக்களுக்கே!
நம்புந்தன் நாட்டுக்கே நாளொன்றும் வாழுகிறார்.

எதிர்வரும் சோதனைகள் புதிர்வென்று மீட்டுகிறார்.
விதிவியக்கும் சாதனைகள் மதிகொண்டு நாட்டுகிறார்.
சதிசெய்யும் தீவினைகள் எதிர்நின்று ஓட்டுகிறார்.
கதிதொய்யும் கூவொலிகள் பதிலின்றி தீட்டுகிறார்.

காட்டுக்கூச்சல் போட்டுசும்மா ஆட்டமாடும் கூட்டமோ!,
தீட்டுப்பேச்சு பேசிப்பேசி ஊட்டுபொய் நாட்டுமோ!
நாட்டுமக்கள் கேட்டுமம்மா செய்தநன்மை மறக்குமோ!
தீட்டுந்திட்டம் ஆற்றுமம்மா கோட்டையாள மறுக்குமோ!

ஆண்டதெல்லாம் போதுமென்று மீண்டதமிழ் நாட்டினை
மீந்ததென்ன ஆட்டைபோட   ஆந்தைவிழி ஆசையோ!
வேண்டாமய்யா விட்டுவிடு!போதுமம்மா எனுந்தமிழும்
தீண்டலையோ செவிகளும்! செவிடாகிப் போனதோ!

அன்றாடம் செய்திகளும் கண்டுவரும் மக்களை,
கண்டாடு மெய்விளங்கும் கொண்டாடும் அம்மாவை.
அமைதியாகி ஆராய்க அம்மாதான் நன்மையே!
தமிழ்நாடே சீராகும் தட்டில்லா உண்மையே!

கொ.பெ.பி.அய்யா.

Sunday 25 October 2015

அம்மாதான் எங்களுக்கு.

அம்மாதான் எங்களுக்கு.

அவனுக் கென்ன உளறிவிட்டான்
அறியாமல் கிளறி விட்டான்.
விழுவ தவன் விளங்காமல்
வீழ்த்த என்ன பலம்கொண்டான்.

அறிவிருந்தால் புரிந் திருப்பான்
அம்மாவை அறிந் திருப்பான்.
மலை இழுக்க மயிரமோ!
மண்டை என்ன களிமண்ணோ!

மக்கள் என்ன கொக் காமோ!
சிக்குவரோ சிறுமை யிடம்!
அம்மாவின் அன்பை விட
ஆரு மிங்கே தேவையென்ன!

தாய்மடியின் தமிழ் சுகமே!
சேயறியும் இது நிசமே!
பேய்பிடியில் மீண்ட மக்கள்
நாய்க் குடியில் மாட்டுவரோ!

அவன் வாழ ஊதுகிறான்
எவர் செல்வார் எமன்பின்னே!
என்ன குறை இங்கிருக்கு!
அம்மா தான் எங்களுக்கு.

தமிழ் இனமே தாய்மனமே!
அமைந்த பெரும் புண்ணியமே!

தடைகள் முடிந்து விடியட்டுமே!

கொ.பெ.பி.அய்யா.


Monday 19 October 2015

ஒரே ஒரு தலைவி.

உம்மைப்போல் ஒரு தலைவி!

உம்மைப்போல் ஒரு தலைவி!
இம்மையினி அரும் பிறவி!
செம்மலும் பிறப்பதுண்டோ-அவர்
அம்மாதான்  மறுப்புண்டோ!

இராமன் வழி மண்ணாளும்.
கோமதியே பெண்ணாளும்!.
பூமித் தாய் பொறுமையே-கொடும்
தீமனங்கள் தீர்த்த பேரே!

வாலிதான் பெண் வடிவில்.
பாதியாவர் உம் பலத்தில்.
காளிதான் கடுஞ் சினத்தில்-ஆறியும்
தோழமை தான்  சற்குணத்தில்.

அகிலாண்ட நாயகியாய்,
புகழாண்ட தாயவராய்,
பகை தீண்டாத் தீயாக-வன்மை
புகை தாண்டி மீளுகிறாய்!.

அம்மா உம்மை நம்பித்தான்
இம்மா நிலம் பற்றித்தான்.
எம்மனம் எந்நாளும்-எங்கள்
அம்மா தான் கொண்டாளும்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 13 October 2015

அமைதிப் பூங்கா.

முன்னேர் அம்மா!

அழகு அழகு ஆட்சி அழகு. 
அம்மா அவரின் அறவழி உலகு.
பழகு பழகு பன்திறம் அழகு.
என்றே அம்மா பின்வரும் உலகு.

திருவோர் எல்லாம் வாழ்த்தும் அழகு
மறுவோர் சொல்லும் மாற்றம் உலகு.
உலகம் போற்றும் வள்ளுவன் அழகு
நிலவும் அம்மா ஆட்சியின் உலகு.

அமைதிப் பூங்கா தமிழகம் அழகு.
சமைக்கும் அம்மா தொழிலதன் உலகு.
வேளாண்மை காக்கும் மேலாண்மை அழகு.
நூலாண்மை ஆற்றும் தாய்மேன்மை உலகு.

ஏழையர் செம்மை தேர்வது அழகு.
ஆள்வகை அம்மா நேரது உலகு.
முன்னேர் காட்டும் தன்நேர் அழகு.
சொன்னால் அம்மா பின்னால் உலகு.

காலம் சொல்லும் கட்டிய அழகு.
ஆளும் அம்மா எட்டிய உலகு.
ஊளைக் கோழையர் ஓட்டம் அழகு.
நாளை மூளையர் கூட்டம் உலகு.

கொ.பெ.பி.அய்யா.