Monday 12 May 2014

வெற்றிக்கொடி.

வெற்றிக் கொடி!

வெற்றி வெற்றி என வெற்றிச்சங்கம் முழங்குது.
சுற்றி சுற்றி இரட்டை இலை கட்சிக்கொடி பறக்குது.
அண்ணாவின் திமுக மண்ணாள விளங்குது
அண்ணாவும் எம்ஜியாரும் அம்மான்னு சிறக்குது.

சேரமகள் வீரமாது சிங்கத்தாய் ஜெயலலிதா.
சீறும்வீரம் தீரமதை கொண்டவராய்  தங்கத்தாய்.
இமயம் வென்று கொடிநட்ட பாண்டியளோ
இன்றும் இந்தியா ஆளவந்த சோழமங்கையோ!

கையேந்தும் காலம் இனி இல்லை என்போம்.
கைவழங்கி வாழும் தனி எல்லை என்போம்.
மையம் என்ற அரசுநாமே உரிமை மீட்டுவோம்.
வையம் எம்ஜியாரவர்  பெருமை நாட்டுவோம்.

சூழ வரும் பகைமைகளை தூர ஓட்டுவோம்.
ஈழமதைத் தமிழ் நாடாய் வாகை சூட்டுவோம்.
வேழமேறி பவணி வரும் அம்மா போற்றுவோம்.
காலமினி நமதென்றே கொடியை ஏற்றுவோம்.

கொ.பெ.பி.அய்யா.கொ.பெ.பி.அய்யா. 

No comments:

Post a Comment