Wednesday 11 June 2014

மக்கள் தீர்ப்பு.கட்டுரை



மக்களை மதிக்கத் தெரியாதவர்கள்.

மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என மாமனிததர் புரட்சித்தலைவர் சொன்ன சத்திய வாக்கைப் புரிந்துகொள்ளாத புழுவினங்களுக்கு கடந்த தேர்தல் முடிவுகூட போதுமான அளவுக்குப் பாடம் புகட்டவில்லையோ என நாம் இன்னமும் அவர்களுக்காக வருத்தப்பட வேண்டியுள்ளது.பாவம் நாம்.
இந்தத் தேர்தல் அவர்களுக்கான பாடம் பல எழுதி வைத்துக்கொண்டுதான் அவர்களைத் தேடுகிறது.ஆனாலும் அதை கேட்கும் அளவிற்கு அவர்களின் மனம் வலுவில்லாமல் பலகீனப்பட்டுப் போயுள்ளது என்பதை அவர்களின் புலம்பல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.அதனால்தான் அவர்கள் எதை எங்கே தொலைத்தார்களோ அதை அங்கே தேடாமல் அடுத்தவன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் தேடி வீணாகப் பொழுதையும் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள் பாவம்.
“உன் வீட்டுத் தோட்டத்தில் வினையை விதைத்துவிட்டு அடுத்தவன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் எதை நீ அறுவடை செய்யப் போகிறாய்>”என மக்கள் பேசுவது அவர்கள் செவிகளில் ஒலிக்காமல் இல்லை.பாவம் செவிடர்கள் போல் நடிக்கவேண்டிய கட்டாயம்.எது எப்படிப்போனால் என்ன?யாரும் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கென்ன நட்டம் ஏற்பட்டுவிடப்போகிறது.நட்டம் அவர்களை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் தொண்டர்களுக்குத்தான்.இப்போது வடிவேலுவின் வசனம் ஒன்றும் நினைவுக்கு வருகிறதா?நினைத்துப் பாருங்கள் சிரிப்புத் தானாகவே வரும்.
எந்த முடிவையும் தங்களின் பாவமாக ஏற்றுக்கொள்ளக் கூடவே கூடாது என்பதே அவர்களின் சித்தாந்தம்.அப்படி ஏற்றுக்கொண்டால் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்ட நிலையாகி விடும் என்றும் அவர்களுக்கும் தெரியாதா என்ன?அவர்களின் ஒரே லட்சியம் கோடிகளின் கணக்குகளில் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளைக் காப்பாற்றியாக வேண்டுமானால் அவர்கள் செவிடர்களாக, ஊமைகளாக ஏதும் அறியாத அப்பாவிகளாக நடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.புலி வாலைப்பிடித்துக் கொண்டுள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஓடித்தான் ஆகவேண்டும்.அதையும் அவர்களின் வீரம் தீரம் என்றும் மக்களை நம்பும்படி செய்துதான் ஆகவேண்டும்.அதைத்தான் இப்போதும் அவர்கள் சாமர்த்தியமாகச்செய்து காட்டிக்கொண்டும் இருக்கிறாகள்.நம்பும் அப்பாவிகளும் பாவம் நம்பிக்கொண்டுதான் இருக்கறார்கள்.எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்குத்தான் இவர்களின் ஏமாற்றுவித்தைகளும் செல்லுபடியாகும்.பழைய வரலாறுகளை புரட்டிப்பாருங்கள்.பொய்யர்களின் முடிவுரைகள் பாடங்கள் படித்துக் காட்டும்.

மக்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களுக்கு காலத்தின் சத்தியமாக இந்தத் தேர்தல் ஒன்றை உணர்த்த உள்ளது,வாரிசு அரசியலை முடித்துவைக்கக் காத்துள்ளது.

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment