Wednesday 9 July 2014

மனிதம் மரித்துப் போகவில்லை.


மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை.

மனிதம் இன்னும் மரித்துப் போகவில்லை.
மழையும் மண்ணை மறுத்துப் பேயவில்லை.
அங்கும் இங்கும் எங்கோ இரங்கும் மனிதம்
அன்றும் இன்றும் என்றும் துலங்கும் புனிதம்.

கூலிக்குக் கொலையும் கடமைக்கு காசும்
கேலிக்குக் அலையும் கெடுமன மாசும்
போலிக்கு  விலையும் புகழுக்கு சூழும்
ஞாலில் நிலையும் மனிதம் வாழும்.

அடுத்தவர் நிலைமை அறிவார் மனிதர்.
இடுக்கவர் சிறுமை எடுப்பார் இனிதர்.
தேடும் மனிதம் தெரிந்தது தண்ணீர்.
பேரிடர் பணியில் புரிந்தது கண்ணீர்.

பொருளில் மயங்கி அருஉயிர் பறிக்கும்
கருமன மனிதர் கண்ட உலகம்
பொருளும் வழங்கி புகலிடம் அளிக்கும்
பெருமை வியந்து பொறுத்தது மழையும்.

மாமிசம் ருசிக்கும் காமுகப் பேய்கள் 
பூமியில் அறிந்தது பொய்யென தாய்கள்
சேய்களின் கரங்களில் செருநீர் கடந்து
தூய்மை மனங்களை தொழுதார் பணிந்து.
அபாயம் என்றால் அலறும் கூட்டம்.
அவரவர் உயிரே அவசியம் காட்டும்.
உபாயம் நிறுத்தி உயிரெலாம் தாமென
நவயுகம் கண்டார் நிதியெலாம் நாமென.

அஞ்சா நெஞ்சம் கொண்டார் துணிவில்
துஞ்சா மஞ்சம் தூர்த்தார் உணர்வில்
பலனேது மெண்ணார் பலனே காப்பு.
உலகேது அன்னார் உயிரென வாழ்த்து.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment