Thursday 26 June 2014

எம்ஜிஆர் (குழந்தைப் பாடல்)


எம்ஜியாரு(குழந்தைப் பாடல்)

எம்ஜி ஆரு எம்ஜி ஆரு--அவர்
எங்கே வாழ் கிறாரு?—தமிழ்
எங்கே வாழ் கிறதோ—எம்ஜிஆர்
அங்கே வாழ் கிறாரு.

தமிழ் பேசும் இனமதிலே-இனிக்கும்
அமிழ்தமாக எம்ஜிஆர்—தமிழ்
மொழி யதிலே ஒலியாக-இரட்டை
இலையாகத் வாழ்கிறாரு.

அண்ணாவின் இதயத்திலே-அன்புக்
கனியாகத் எம்ஜிஆர்-சத்து
அன்னமிட்ட கையாக--கல்வித் 
தந்தையாக வாழ்கிறாரு.

ஏழையின் சிரிப்பினிலே-காணும்
இறைவனாக எம்ஜிஆர்-என்றும்
அறிஞரண்ணா காந்திவழி-தோணும்
ஒளியாக வாழ்கிறாரு.


நல்ல நல்ல பிள்ளைகளில்-நாளைத் 
தலைவராக எம்ஜிஆர்-நாட்டின்
நம்பிக்கையின் ஒளியாக-வாழும்
வழியாக வாழ்கிறாரு.

தர்மனாக தமிழனாக-தங்கத்
தலைவனாக எம்ஜிஆர்—வாழ்வில்
தனக்கெனவும் வாழாத-கொடை
வள்ளலாக வாழ்கிறாரு.


புரட்சி எனும் சொல்லிற்கே-புகழ்
அருத்தமாக எம்ஜிஆர்—நாட்டில்
வறுமை எனும் சொல்லையே-ஒழித்த
வாத்தியாராய் வாழ்கிறாரு.

நிலையான சூப்பர்ஸ்டாரு-இன்றும்
அரசியலில் எம்ஜிஆர்--என்றும்
இவருக் கிணை இல்லையேழ்-மக்கள் 
திலகமாக வாழ்கிறாரு.

கவிஞர். கொ.பெ.பி.அய்யா. 

No comments:

Post a Comment