Thursday 12 June 2014

மழை நீர் சேகரிப்போம்.




மழை நீரை சேகரிப்போம்.

அம்மாசொல் கேட்டோமோ அய்யகோ!
சும்மாதான் விட்டோமோ 

அவசரம் அறிந்துதான் சொன்னாரே.
அகிலமும் உணர்ந்தது அம்மாசொல்-வாழ்த்தி
வீடெங்கும் நாடெங்கும் செய்யுவோம்

வீணாகும் நீரை தேனாக சேகரிப்போம்.

தண்ணீர் தண்ணீர் என தவிக்கும் காலமும்
தரணியில் வரும் கோலம்—அதை
எண்ணி எண்ணி இன்றே நாமும்
சேகரிப்போம் மழை நீரை.

நிலத்தடி நீர்மட்டம் முழத்தடி முன்னூறும்
இழுத்தடி கீழ்மட்டம் இறங்கியும் போனதும்
அலுத்துத்தான் சாகுது அம்மாடி நோகுது.
வெளுத்துத்தான் விவசாயம் வீணாகி வாடுது.

என்றோ ஒருநாள் கண்டால் திருநாள்
அந்தோ அதுவும் கடலுக்குப் போனால்
ஊருக்குப் பாவம் யாருக்கு லாபம்?
சேகரிப்போம் மழை நீரை.

ஒரு சொட்டு நீருக்கு உலகமே தேடுது.
பெருவெள்ளம் கூடியே கடலுக்கு ஓடுது.
ஒரு சொட்டு நீருக்கு உலகப்போர் ஆகலாம்
உணர்ந்திந்த அவசரம்  சேகரிப்போம் மழை நீரை.

தேங்கிய கடல்நீரை ஏங்கியே கரையில்
நோங்கியே நின்றாலும்—தனக்குள்
வாங்கிய நீரை தவிக்கும் உயிருக்கும்
தந்தாலும் பயன்படுமா?



கூரை நீரை பூமிக்குள் புதைப்போம்
பூமி நீரை கரைகட்டித் தடுப்போம்.
ஒவ்வொரு துளியும் உயிரெனக் காப்போம் 
ஔவ்வை மொழியென அம்மாவை மதிப்போம்.

தண்ணீர் தண்ணீர் என தவிக்கும் காலமும்
தரணியில் வரும் கோலம்—அதை
எண்ணி எண்ணி இன்றே நாமும்
சேகரிப்போம் மழை நீரை.


கொ..பெ.பி.அய்யா.


  


No comments:

Post a Comment