Thursday 15 May 2014

வெற்றிச்சங்கம்.

வெற்றிச்சங்கம்.

சேலம் கோலம் போட்டுவிட்டது.--இனி]
மேலும் அப்படிதான் இனிக்கும்.
இரட்டை இலையோடு பறித்துவிட்டோம்
இனிக்கிறது சேலத்து மாம்பழம்


நாடு எங்கும் பச்சை இலைகள் 
வீடு எங்கும் இரட்டை இலைகள்
ஈடு உண்டோ எமக்கிங் கலைகள்
ஓடும் கூட்டம் தேடுது வளைகள்

நாற்பதும் நமக்கே நல்லுறவாகுது
தோற்பது மற்றவர்க் கல்லுறவாகுது
சேமம் வாழுது அண்ணா திமுக 
நாமம் போடுது புண்ணாக்குகள்

வெற்றிச்சங்கம் சுற்றி முழங்குது.
கொட்டும் முரசுகள் கொட்டிக்கிழியுது.
பற்றிச்சூரியன் எட்டி ஓடுது.
இரட்டை இலை மட்டும் எங்கும் தோணுது


வெற்றிச்சங்கம் அம்மாவுக்கு 
விழாக்கோலம் அம்மாவுக்கு.
கெட்டித் தனித்த துணிச்சலுக்கு 
முத்திய பரிசிது தமிழளிப்பு

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment