Saturday 17 May 2014

அம்மா அலை.

அம்மா அலை.

எந்த அலைதான் வந்தால் என்ன
இந்த இலைதான் எதிற்கும் அண்ணே  .
வந்த அலைதான் என்ன செய்யும்.
இந்த இரட்டை இலைதான் வெல்லும்..

அம்மா அலைதான் அதற்கும் மேலே
அடித்துப் போகும் சுனாமி போலே
எம்மா அலைதான் ஆட்டும் வாலை
எதையும் வெல்லும் அம்மா அலை.

இமயம் போலே எங்கள் அம்மா
எதிற்கும் வேகம் எல்லாம் சும்மா.
சமயம் எழுந்து சாதிக்க நின்னா
சுனாமி என்னா பிரளயம் என்னா?

சாதி சமயம் பேதங்கள் சொல்லி
வீதி சிவந்தால் வேட்டை அள்ளி
ஆதித் தமிழன் அலையெனத் துள்ளி  
அம்மா எழுவாள் அவனது கொள்ளி.  

தமிழ் எனச்சாதி கொண்டோம் இங்கே
திராவிட மதமே கண்டோம் இங்கே
சாதி மதங்கள் கடந்தோம் இங்கே.
நீதி அலைதான் வென்றது இங்கே.

வங்கக் கரையில் சிங்கங்கள் இரண்டு
தங்கத் தமிழுக்கு காவல் கொண்டு
பங்கம் செய்யும் அலைகளை வென்று.
தங்கும் அம்மா அலைமட்டும் ஒன்று.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment