Thursday 22 May 2014

நூற்றுக்கு நூறு. கட்டுரை

நூறு விழுக்காடும்(அஇஅதிமுக) நாமாவோம்.

உண்மைதான். திருச்செந்தூர் முத்துசாமி சரவணன்  கூறும் அதே கவலைதான் எனக்கும்.அறுபத்து ஏழில் மாபெரும் சக்தியான காங்கிரசை வீழ்த்த தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து கூட்டணி என்ற மாய சக்தியை உருவாக்கியதையும் அரசியல் புனிதத் துறவியான காமராஜரை தோற்கடித்த பாவத்தையும் அன்று தமிழகம்   செய்து தீர்த்தது என்பதையும் நாம் எண்ணித் துணிய மறந்துவிடக்கூடாது.தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளைப் பொறுத்த மட்டில் கொள்கை என்ற கோட்ப்பாடு மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது.இங்கு யாரும் பெருமை அடைந்து நல்லவர் வல்லவர் என்று பெயர் எடுத்துவிடக் கூடாது என்பதில்தான் இங்குள்ள அரசியல் கட்சிகள் சிந்தை கொண்டு அதை செயல் படுத்த எத்தனை கொடியவனான துரியோதனோ துட்சாதனோ எவனாக இருந்தாலும் அவனோடு கைகோர்த்து தர்மத்தை வீழ்த்த தயாராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இப்போது நம்முடைய ஓட்டுவங்கியின் கையிருப்பு நாற்பத்து நான்கு சதவிக்தம்தான்.எதிரிகளின் மொத்தத்தில் தனித்தனியே சிந்திக்கிடக்கும் மொத்தக் கூட்டல் ஐம்பத்தாறு சதவிகிதம் என்பதும் நாம் எழுதிப்பார்க்க வேண்டிய விடயம்.ஆகவே நாம் நம்மை எந்த வியூகத்திலும் வெல்ல முடியாத அல்லது எவரும் எதிர்க்கத் துணியாத  மகா சக்தியாக விஸ்வரூபம் எடுக்க வேண்டுமானால் நம் பலம் இன்னும் ஏழு விழுக்காடுகள் கூட்டப்பட வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்தி அதற்காக செயல்பட வேண்டும்.நம்மையும் அறியாமல் நம்மிடம் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா என்பதை நம்மை நாமே சுயபரிசோதனைகள் செய்துகொள்ள நாம் தயாராக வேண்டும்.அரசு நிர்வாகத்தில் ஊழல் என்பது ஒரு தீராத தொற்று நோயாக உள்ளது. அதை குணப்படுத்தினாலே 
மற்றெல்லாம் தானாகவே சரியாகிவிடும்.ஆகவே அதற்கான சரியான மருத்துவம் என்ன என்பதைத்தான் நாம் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
அதற்காக நாம் முனைப்போடு செயல்படுவோம்.நம்மை நாமும் சுய பரிசோதனை செய்து நம்மை நாமே புனிதமாக்கிக்கொள்ள துணிவோம்.கவனமாக இருப்போம்.கடமைகள் ஆற்றுவோம்.மக்களுக்காக வாழ்வோம்.காவலாக இருப்போம்.மக்களின் நன்மதிப்பை நூறு விழுக்காடும்
பெற்றிடவே உழைப்போம் உயர்வோம்.

மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் புரட்சித்தலைவரின் மந்திரச்சொல்லை உச்சரிப்போம்.உண்மையான சேவையை உறுதியேற்று செய்வோம்.மக்கள் நம்மை எண்ணி இதயத்தில் பூரணமாக ஏற்றுக்கொள்ள மக்களுக்காக உழைப்போம்.மக்கள் மனங்களில் நிறைவோம்.சமயம் பார்த்துக் காத்திருக்கும் சண்டாளர்களையும் மனமாற்றம் செய்ய சேவையாற்றுவோம்.நமக்கு இங்கு எவரும் நமக்கு எதிராக சிந்திக்கக்கூடிய எதிர் சிந்தனையாளர்கள் இல்லை எனச்செய்வோம்.ராம் ராஜ்ஜியம் காண்போம்.

நேற்றுவரை நாம் வெற்றிக்காக உழைத்தோம்.இனிமேல்தான் நாம் கவனமாக காய்களை நகர்த்த வேண்டும்.வெற்றி பெற்றது எவ்வளவு உழைப்போ அதைவிட அதிகமான உழைப்பு அவசியமாகிறது.கவனம்.
1 hr · Like · 1

நன்றி.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment