Monday 21 April 2014

ஸ்ரீரங்கத்தாயே.

ஸ்ரீரங்கத் தாயே!

கோமள வள்ளி குழந்தைகள் செல்வி.
பாமரர் வாழ்வில் பழகிடும் கல்வி.
சேமத்தின் பொருளே ஸ்ரீரங்கத் தாயே!
கோபுரப் புகழே கொடைவள்ளல் வாழ்க!

அன்னை தெரேசா அவள் திருவடிவம்
அம்மா மனசே அவளருள் படிவம்.
அனாதை என்றே எவரிங்கு இருப்பார்
அரசின் தொட்டில் உறவங்கு சிறப்பார்.
அன்னை தெரேசா அவள் திருவடிவம்
அம்மா மனசே அவளருள் படிவம்.

பசியென்ற சொல்லே பழக்கத்தில் இல்லை.
விதியென்ற தொல்லை வறுமையும் இல்லை.
தொடர்ந்தும் அம்மா ஆட்சியும் தொடர்ந்தால்
படர்ந்தும் திட்டம் போட்டதும் நிறைந்தால்
பசியென்ற சொல்லே பழக்கத்தில் இல்லை.
விதியென்ற தொல்லை வறுமையும் இல்லை.

மாறி மாறி ஆண்டு மாறியாய்.
ஆட்சி மாற்றம் ஆட்டம் முடிந்தது.
தேறும் தூரம் தூர்ந்தும் தீர்ந்தும்
வீழ்ச்சி நேரவும் வீழ்ந்தும் தேர்ந்தது.!
மாறி மாறி ஆண்டு மாறியாய்.
ஆட்சி மாற்றம் ஆட்டம் முடிந்தது.

கட்டும் தமிழகம் கட்டி நிறையுங்கள்`
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுங்கள்.
அம்மா கரங்களில் நம்பிக் கொடுங்கள்.
நம்மா நிலம்பார் செம்மா நிலாமாம்    
கட்டும் தமிழகம் கட்டி நிறையுங்கள்`
முட்டும் முரண்களை கொட்டி விரட்டுங்கள்

கொ.பி.அய்யா.


No comments:

Post a Comment