Thursday 25 June 2015

என்னடா வழக்கு.

என்னடா வழக்கு?

என்னடா வழக்கு ஏனிந்த பொழப்பு?
உன்னோட கணக்கு ஊருக்குள் மணக்கு--ஒரு
பெண்ணோட எதிர்ப்பு பேடியே உனக்கு
மண்ணோட புதையும் மாபாவம் இருக்கு.

சண்டாளர் நெனப்பு மண்ணாளும் துடிப்பு
பெண்ணாளை அழிக்க என்னென்ன முடிப்பு?--நேரே
முன்னின்னு ஜெயிக்க முடியாத நடிப்பு
இன்னென்ன முறுக்கு படியாத படிப்பு?

வழக்கென்ன வழக்கடா வரட்டுண்டா பாக்கலாம்.
இழப்பென்ன எமக்கடா இடமுண்டா கேக்கலாம்--நெஞ்சில்
அழுக்கென்ன உனக்கடா வெளுக்கும்வரை போக்கலாம்
இழுக்கென்ன புரியுமடா இனிஉன்னை தூக்கலாம்.

பெண்ணாளப் பொறுக்காத சண்டாளக் கூட்டமே
எந்நாளும் நிலைக்காது உம்மோட ஆட்டமே---தமிழ்
மண்ணாளப் பிறந்தஎம் அம்மாதாம் ஆட்சியே
கண்ணாற மனமாற காண்பதும்உம் மாட்சியே.

கொ.பெ.பி.அய்யா.




Tuesday 23 June 2015

மனச்சாட்சி இல்லை.

மனிதம் அற்ற அரசியல்.

தமிழ் நாட்டு அரசியல்தான்.
தரம் கெட்ட விரசியல்தான்.--காரி
உமிழ்கிறது உலகம்தான்.

பழி போடும் அரசியல்தான்.
பகல் வேடம் இழிசெயல்தான்--கீறி
பலிவாங்கி சிரிக்கிறது.

பொய் பேசும் அரசியல்தான்
மெய் கூசும் அணிபெயல்தான்--மாறி
தொய்கிறது மனநிலைதான்.

சுயம் வாழும் அரசியல்தான்.
பொது வாழ்வு அரிதாரம்தான்.--நீரி
மயங்குவது உழைப்பவர்தான்

கூலிக்காடும் அரசியல்தான்.
கொள்கை மாறும் புரட்டியல்தான்.--மீறி
வேலிதாண்டி மேய்கிறது.

மானம் கெட்ட அரசியல்தான்.
ஈனம் விட்ட விவச்சாரம்தான்--ஊறி
நாணம் பட்டு அலைகிறது.

மனிதம் அற்ற அரசியல்தான்.
புனிதம் செத்த அரக்கினம்தான்--கோரி
மனிதரத்தம் சுவைக்கிறது.

ஊழல் எனும் அரசியல்தான்
ஊதாரி ஒழுங்கீனம்தான்--தேறி
ஊழியாகி விளைகிறது.

பித்தலாட்டம் அரசியல்தான்
குத்தலாட்டம் புரிவதுதான்---கூறி
சத்தியம்தான் அழுகிறது.


கொ.பெ.பி.அய்யா.