Saturday 22 August 2020

நன்றி!நன்றி!நன்றி!

தம்பி வெம்பூரார் நம்பியவர்கு,
நம்பி ஈந்த பணியதற்கு;
மாவட்ட இணைச் செயலதற்கு:
ஆணையிட்ட கழகம் போற்றி!

புரட்சி யென்னும் புகழதற்கு,
சரித்திரம் எம்ஜியாரம்மா அவர்கு;
பேராளும் எடப்பாடி பன்னீரார்கு:
சமர்ப்பணம் நன்றி!நன்றி!

தேர்ந்து உவந்த ஏந்தல்தகு
கூர்ந்த செம்மல் மாண்புமிகு;
அமைச்சர் வெகு கடம்பூரார்கு;
சமர்பித்தோம் நன்றி!நன்றி!

விளாத்திகுளம் மக்கள் தொகுதி,
உளம்வாழும் இளம் வழுதி;
பொற்கால செயல் மிகுதி;
நற்பேர் சின்னப்பர்க்கு நன்றி!நன்றி!

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 19 August 2020

பொய் விளக்கும் சுதந்திரம்.

நிலம் தேடும் நாடோடிகள்,
விலையாகும் கொள்கை மாறிகள்.
குளம் தேடும் மீன்கொத்திகள்,
களம் ஆடும் அரசியல்வாதிகள்.

குச்சி தோறும் பட்சிகள்,
கட்சி தாவும் ஒற்றர்கள்.
அரசியல் மேடைப் பேச்சு,
விரசியல் மேலுப் பூச்சு.

வீசிய தடித்த சொற்கள்
பாசத்தின் உச்சம் என்பார்.
வேசியெனக் கூச மாட்டார்.
வசையும் வாழ்த்து என்பார்.

திக்கறியா திசை மாறிகள்.
மக்கள் பாவம் அப்பாவிகள்.
எக்கணம் எவர் எங்கோ!
வெக்கம் கெட்ட அரசியல்.

நேசம் எல்லாம் வேசமோ!
வேசி மொழி அரசியலோ!
பதிவான முழக்கம் எல்லாம்:
சுதந்திரம் விளக்கும் பொய்யோ!

கொ.பெ.பி.அய்யா.

Sunday 16 August 2020

பிழைப்புக்காக அல்ல.

பிழைப்ப தற்கல்லடா அதிமுக,
பிறப்பி லிருந்து நான் அதிமுக;
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவியும்:
கருவி லிருந்தென் உயிரடா!

விளையும் பூமி எனக்கிதுதான்.
அலையம் தேவை எதற்கடா?
பழகிய சொந்தம் துறப்பாரோ!
விலகியும் நெஞ்சம் பறப்பாரோ!

உண்ட வீட்டிற்கு இரண்டகமா!
கண்ட வாழ்விற்கு வஞ்சகமா!
நன்றி மறந்தார் நஞ்சகமா!
கொண்டு அலைவார் பாவமடா!

குறைந்தாலும் நிறைந்தாலும்
நிறைந்த குளமென் மனமடா!
பிறப்பு என்பது ஒருமுறைதான்:
சிறப்பு எனக்கது அதிமுகதான்.

கடைநிலைத் தொண்டு ஊழியனும்,
முதல்வர் ஆக்கும் சனநாயகம்.
அலையும் எண்ணம் விலைபோகும்:
நிலையெங்கு செல்லும் அய்யோடா!

வாழும் வரையும் தொண்டன்டா!
சாகும் நிறைவும் நிற்பேன்டா!
ஆளும் அதிமுக ஆட்சிதான்:
காலம் சுழலும் சாட்சி நான்.

கொ.பெ.பி.அய்யா.