Sunday 27 April 2014

நானும் அவர்போலே.

நானும் அவர் போலே!

என்னுறவே என்னுயிரே
எண்ணுவதும் உன்னலமே!
தமிழினமே தாய் மனமே!—இந்த
தாயும் நான் உனக்காக.

நாதி என்று சொல்லிக்கொள்ள
சாதி இந்தத் தமிழ்தானே!
மீதி என்ன வேறெனக்கு?—தமிழே
போதும் உந்தன் அரவணைப்பு.

சந்தியா ஜெயராமன்
தந்த மகள் ஜெயலலிதா
இந்தியா என்றாலும்—எந்தன்
தமிழ்தானே எனையாளும்.

தமிழ்தானே தாயெனக்கு
தாய்தானே நானுனக்கு.
வேறென்ன உறவிருக்கு?-வேறு
யாரென்ன துணையிருக்கு?

தாய் தந்த தமிழ் பாலே
சேய் எந்தன் உயிர் நாளே!
வாழ்வதும் நான் யார்க்காக?—என்
வாரிசான உனக்காக.

தந்தை வழி தமிழ்வழியே!
எந்தன் வழி அவ்வழியே!
சிந்தை எல்லாம் நீதானே—எனது
சிறப்பு எல்லாம் நீதானே!

என்னுடைய சொத்தே நீ!
என்னுடைய சுகமே நீ!
தமிழே என் சந்ததியே!-தமிழ்
தாய் மடியே தானெனக்கே!


எனக்குத் தலைவர் எம்ஜியார்
எதை எடுத்துப் போனாரோ!
தனது சொந்தம் தமிழென்றார்.-அது
எனது சொந்தம் தானன்றோ!

கொ.பெ.பி.அய்யா.


http://aiadmkpaadalkal.blogspot.in

No comments:

Post a Comment