Tuesday 23 February 2016

அம்மாவின் வெற்றி.

அம்மாவின் வெற்றி.

அம்மாவின் வெற்றி
உள்ளாட்சி நூறும்,.
அம்மாவின் ஆட்சி -தொடரும்
ஆயிரம் காலம்.

எவரது சொல்வார்
எங்களம்மா எதிரே?
அதிகாரம் ஒருவர்-கழகம்
அம்மாதான் இறைவர்.

மொழி பல அறிஞர்
மொழி வழித் தமிழர்.
மண்மணம் ஸ்ரீரங்கம்-தூய
பொன்குணம்  அறிவரங்கம்.

பெண் பெருமை பொறுமை
தன் திறமை திருமை..
அறி வடைவு வெற்றி.-நூலோர்
நெறி விளைவு பற்றி.

நெஞ்ஜெதிர் வீரம்
அஞ்சாது போரும்.
திரு வெனும் தீரம்-கூடித்
தீராது சேரும்,

பல்லுக்குப் பல்லா!
வில்லுக்கு வில்லா
தில்லுக்கு தில்லா-அம்மா.
சொல்லுக்கும் சொல்லா!

ஒத்தையா நின்றாலும்
மொத்தமாய் வெல்லுவோம்.
அம்மா தந்த துணிச்சலே
சும்மா இல்லே நெருப்புடா!


கவிஞர்கொ.பெ.பி.அய்யா.

Monday 22 February 2016

அகவை அறுபத்தொன்பது

அகவை அறுபத்தொன்பது,

அம்மாநீ நூறாண்டு வாழவே வேணும்.
இம்மாநிலம் யென்றும்நீ ஆளவே வேணும்.
அகவையும் ஆண்டுதோறும் நீளவே வேணும்.
புகழ்நின்றும் தமிழோடு சூழவே வேணும்.

சந்தியா பெற்ற மகள் சங்கத் தமிழே!
இந்தியா கற்ற புகழ் சிங்கத் துணிவே!
எம்ஜியார் கண்ட முத்து எங்கள் சொத்தே!
அம்சமே கொண்ட என்றும் முதலமைச்சரே!

அடிப்படைகள் வாழ்வதற்கு அம்மா திட்டங்கள்.
படிப்படியாய் மீள்வதற்கு பார்வைக் கட்டங்கள்.
பாரதியின் கனவெல்லாம் நினைவுகளாகும்
சாரதியாய் வந்த தாயின் பல்லாண்டு வாழ்வும்!

வேலையில்லா வெட்டிகளும் வீதியி லில்லை.
வேண்டாத பட்டினியும் விதியிலு மில்லை.
ஊளையிடும் ஊர்நரிகள் ஓய்ந்தது தொல்லை.
ஆண்டாளே அம்மாதமிழ் ஆளுகை எல்லை.

அம்மா உன்னகவை அறுபத் தொன்பது
அள்ளித்தரும் பரிசுகளோ அனைத்தும் தொகுதிகள்.
இருநூற்று முப்பத்து நான்கும் போதுமோ!
புறநாட்டும் பக்கத்து அறுவடை செய்வோம்.

கொ.பெ.பி அய்யா..