Tuesday 20 May 2014

நீதான் அம்மா.

அம்மா அம்மா

அம்மா! அம்மா! நீதான் அம்மா
அன்னபூரணி அம்மா! அம்மா!
அம்மா உணவகம் அட்சயபாத்திரம்
அருளிய அம்மா நீதான் அம்மா.!

கூலிக்கு உழைக்கும் ஏழையின் வயிறு
வேளைக்கு உணவு நிறம்பிடும் பரிவு
யாருக்கு விளங்கும் பாமரன் துயரு
பாருக்கும் சொன்னாள் ஊருடன் பழகு.

ஆலயம் தோறும் அன்னதானம்.
ஆற்றும் பசியை அம்மா ஞானம்
ஊழையும் வென்ற உன்னதம் காணும்
ஏழைக்கு ஏது நாளைய கவனம்.

அம்மா!சோறு எனும் குரல் இல்லை.
ஆரும் ஏந்தும் அவலம் இல்லை.
பிச்சை என்றொரு பேச்சிங்கு இல்லை.
பிள்ளைச் சோறும் கேட்பாரில்லை.

வறுமை என்றொரு கொடுமை இல்லை.
வயது முதிர்ந்தும் சிறுமை இல்லை.
அருமை குறைந்தொரு அநாதி இல்லை.  
பெருமை சிதைந்தொரு நிலைமை இல்லை.

ஏழை என்றொரு சொல்லிருந்தாலும்
ஏழ்மை என்றிங்கு துயரம் இல்லை..
அம்மா என்றொரு முத்திரை பதிப்பில்
அனைத்தும் கிடைக்கும் மலிவது விலையில்.

உயர்நிலை மருத்துவம் விலையில்லாமல்
உனது அம்மா அரசது உரிமையில்.
எதுவும் எட்டாத் தூரமும் இல்லை.
எல்லாம் எல்லார்க்கும் என்பதே எல்லை.


கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment