Friday 23 May 2014

இனிமேல்தான் கவனம்!

 இனிமேல்தான் கவனம்!

நாம் மக்களின் வெற்றிக்காக உழைகிறோம்.மக்களின் வெற்றி என்றால் என்ன?மக்கள் சுயநல சுரண்டல்காரர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் விழிப்புடன் ஆரோக்யமான நிசமான சுதந்திரக் காற்றை சுவாசித்து உரிமை உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்ட பாதுகாப்பான வாழும் வாழ்க்கைதான் மக்களின் வெற்றி.அவ்வாறு மக்களுக்காக தேர்தல் களம் எனும் ஜனநாயக அரசியல் களத்தில் போராடி நாம் பெற்ற வெற்றிகளும் சாதாரணமாக எண்ணிவிடக் கூடிய வெற்றிகள் அல்ல .வரலாற்றின் சுவடுகளாக பதியப்பட்டுவிட்ட சிறப்புமிக்க வெற்றிகள்.இது நமக்குள் நாமே பெருமைபேசிக் கொள்ளக்கூடிய வழக்கமான வெற்றிகள் அல்ல.இதற்கு முன்பும் நாமோ அல்லது மாற்று அணியினரோ நாற்பதையும் கூட வென்றிருப்போம் அல்லது தமிழக சட்டமன்ற தொகுதிகள் இருநூற்று முப்பத்து மூன்றுவரை பற்றியிருப்போம்..ஆனால் அது ஒரு கூட்டமாக கூடி வென்ற ஒரு கூட்டணி வெற்றிதான்.அவையெல்லாம் தனித்துநின்று வென்றோம் என்று பெருமைப்படக் கூடியது அல்லதான். ஆனால் இப்போது நாம் ஈட்டி வரும் வெற்றிகள் நமது சொந்த வெற்றி.இதில் யாருடைய பங்களிப்பும் இல்லை.இது புரட்சித் தலைவர் அருளி அம்மா மீட்ட இரட்டை இலை சின்னத்தின் வெற்றி.தனித்து நின்று எதிர் அணியினரை சுத்தமாக துடைத்து அனுப்பிய ஒரு உலக சாதனை என்றால் அது மிகையாகாது.இப்பெருமை எல்லாம் நமது அம்மாவிற்கே சேரும்

இனிமேல்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்..உலகப்புழ் பெற்ற இச்சரித்திரப் பெருமையை அல்லது அம்மாவின் அரும்பெரும் சாதனையை எவ்வாறு கட்டிக்காப்பது என்று எண்ணும்போதுதான் நமக்குள் ஒரு பயம் நிறைந்த கவலை தோன்றுகிறது.அந்தப்பயமும் கவலையும் நம்முன்னுள்ள பொறுப்பின் சுமையை என்னென்றறிய உணர்த்துகிறது.நம்முடைய பலம் நாற்பத்து நான்கு புள்ளிகள் என்றால் நம்மை எதிர்க்கத் துணிந்தவர்களின் அதாவது பத்துப் பதினைந்து பேர்களின் மொத்தக் கூட்டுப்பலம் ஐம்பத்தாறு புள்ளிகள்.என்பதை நாம் கூட்டிக்கணிக்காமல் மெத்தனமாக இருந்துவிட முடியாது.அறுபத்து ஏழில் மொத்தமாகக் கூடி காமராஜரைக் கவிழ்த்துப் பாவம் செய்து தீர்த்த தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை பற்றி நாம் புரிந்து கொள்ளாமல் இல்லை.அதாவது தமிழ் நாட்டைப் பொருத்தமட்டில் கொள்கை கோட்பாடு என்ற மண்ணாங்கட்டி எல்லாம் எதுவும் கிடையாது.அதாவது தமிழ் நாட்டு அரசியல் என்ன தெரியுமா?மக்களுக்காக் யாரும் அரசியல் செய்தால் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஒவ்வாது.ஏனென்றால் அவர்கள் அப்படி அரசியல் செய்தால் இங்கே செழிப்பாக வாழ முடியாதே அதனால்தான். 
இந்தியா அளவில் ஜனநாயக அமைப்புள்ள கட்சிகள் அதாவது யாருக்கும் தனிஉடமை இல்லாத் அரசியல் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால்  பொது உடமைக் கொள்கை உடைய இடது சாரிக்ககட்சிகள் மற்றும்.தேசிய கட்சி பாரதிய ஜனதா மற்றும் அஇஅதிமுக போன்ற ஒன்றிரண்டு இயக்கங்கள் மட்டுமே மக்கள் இயக்கமாக மக்கள் ஏற்றுக்கொள்ளும் தலைமை முறை பின்பற்றக்கூடிய இயக்கங்களாக உள்ளன.இப்போதுதான் இந்த உண்மையும் நாட்டுமக்கள் புரிந்து குடும்ப உரிமைக் கட்சிகளை பூஜ்யமாக்கினார்கள் அல்லது ஓரம் கட்டினார்கள்.அதனால்தான் இத்தேர்தலை வர்லாற்றுச்சிறப்புமிக்கது என்று நாட்டுமக்கள் கூறுகிறார்கள்.ஆகவே தின்று கொழுத்த திருட்டாடுகள் ஒன்று சேர்ந்து கட்டுக்காவலை மீறவும் முயர்சிக்கத்தானே செய்யும்.கவனமாக இருந்து நாடு எனும் நந்தவனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குத்தானே இருக்கிறது..வெற்றி பெற்றது எவ்வளவு உழைப்போ அதைவிட அதிகமான உழைப்பு அவசியமாகிறது.அதைக் கட்டிக்காப்பதற்கு.ஆகவே இனிமேல்தான் கண்ணும் கருத்தும் கவனமும் அதிகம் தேவை.

நாம் இந்த நாட்டு ஓட்டுவங்கி இருப்பில் பாதிக்கும் மேலான தனிப்பெரும்பாண்மை பெறுவதற்கு இன்னும் ஏழு புள்ளிகள் தேவை என்ற கட்டாயத்தில் உள்ளோம்.ஆகவே இன்னமும் மக்களுக்காகப் பெரும்பாடுபட்டு அவர்களின் வாழ்வு நிலையை உயர்த்த வேண்டும்.நம்முடைய உழைப்பிலும் பொறுப்பிலும் நம் மீது இன்னும் கூடுதலான நம்பிக்கை வைக்கவேண்டும்.

நாட்டின் முழுமையான மின்சாரத் தேவையை நாம் பூர்த்தி செய்தாக வேண்டும்.மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும்.
கிராமங்களில் குடி நீர் தாராளமாக கிடைத்திட வகை செய்தல் வேண்டும்.கூட்டுக்குடி நீர் திட்டங்களின் செயல் முறையை கண்காணித்து சீராக செயல்படுத்த வழிவகைகள் செய்திட வேண்டும்.

கிராம இணைப்புச்சாலைகள் அமைக்கும் பனிகள் முழுமை அடையவேண்டும்.இணைக்கப்படாத கிராமங்களைக் கண்டறிந்து இணைக்க வேண்டும்.

பேரூந்துகள் இயக்கப்படக் கூடிய கிராமச்சாலைகள் கூட தூர்ந்தும் சாலைகளின் இருபுறங்களும் முள்மரங்கள் மூடியும் பேரூந்துகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கின்றன. மேலும் தேவையான பாலங்கள் கட்டப்படாமல் மழைக்காலங்களில் பேரூந்துகள் இயக்குவது நிறுத்தப்படுகின்றன.

மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளத்தால் சிக்கித்தவிக்கும் கிராமங்களை அடையாளம் கண்டு அவைகளின் இன்னலைப்போக்கவேண்டும்.

கிராமங்களை நகரங்களோடு பேரூந்து வசதிகள் மூலம் இணைக்கும் சேவையில் இன்னும் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.குறிப்பாக இன்னும் பெரும்பாலான கிராம மக்கள் காலை மாலை நேரங்களில் வேலை வாய்ப்புக்காகவோ அல்லது கல்வி கற்பதர்காகவோ அல்லது மருத்துவ வசதிக்காகவோ செல்லும் அவசரத்திற்கு தகுந்தாற்போல் பேரூந்து வசதி இல்லாமல் அல்லல்படுகிறார்கள் என்பதும் உண்மைதான்.இன்னமும் இரவு நேரங்களில் வீடு திரும்ப பேரூந்து வசதி இல்லாத கிராமங்கள் உள்ளன எனபதும் உண்மையே. அது மாத்திரம் அல்ல இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு பேரூந்து சுற்றுகளைக் கூட அதிகாரிகள் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள்.கேட்டால் உள்ளது உங்களுக்குப் போதும். என்று ஏளனம் பேசுகிறார்கள்.

இன்னமும் பெரும்பாலான கிராமங்களில் மகளீர் சுகாதார வளாகங்கள் செய்ல்படாமல்தான் மூடிக்கிடக்கின்றன.

நானும் ஒரு கிராம வாசிதான் என்பதால்தான் அனுபவித்துக்கூறுகின்றேன்.
என்னுடைய கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொல்லமபரம்பு எனும் கிராமம்.என்னுடைய கிராமத்தில் நான் மேலே கூறியுள்ள அத்தனை குறைபாடுகளும் உள்ளன.அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகத்தான் வீண் முயர்சியாகிவிட்டன.
ஆகவே இப்படிப்பட்ட பொதுவான குறைகளைக் களைய வேண்டியது அவசியமாகும் போது அதற்கான சிறப்புப் படைகள் அமைத்து உண்மை நிலையை ஆராய்ந்து சீர்படுத்த வேண்டும்.இதற்கான பணிகளுக்கு பட்டதாரி இளைஞர்களைப் பயன்படுத்தலாம்.

நாம் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்குமுன் இக்குறைகளை சரிசெய்ய அம்மாவை வேண்டுவோம்.அனைத்தையும் வெல்வோம்.
நன்றி
கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment