Wednesday 16 April 2014

இரட்டை இலைகள்

இரட்டை இலை.

இரட்டை இலை அது பச்சை இலை.
வெற்றி என்பதன் மச்ச இலை.
அம்மா உயர்த்தும் வலக்கரத்தில்
அழகாய் துளிர்த்த புரட்சி இலை.
(இரட்டை இலை)

குழந்தைகள் பசியை தீர்த்த இலை.
குடிசைக்கு ஒளியை கொடுத்த இலை.
கல்விச் சாலைகள் நிறைத்த இலை.
கல்வியில் முழுமை கண்ட இலை.
(இரட்டை இலை)

ஏழைக்குத் தாலி வழங்கும் இலை.
வேலைக்கும் தேடி முழங்கும் இலை.
தேவைகள் அறியத் தேடும் இலை.
சேவைகள் புரிய ஓடும் இலை.
(இரட்டை இலை)

முதியோர் கவலை முறித்த இலை.
முதுமை மறக்கச் செய்த இலை.
பாசம் காட்டும் நேச இலை.
வாசம் கூட்டும் வள்ளல் இலை.
(இரட்டை இலை)

சுயமாய் பெண்களை நிமிர்த்த இலை.
நயமாய் வாழ்ந்திடச் செய்த இலை.
பயமின்றி தமிழகம் காத்த இலை;
தயவுடன் தாய்மனம் கொண்ட இலை.
(இரட்டை இலை)

இருளை விரட்டி ஒளிரும் இலை
திருடரை அகற்றி மிளிரும் இலை.
அருளை நிறைத்து அமைந்த இலை’
திருவை உயர்த்தி தேர்ந்த இலை.
(இரட்டை இலை)


அனாதைச் சொல் அழித்த இலை
அபலைகள் வாழ்வு காத்த இலை.
தொட்டில் திட்டம் தொடரும் இலை
பட்டி தொட்டி படரும் இலை.

(இரட்டை இலை)

கிராம ராஜ்ஜியம் அமைத்த இலை.
கிராமச் சாலைகள் இணைத்த இலை
சிரமங்கள் ஒழித்த அருமை இலை
கிராமங்கள் தழைத்த பெருமை இலை.
(இரட்டை இலை)



கொ.பெ.பி.அய்யா,

No comments:

Post a Comment