Monday 5 May 2014

வாலி எம்ஜிஆர்.












வாலி  எம்ஜியார் புகழ் வா!

வாலிஎம்ஜியார் மரணமோ!
காலனும் துணிவானோ!
தமிழுக்கும் சாவோ!
அமிழ்துக்கும் இறப்போ!

கங்கையும் நிற்குமோ!!
தென்றலும் அடங்குமோ!
வாலியின் வரிகளும்
காலத்தால் மறையுமோ!

எவன் சொன்னான்
இலக்கியம் செத்ததென்று!
இது ஒரு அமர ஓய்வு!
இமயத்திற்கேதடா சாவு!

எழுதியலுத்த இதயம்
இளைப்பாரட்டும்
தமிழ்ன்னை மடியில்
கமழட்டும் அவன் புகழ்!

எம்.ஜி.ஆரும் வாலியும்
இரட்டை அம்சங்கள்!1
மரணம் இவர்க்கில்லை!
வரமும் அப்படித்தான்.

காற்றுக்கு அடைவில்லை!
கவிதைக்கு முடிவில்லை!
இயற்கைக்கு இறுதியில்லை!
இறைவனுக்கும் அறுதியில்லை!

படைப்பாளிக்கேது மரணம்?
கிடைப்பான் ஒரு  தாயால்!
விடையோ களைத்த உடல்!
கொடையோ கவிதைக் கடல்!

ஆழியும் உள்ளவரை
அலையங்கு ஓயும்வரை
ஊழியே நேர்ந்தாலும்
வாலி எம்ஜியார் புகழ் வாழி!

கொ.பெ.பி.அய்யா.







No comments:

Post a Comment