Wednesday 14 May 2014

வெற்றித் திருமகள்.

ஒத்தைக்கு ஒத்தை.

ஒத்தைக்கு ஒத்தையா ஒன்னோட சக்தியா
கத்தியும் இல்லாம புத்தியை நம்புயா!
ஒண்டிக்கு ஒண்டியா போட்டிக்கு வாரியா?
ஒண்ணுக்கு ஒண்ணாக பலமென்ன பாருயா!

பத்துப்பேரு கூட்டமா மொத்தமா சேந்துட்டா
ஒத்தையா ஒருவர ஒண்ணுகூடி அடிச்சிட்டா
கெட்டியின்னு சொல்லியும் வெக்கங்கெட்டு திரிவயா/
பொட்டச்சி காரித்துப்பி பொட்டையின்னும் சிரிப்பாளே

நேருக்கு நேராநின்னு நெசமான பலம் காட்டு!
ஊருக்கு மேலாஉன்ன உலகுக்குக்கு எடுத்துக்காட்டு!
யாருநாங்க தெரியுமா எம்ஜியாராளு புரியுதா?
பேரதக் கேட்டாலே போர்க்களமே அதிருதா?

ஒத்தையின்னு நெனச்சயா பத்துக்கோடி சக்திய்யா.
இத்தரையில் எங்களம்மா இமயமலை உச்சிய்யா!
வேலெடுத்து வீரம்பேசி வெத்தாள மெரட்டுறது
கோழையின்னு சொல்லாம வேறென்ன சொல்லுறது?

புறம்பாடி பொம்பளையா பொய்பேசி பொட்டச்சியா
குறங்கூவி சிண்டுமூட்டி குளிர்காய நெனச்சியின்னா
தரம் பாக்க அஞ்சித்தான சகுனி வேசம் ஆடுற !
உரமுள்ள ஆம்பளையின்னா துணையாரு தேடுற !

வீர நாச்சி பொம்பளதான் வீரமுன்னா நேரவா!
போருக்கும் அஞ்சாதவர் யாருன்னா கேக்குற?
தர்மத்தின் தாயவர் கர்மத்தின் அம்மாதான்.
புரட்சியாரின் பாசறையில் போர்முறையும் கற்றவர்தான்.  

உண்மைக்கு உயிர்கொடுப்பார் நன்மைக்கு குரல்கொடுப்பார்..
திண்மைக்கு விளைவோரை திண்மையில் தான்முடிப்பாள்.
எண்ணிக்கை காட்டி நீ என்னதான் எதிர்த்தாலும்
மண்ணை நீகவ்வுமுன் பின்னாலே ஓடிவிடு!

கத்திக்கத்தி கூவிவிட்டால் வித்தைகற்ற வாத்தியாரா?
சுத்திசுத்தி கூடிவிட்டால் கண்டுசிங்கம் பயந்திடுமா
வெத்துக் கூச்சல் செய்யாமல் வீரமாய் விளைந்திருப்போம்.
சத்தியத்தின் வடிவமவர் நித்தியத்தின் வாழும் ஜெயம்.


கொ.பெ.பி.அய்யா..


No comments:

Post a Comment