Saturday 19 April 2014

யாருக்காக அம்மா

யாருக்காக அம்மா?

அம்மா அக்கா தங்கச்சியே
ஓட்டுப் போடுங்க.
அய்யா அண்ணே தம்பிகளே
ஓட்டுப் போடுங்க.
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

அஞ்சு வருடம் கழித்துத்தானே
தேர்தல் வருகுது.
கொஞ்சம் நாமும் யோசிச்சாத்தான்
தெளிவு புரியுது.
ஓட்டுப் போட போகுமுன்னே
வீட்டப் பாருங்க.
நாட்டுக்கான நல்லவங்க
நினைச்சுப் பாருங்க.
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

என்ன என்ன தேவைகளோ
எல்லாம் தந்தாங்க.
இன்னும் என்ன வேணுங்களோ
எண்ணிச் செய்வாங்க.
யாருக்கென்ன தேவையின்னு
யோசிக் காங்கம்மா.
உசுருக்கென்ன வேணுமுன்னு
உணரு ராங்கம்மா.
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

யாரை நம்பி அம்மா இங்கே
வாழு றாங்களோ!
யாருக்காக அம்மா இங்கே
யோசிக் காங்களோ!
வேறு யாரு அம்மாவுக்கு
உறவு சொல்லுங்கோ!.
நேரே நாதி அம்மாவுக்கு
நீங்கதானுங்கோ!
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

அம்மாவோட உசுரு எல்லாம்
அதுவும் நீங்கதான்.
அம்மாவோட உடமையெல்லாம்
அதுவும் நீங்கதான்.
யாருக்காக சேர்த்து வச்சு
கொடுக்கப் போறாங்க.
ஊருக்காக உழைக்கத்தான
ஒட்டுக் கேக்காங்க.
உங்கள் சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.
நமது சின்னம் இரட்டை இலை
ஓட்டுப் போடுங்க.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment