Thursday 22 May 2014

நாங்க ரெடி நீங்க ரெடியா?

நாங்க ரெடி நீங்க ரெடியா?

நாங்க ரெடி நீங்க ரெடியா சொல்லுங்க
தூங்க மனமில்ல தூரமும் இல்லே
ஆங்குறதுக்குள் அது வந்துடும்போலே
அள்ளுவோம் இருநூத்தி முப்பத்து நாலே(நாங்க)

இரண்டு வருஷம் உருண்டுதானே
ஓடியும் போகும் நிமுசத்திலே
கரண்டுல மாட்டுன காக்காக் கூட்டம் 
கிரங்கிக் கிடக்குது பாவத்திலே
இருக்குது இன்னும் தெளியட்டும் கொஞ்சம்
அடிச்சுப் பாக்கலாம் நேரத்துலே (நாங்க)

கேட்கா தெல்லாம் கிடைக்கிறபோது
கேட்குற அவசியம் இருக்காது.
நெனைக்குற முன்னே அடைகிறபோது
நெஞ்சுல சுமையும் அழுத்தாது.
காக்குற அம்மா கடவுளா இருக்க
கருப்பனும் மாடனும் கறுப்புகள் எதுக்கு? (நாங்க)
      
வெளிநடப் புன்னுசொல்லி வீணாக்கூடி
வராண்டா நின்னு படிவாங்கிப் போற
பொறுப்பில்லா இவங்க பருப்பு ஏங்க
நெருப்புல கெடந்து அவிக்கணும் நாங்க.
ஏழைய நெனச்சு வேலையைப் பாக்குற
ஆளணும் அம்மா ஆண்டாண்டும் நீங்க! (நாங்க)

திருவரங்கத் தாயே திருவருள் தாயேன்
ஸ்ரீரங்க நாதன் ஒருமகள் நீயே
தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை ஒளியே
தரணியில் தர்மத்தின் தமிழ்கண்ட வழியே
கோட்டையின் அழகே கொடிமரப்புகழே
நாட்டாள இறையே வரமென்றான் உனையே!நாங்க)

கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvLs5dihAw7D1X9NTKbG7Bg0Cy3QxOS4H9RF5D58hIn8RqNpfCWVohyjs9OmMKnJBFqrpcZ1GMh01aq76TA7g0koGRNcFDFqikCKX4iR-X-NDIVE6Wrn4HXKmEJCI4nlM35PaOYJG3H67x/s1600/10401927_1476239849279216_8282357706895577770_n.jpg

No comments:

Post a Comment