Sunday 4 May 2014

உழுதவன் பாடு.

உழுதவன் பாடு.

அந்த நாளை நினைக்கிறேன்.
இந்த நாளை வியக்கிறேன்.
சென்ற நாளைப் படிக்கிறேன்.
வந்த நாளைப் புரிகிறேன்

ஒருவர் ஊருக்கு முதலாளி--அந்த
ஒருவர் வாழவே தொழிலாளி.
உழைப்பைச் சுரணடிய பெரிச்சாளி--அது
ஒழிநததால் உயர்ந்தான் பாட்டாளி.

நாளும் உழைப்பான் உழைப்பாளி-வெறும்
நாழித் தானியக் கூலிக்கு.
காரி உமிழ்வான் முதலாளி---வெந்த
காய்ப்பு இல்லாக் கைகளில்.

கோவணம் உழவன் சீருடை-ஓலைக்
குடிசை அவனது சுகவாசம்.
வெயிலும் காற்றும் உறவாகும்--ஒழுகும்.
வேர்வைக் குளியல் அடையாளம்.

சோற்றுக்கு அழுவான் பிள்ளை-துணி
மாற்றுக்கு ஒளிவாள் மனைவி
அழுகை யதுவே மொழியாச்சு---அன்று
உழுதவன் பாடே இதுவாச்சு.

உழப்பை உறிஞ்சி உண்டோனோ---இன்று
பிழைப்பைத் தேடி ஓடுகிறான்.
காலச் சக்கரம் உருண்டது---பழமை
காடசியும் மாறிப் புரண்டது.

ஏழை நிலைமை எண்ணுகிறாள்--அம்மா 
காலைக் கதிராய் மின்னுகிறாள்.
ஊழைத் திருத்தி எழுதுகிறாள்--ஏழை 
தோளை உயர்த்தி நிறுத்துகிறாள்.

கனவுகள் எல்லாம் நினைவாக--உழவன்
நினைவுகள் எல்லாம் நிசமாக 
உழவுத் தொழிலே தலையாக--அம்மா 
உளமே இரட்டை இலையாக.  
  


கொ,பெ.பி.அய்யா.







No comments:

Post a Comment