Saturday 14 June 2014

மக்கள் மனங்களில் அம்மா கட்டுரை








மக்கள் மனங்களில் அம்மா./தலை வணங்காத் தாய்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் மக்கள் மனங்களில் தனிச்சிறப்புடன் தனியொரு இடத்தில் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் போற்றிப் புகழ்ந்து கொண்டாடக்க்கூடிய உன்னத நமது காலத்து அரசியல் மாமனிதர்கள் என்று எடுத்துக்கொண்டால் தந்தை பெரியார்,அறிஞர்.அண்ணா பெருந்தலைவர் காமராஜர் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் அது மிகையாகாது.அந்த வரிசையில் இன்று அம்மா அவர்களும் தமிழ் நெஞ்சங்களில் இடம் பெற்றுள்ளார் என்றால் அவரின் தன்னலமற்ற அரசியல் வாழ்க்கை என்பதுதான் உண்மை.

முந்தைய தமிழக அரசியல் என்று வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கும்போது எவரெல்லாம் குடும்பங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களை தன் மக்களாக ஏற்றுக்கொண்டு அந்த மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அற்பணித்தார்களோ அவர்களே மக்கள் தலைவர்களாக மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றார்கள்.அவ்வாறே இன்று புரட்சித்தலைவியும் தமிழகம் போற்றும் தனிப்பெருந்தலைவியாக தமிழ் மக்கள் மனங்களில் தனி இடம் பெற்றுள்ளார்.

அரசியல் என்பதும் ஒரு துறவறம்தான்.அதுவும் ஒரு பற்றற்ற நிலைதான்.தனக்கென்றோ தன் உறவுக்கென்றோ தன் குடும்பத்திற்கென்றோ இல்லாமல் எவர் ஒருவர் தன் நாட்டு மக்களுக்காக அரசியல் வாழ்வை மேற்கொள்கிறாரோ அவரே மக்கள் நாயகராக பரிமளிககிறார்.அப்படித்தான் இன்று அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள் மக்களுக்காக என்று ஒரு முடிவை எடுக்கும்பொழுது அதனால் தனக்கென்ன நேரும் என்றும் எண்ணாமல் துணிச்சலாக மக்கள் பிரச்சனைகளை அணுகக்கூடிய தலைவராக விளங்குகிறார்.

முல்லைப் பெரியாறுப் பிரச்சனை மற்றும் காவிரிப் பிரச்சனை எதுவானாலும் அதை எதுவரை சென்று போராடிப்போராடி உரிமையை மீட்டெடுக்க முடியுமோ அதுவரை தளராது சென்றுசென்று வாதாடிவாதாடி நீதிமன்றங்கள் மூலமாகவும் மீட்டெடுக்கக் கூடிய நம்பிக்கையும் துணிவும் உள்ள ஒரு தலைவர் இன்று இந்தியாவில் உண்டும் என்றால் அந்த ஒரே தலைவி நம் புரட்சித்தலைவி அம்மாதான் என்றே தமிழராகிய நாம் பெருமையோடு மார்தட்டிக் கொள்ளலாம்.

அது போலவே ஈழத்ததமிழர் பிரச்சனையிலும் அதற்கு எதிரான அரசுதான் மத்தியில் ஆள்கிறது என்றே தெரிந்தாலும் எதற்கும் அஞ்சாமல் மாநில சட்டமன்றத்தில் தைரியமாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் நடுவண் அரசுக்கு எதிராகவும் இலங்கை அதிபர் ராசபச்சே போர்க்குற்றவாளிதான் என தீர்மானம் இயற்றும் துணிவும் வேறு எவருக்கு வரும்.இது ஒரு உலகத் தமிழரின் உரிமைக்கான ஓங்கிய குரலின் வரலாற்றுப்பதிவு ஆகும்..

ஈழத்தமிழர்மூவர் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தண்டனைக்குறைப்பு மற்றும் விடுதலை விவகாரங்களில் துணிச்சலாக ஒரூ தாயுள்ளத்தோடு சட்டமன்றத்தில் ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றும் வரை உச்சம் சென்று தமிழ் உணர்வோடு செயல்பட்ட நம் அம்மாவின் உயர்வேங்கே?அய்யோ அய்யோ இந்த தேர்தல் காலத்தில் அந்த மூவரும் விடுதலை என நீதிமன்றம் அறிவித்துவிட்டால் நமக்குத் தேர்தல் முடிவு பாதகமாக அமைந்துவிடுமே .அதனால் தீர்ப்பு  தள்ளிப்போகட்டும் எனகடவுளைவழிபட்டபகுத்தறிவாளர்களின்சுயநலம்எங்கே?என்ற நன்மை தீமை  ஆராய்ந்து பார்த்துத்தான் மக்கள் தீர்ப்பை சரியாக வழங்கியுள்ளார்கள்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகளைக் கூட அவர் நினைத்திருந்தால் நடுவண் அரசு அதிகாராம் பெற்றவர்களின் முன்னே பணிந்து நின்று நீக்கியிருக்க முடியும்.ஆனால் எவர் முன்னும் தலை வணங்கத் துணியாத அம்மா அவர்கள் சட்டப்படி தன்னைக்குற்றம் அற்றவராக நாட்டுக்கு மெய்ப்பிக்கவே அவர் நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.சர்க்காரியா வழக்கு எப்படிக்காணாமல் போனது என்று மக்களுக்குத் தெரியாதா என்ன?

தன்னைச்சுற்றி வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக நான் எதுவரையும் முயன்று எட்டிப் பறிப்பேன்.அதனால் எனக்கு என்ன நேர்ந்தாலும் அதுபற்றி எனக்குக் கவலைகள் இல்லை.என் மக்களின் சுபிட்சம் ஒன்றே என் குறிக்கோள்.அதுவே என் மூச்சு என வாழும் ஒரே தலைவி நம் அம்மாதான்.அம்மா என அன்போடு இன்று தமிழகம் உச்சரிக்கும் ஒரே தாரக மந்திரம் இதுதான்.இது என்றென்றும் நிரந்தரம்.

தொடர்ந்தும் தமிழ் மண்ணில் அம்மாவின் ஆட்சியே தொடர்ந்திருந்தால்.தமிழ் நாட்டில் மின்வெட்டு என்ற சொல்லே தென்பட்டிருக்காது.விலைவாசி உயர்வு விண்தொட்டிருக்காது.வறுமை எனும் சாபம் ஒழிக்கப்பட்டு வளமை எனும் தீபம் ஏற்றப்பட்டு பசுமை மிளிர்ந்திருக்கும்.நீரில்லை சோறில்லை எனும் கொடுமைகள் நீங்கி சுபம் பெற்றிருக்கும்.வன்மைகள் அங்கொன்றும் இங்கொன்றும் கூட இல்லாமல் மண்விட்டு மறைந்தே ஒழிந்தும் தொலைந்தே போயிருக்கும்.

ஆகவே நாம் இனிமேலாவது விழித்திருப்போம்.வில்லங்கம் இனி நிகழ்ந்துவிடாமல் தமிழகத்தைக் காத்திருப்போம்.நிசம் என்ன?பொய் என்ன ?என்பதை இப்போதாவது நாம் புரிந்துகொண்டோமே.அது போதும்.நல்லவேளை ஆண்டவன் செயலால் முழுமையாகப் பராகரியாவதற்குள் விழித்துக்கொண்டுவிட்டோம். உசாராக இருப்போம்.அம்மாவின் அற்பணிப்பு சேவைகளுக்குக் நாம் கரங்களாக உயர்ந்து உதவுவோம்.


வாழ்க அம்மா.வளர்க அம்மாவின் ஆட்சி.

என்றும் ஒலிக்கட்டும் எம்.ஜி.ஆர் எனும் இனிய நாமம்.

கொ..பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment