Friday 16 May 2014

புரட்சியின் விளக்கம்.



புரட்சியின் அர்த்தம் நீ!

வெற்றி பெற்ற அம்மாவே --உக்கு
சுற்றிப்போட வேண்டுமே.
எட்டுத் திக்கும் வென்றதே—அம்மா
இரட்டை இலை சின்னமே!

வெற்றிக்கனி கொண்டுமே-அம்மா 
சக்தியென சொல்லுமே!
அம்மா உந்தன் வெற்றியே-உது
ரிய சாதனை பற்றியே!

இம்மாநிலம் உய்யவே--நீ
இன்னும் வளம் செய்யவே!
அம்மா உன் உழைப்புக்கு—தமிழ்
அளித்த அங்கி காரமே!

மீண்டும் ஒரு சுதந்திரம்—உன்னால்
ஆண்டு நாடு பெற்றது.
கூண்டோடு தொலைந்தனர்—பொய்யர்
கோடழிந்து மறைந்தனர்.

தனித்து நின்று போராடி-அம்மா
தனி உரிமை மீட்டினாய்.
இனி உந்தன் சாதனையை—அம்மா
எவர் முறிக்கக் கூடுமோ!

மாநிலத்தின் கட்சி ஒன்று—பாரில்
தானிலை தனித்து நின்று
முன்வரிசை கொண்டமர்ந்து-மன்றில்
தன்பரிசை வென்ற தின்று.

பெண்ணாகப் பிறந்த தாயே—இன்று
உன்னிலை உயர்ந்தாயே
என்னென்ன சோதனைகள்!-தமிழ்
கண்ணொழுகும் வேதனைகள்.   

பொது நலமே அன்னையே—உன்
புகழ் வளமே வென்றதே.
சுயநலங்கள் கூடாரம்-இன்று
அயலாகி நின்றதே.

புரட்சி எனும் சொல்லுக்கே—அம்மா
அர்த்தமே நீதானே!
வரலாறும் தமிழுக்கு—அது
விரியும் உன் முன்னுரைக்கு.  

தமிழுக்குத் தலை நீ!—கர்வம்
தரணியில் உயர்த்தினாய்!
அரசுக்குக் கலை நீ!—அதை
அவணிக்குஉணர்த்தினாய்.

உன்னை விட்டு முடிவெடுக்க-இனி
தன்னை நாடு இழக்காது.
கண்ணை உன்னை இழந்துவிட்டு—நாடு
என்ன செய்யும் தனிமை பட்டு.

மந்திரமாய்  சக்தி நீ!—ஆட்சி
எந்திரமாய் யுக்தி நீ!
இந்தியாவின் மாதா நீ!-இந்திய
சிந்தனையே வாழி நீ!

கொ.பெ.பி.அய்யா.


https://www.blogger.com


No comments:

Post a Comment