Friday 6 June 2014

இன்னும் திருந்தவில்லை

இன்னமும் திருந்தவில்லை.
--------------------------------------------
============================
இவ்வளவு பட்டும் எடைக்குப் போகாத இந்த தில்லுமுல்லு கடன்காரர்கள் இன்னும் திருந்தியபாடில்லையே என்று எண்ணும் போது பாவம்என்றும்எண்ணாமலும்இருக்கவும்முடியவில்லை.

இவர்களின் உண்மையான தோல்விக்கான காரணங்கள் என்ன என்றும் இவர்கள் உணராமல் இல்லை.ஆனாலும் ஒப்புக் கொள்ள மறுப்பதுதான் இவர்களின் தொடரும் தோல்விகளுக்கும் மூலப்பொருளாக இவர்களின் துருப்பிடித்த மூளைக்குள் கறையாகப் படிந்து கிடக்கிறது.

சுயபரிசோதனைகள் செய்யுங்கள் என்கிறார்.அவ்வாறு தொண்டர்கள் அவசரப்பட்டு செய்துவிட்டால் கட்சிக்குள் இவர்களின் குடும்ப உறவினர்களைத் தவிர வேறு உறுப்பினர்கள் எவரும் மிஞ்ச மாட்டார்கள்.

உங்களின் உண்மையான தோல்விக்குரிய காரணங்களை தோல் உரித்துக் காட்டுங்கள்.அதுதான் உண்மையான சுய பரிசோதனையாக இருக்கும்.அப்போதுதான் நீங்கள் உங்களை திருத்திக்கொள்ள துணையாக இருக்கும்.அதை விடுத்து பொய்யான காரணங்களைக் கூறி திசை மாற்றிவிட்டால் சேரும் இடம் சேராமல் போகும்.

எதிரியின் பலம் தெரியாமல் மோதி மூக்கறுபட்டுவிட்டு நடுநிலைக்கு வந்தவனை குற்றம்சாற்றுவது எந்தவிதத்தில் நியாயம்.இருபது பொய்களையே மூட்டை கட்டி வைத்துக் கொண்டு நாற்பத்தைந்து உண்மை வைரங்களின் ஒளியை மறைத்துவிடப் போட்டியிட முயல்வதும் முட்டாள்தனம்   என்றும் உங்களுக்குத் தோன்றவில்லையா?

பனை மரத்தின் நுங்குக்கு ஆசைப்படலாம்.ஆனால் அதில் ஏற்க்கற்றுக் கொள்ளவேண்டுமே!நுங்கு கிடைக்கவில்லையே என்பதற்காக பனை மரம் நட்டவனைப் பழிக்கக் கூடாது.உனக்கு பாட்டு வரவில்லை என்பதற்காக பாட்டு எழுதியவனை குற்றம் கூறக்கூடாது.உன்னிடம் உள்ள குறைகளைக் கண்டறிய நீயே உன்னை சுயபரிசோதனை செய்.

இயக்கம் என்பதை மக்களுக்காக என்று திருத்து.கட்சி என்பதை கொள்கைக்காக என்று மாற்று.குடும்பம் வேறு இயக்கம் வேறு என்று புரிந்துகொள்.மக்களும் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்.மக்கள் உன்னைக் கண்காணிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்.நீ எதைச்சொன்னாலும் மக்கள் எப்போதும் நம்புகிறார்கள் என்பதை மறந்து தெளிந்துகொள்.

மக்கள் எவர் ஒருவரை குற்றவாளி என முத்திரை குத்திவிட்டார்களோ அவரை நிரபராதி என நீயே தீர்மானித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்காதே.பந்தம் சொந்தம் என்பதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டது.அரசியலுக்கு பாசம் இல்லை.பார்வை மட்டுமே உண்டு.அப்பார்வை நேரானது.கூரானது.அரசியல் என்பதும் துறவறமே!நாட்டு மக்கள் அனைவருமே இரத்தத்தின் இரத்தமான சொந்தங்களே!
அரசியல் என்பது சொந்தம் என்ற ஒரு எல்லைக்குள் சுருங்கிவிடுவதில்லை.அது நாடு, மக்கள் என்று பரந்து விரிந்த பந்தம்.தலைவன் என்பவன் நான்கு சுவர்களுக்குள் கட்டுப்பட்ட உறவுகளுக்குள் அடங்கி விடுபவன் அல்ல..தலைமை என்பது அகன்று விரிந்த சமுத்திரம்.உயர்ந்து நிற்கும் இமயத்தின் சிகரம்.,அது வீடு மனை,வாசல்,மனைவி,மகன்,மகள்,பேரன்,பேத்தி என்ற எல்லைகள் கடந்த ஏகாந்தம்.இந்த நிலை கண்ட அரசியல் ஞானிகள் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு சிலரே உண்டு.அவர்களில் அன்று காந்தி,காமராஜ்,எம்ஜியார்,வாஜ்பேய் இன்று ஜெயலலிதா மற்றும் நரேந்திரமோடி என்றே கூறலாம்.

மக்களுக்காகவே பிறந்து மக்களுக்காகவே வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் மக்கள்மனங்களில்என்றும்வாழ்வார்கள்.எனும்    உண்மைகளை உணர்ந்து திருந்த சுய பரிசோதனை செய்வதும் அவசியமே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment