Saturday 5 July 2014

வியாபார அரசியல் கட்டுரை


வியாபாரிகள் அரசியல் வாதிகள் ஆகினால்!

வெள்ளைக்காரர்கள் வியாபாரம் செய்ய வந்தவர்கள்தானே!விளைவு என்ன ஆனது?அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தது?கொள்ளை இலாபம் என்ற கொள்கையைத்தவிர வேறென்ன செய்தார்கள்.அவர்களின் வியாபாரத்தை விருத்தியாக்க எதைச்செய்யவேண்டுமோ அதைத்தான் செய்தார்கள்.
அவர்களின் வளர்ச்சியின் நோக்கம் கருதி செய்யப்பட்டதெல்லாம் பொதுநன்மை கருதி செய்யப்பட்டதாக நாமும் நமக்காகவென்று தவறாகப் புரிந்துகொண்டு,"ஆகா வெள்ளைக்காரன் போலாகுமா?என்று தப்புத்தாளம் கொட்டி அவன் பாடிய கச்சேரியைக் களைகட்டச்செய்தோம்.அவனும் நம்மை ஏமாற்றி எவ்வளவு கொள்ளை அடிக்கமுடியுமோ அவ்வளவும் அடித்து நம்மை மொட்டை ஆக்கி வறுமையைத்தந்துவிட்டுப்போனான்

அந்தக்கொள்ளை வேட்டையின் கோரத்தாண்டவத்தின் அதிர்ச்சியிலிருந்தும்  
பாதிப்பிலிருந்தும் நாம் இன்னமும் மீண்டபாடில்லை.வளரும் நாடாகவே தேய்ந்து கொண்டு இருக்கிறோம் இன்றைய கொள்ளை வியாபாரிகள் அரசியல் வாதிகளின் பொய்பேச்சின் மாயமந்திர வசீகர ஏமாற்று வித்தைகளால்.

அந்தக் கொள்ளைவியாபாரக்கூட்டம் என்ன என்ன துறைகளில் வர்த்தகம் செய்தார்களோ அந்த்தத் துறைகளைத் தங்கள் அதிகாரத்தின் கைகளுக்குள் நரித்தந்திரமாக பெற்று வைத்துக்கொண்டு மக்களுக்குச்சென்று அடையவேண்டிய நன்மைகளைத் தடுத்து அவைகளின் ஒட்டுமொத்தப் பொருளாதாரப் பயனையும் தங்கள் அரண்மனைப்பக்கமாக ஒருமுகமாகத் திருப்பிவிட்டுக் கொழுத்துப் பெருத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இத்தனை காலமானதும் நமது போதாத காலம்தான்.

மக்களுக்குக் குறைந்தகட்டணத்தில்  கம்பிவடத் தொலைக்காட்சி சேவையை வழங்கவேண்டும் என்று அம்மாவின் அரசு மேற்கொண்ட திட்டத்திற்கு அனுமதி வழங்கவிடாமல் மத்திய அரசை மிரட்டி உருட்டி தன் கைவசம் வைத்துக்கொண்டு ஆடிய நாடகங்கள் எல்லாம் இப்போது அம்பலத்திற்கு வந்து அரங்கேறிக்கொண்டிருக்கும் காட்சிகள் பட்டவர்த்தணமாகத் தோன்றத் தொடங்கியாகிவிட்டன.இப்படித்தான் இந்த வியாபாரிகள் அவர்களின் வர்த்தகம் சார்ந்த துறைகளை எல்லாம் ஆக்கரமித்துக் கொண்டார்கள் என்பதும் உண்மை.அதை மக்கள் புரிந்துகொண்டார்கள் என்பதும் உண்மை.அதனாலேயே அவர்கள் தமிழக அரசியலிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டார்கள் என்பதும் உண்மை.

ஆகவே அவர்களின் தோல்விக்கு உண்மையான காரணம்என்ன என்பதைப்பற்றி அவர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்தான்.ஆனாலும் அவர்கள் அந்த உண்மையை இன்னமும் அவர்களை அரசியல்வாதிகள் என்று நம்பியிருக்கும் ஒன்றிரண்டு அப்பாவித் தொண்டர்களை பொய்யாக ஏமாற்றி சமாதானப்படுத்தித் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக தங்கள்நியாயமான தோல்வியை அநியாயமான தோல்வியெனவும் அதற்குத் தேர்தல் ஆணையம்தான் காரணம் எனவும் பொய்வழக்குத் தொடுத்து நாடகம் ஆட இப்போது கதைவசனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் பாவம்.

கூடிய சீக்கிரத்தில் நடுவண் அரசின் அனுமதி கிடைக்கும்.மக்களுக்கு கிடைக்கவேண்டிய அத்தனை நன்மைகளும் கிடைக்கும்.மக்களுக்கு எதிரான கொள்கைகளை ஆதரிக்கவும் வாதிடவும் இந்த வியாபாரிகளுக்கு இடம் அங்கு மக்களால் அனுமதிக்கப்படவில்லை.நாடு கடத்தப்பட்ட வெள்ளையர்களைப்போல் இந்தக் கொள்ளையர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
அத்தனையும் நாடகம் என்பதை அறிவார் நெஞ்சக்கூட்டிலே.

கொ.பெ.அய்யா.

No comments:

Post a Comment