Monday 16 June 2014

அது அப்படித்தான்.


பாவம் அந்தப் பெண்மணி.!

ஜனநாயகம் பேசுவோர் பலர் ஜனநாயகம் மதிப்பதேஇல்லை.அது வெறும் பேச்சுக்கலை என்பதைப் புரிந்து கொள்ளாதவள் பாவம் அந்தப் பெண்மணி!

பழைய வரலாறை தெரிந்து புரிந்து கொள்ளாமல் ஒருவழி பாதையில் நுழைந்தவள் மறுவழிப் பாதை இல்லை என்று அறிந்து கொண்டபோது எந்த வழிப் பாதையில் நுழைந்தாளோ அந்த வழிப் பாதையில் எப்படியோ ஒருவிதமாக திரும்பி வந்ததும் அவள் நல்லநேரமே.எஞ்சியுள்ள நாட்களில் இனி தான் எண்ணியதைப் பெற முயற்சிக்கலாம்.அல்லது தனக்காகக் கொஞ்சம் வாழ்வதோடு நாட்டு மக்களுக்காகவும் வாழ்வது பற்றியும் யோசிக்கலாம்.

மகளே!நீ இருந்த இடம்.ஒரு தனியொரு ஏகாதிபத்தியம் நிறைந்த இடம்.அங்கே அவர்களின் சொந்தத்திற்கே எல்லா உரிமைகளும்.மற்றவர்கள் அவர்களுக்காக தங்களைத் தியாகம் செய்துகொள்ளத் துணியவேண்டும்.யாரும் தங்களுக்காக வாழக் கூடாது.அவர்களுக்காகவே மற்றவர்கள் வாழ்ந்தாக வேண்டும்.அதுதான் அவர்களின் இயக்கம் கொண்டுள்ள கொள்கை லட்சியம் எல்லாம்.அப்படி இருந்தால் அவர்களிடம தாக்குப்பிடிக்கலாம்.எப்போது அன்னியர் ஒருவர் அவர்களின் வாரிசை மிஞ்சுவதாக முந்துவாரோ அல்லது மக்கள் செல்வாக்கைப் பெறுகிறார் என்று தோன்றுவாரோ.அப்போதே அவர் ஓரம் கட்டப்படுவார் அல்லது தூக்கிவீசப்படுவார்.அப்படி வீசப்பட்டவர்கள்தான் புரட்சியார்,போர்வாளார் எனப்போற்றப்பட்டவர்கள் எல்லாம்.இன்னும் எத்தனையோ லட்சியவாதிகள் எல்லாம் அப்படித்தான் கழட்டிவிடப்பட்டனர் என்பதை நாடறியும்.ஆனால் பாவம் நீ ஏன் அறியவில்லை.

நீ ஏதோ ஒன்றை எதிர் பார்த்துக் காத்திருந்திருப்பாயானால் அது இதுவாகத்தான் இருந்திருக்கும்.ஏனென்றால் என்றும் இவர்களிடம் பொதுவான எதிர்பார்ப்பு எல்லோர்க்கும் இது ஒன்றுதான் நிச்சயம்.பாவம் யாரை நீ முந்த நினைத்தாயோ.?நூறோடு நூற்று ஒன்றாக இருந்திருந்தால் நீயும் வேரோடு விழுதாக அவர்களுக்கு தாங்கலாகவே இருந்து காலத்தை ஓட்டியிருக்கலாமே.சரி விடு என்றிருந்தாலும் ஒருநாள் இது நிகழ்வது உறுதிதான்,அது இன்று நிகழ்ந்த்ததும் நல்லதுதான்.

இனிமேல்தான் உனக்கு நல்லநேரம் ஆரம்பம்.நல்லஇடமாகபார்த்துஉன்னை இணைத்துக்கொண்டு இனியாவது உனக்காக முடிந்தால் நாட்டுக்காகக் கொஞ்சம் பயனுள்ள வகையில் வாழ்வாயாக.

கொ.பெ.பி.அய்யா.



 
கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment