Monday 9 June 2014

மகளுக்கு தாலாட்டு.




ஏனழுதாய் என்மகளே

ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்.மகளே!
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

பெண்ணாகப் பிறப்ப தந்நாள்
பாவம் என்றும் பழி சொன்னார்..
பெண்ணாகப் பிறப்பதுவும் குலப்
பெருமை என்றும் ஔவ்வை சொன்னாள்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

ஔவ்வை சொன்ன மொழி போலே
அவள் கண்ட வழி மேலே
பேறு புகழ் கொண்ட பெண்கள்
பெருமை பெற்றார் தோன்றலையோ!
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

பெண்ணாகப் பிறந்தவர்தான்
பெண் பெருமை ஜெயலலிதா.
கண்ணாகப் பெண்ணைப் போற்றி
மண்ணாளப் பெருமை செய்தார்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

கள்ளிப்பால் கொடுத்த காலம்
கருவிலே முடித்த கோலம்
இல்லை என்றே ஆனதம்மா
எங்களம்மா ஜெயலலிதாவால்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

பெண்ணாகப் பிறந்தவளை
பொன்னாகப் போற்றுகின்றார்.
கல்வி எல்லாம் கற்றுத் தந்து
விண்ணாய அம்மா செய்தார்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

கல்யாணச் சந்தையிலே
கண்கலங்கும் பெண்ணில்லை.
கட்டுந்தாலி தங்கமுடன் அம்மா
பெற்ற தாயாய் தருகின்றார்.
ஏனழுதாய் ஏனழுதாய் என்மகளே
ஏனழுதாய்.?

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment